Sunday, December 28, 2008

தியாகராஜ கிருதி - ராம பாஹி - ராகம் காபி - Rama Paahi - Raga Kaapi

பல்லவி
ராம பாஹி மேக4 ஸ்1யாம பாஹி கு3
தா4ம மாம் பாஹி ஓ ராம

சரணம்
சரணம் 1
மூடு3 லோகமுலலோ ஈடு3 லேத3னி நின்னு
வேடு3கொண்டினி நேனு ஓ ராம (ரா)

சரணம் 2
லோகுல நெர நம்முகோகனே நீகே
லோகுவ நேனைதினி ஓ ராம (ரா)

சரணம் 3
ஏ வேள நாபாலி தே3வாதி3 தே3வுடு3
நீவேயனுகொண்டினி ஓ ராம (ரா)

சரணம் 4
அன்னி கல்லலனி நின்னே நிஜமனு-
கொன்னவாட3னைதினி ஓ ராம (ரா)

சரணம் 5
தலசினந்தனே மேனு புலகரிஞ்சக3 நீபை
வலசி நீவாட3னைதினி ஓ ராம (ரா)

சரணம் 6
து3ர்ஜன க3ணமுல வர்ஜிஞ்சுடகு நாம
3ர்ஜன க3தியண்டினி ஓ ராம (ரா)

சரணம் 7
மனஸுன நித்ய நூதனமைன சக்கனி
தனமுனு கனுகொண்டினி ஓ ராம (ரா)

சரணம் 8
அவனி ஸுதா த4வ ப4வமுன1யெவ்வரி-
கெவரு லேத3னு
கொண்டினி ஓ ராம (ரா)

சரணம் 9
மஞ்சி க்ரு2த்யமுலு நீகஞ்சு இச்சிதினா
பஞ்ச பூ4தமு ஸாக்ஷிகா3 ஓ ராம (ரா)

சரணம் 10
வனஜ நயன நா வசனமுலெல்ல ஸத்ய-
மனுசு ஆலகிஞ்சுமீ ஓ ராம (ரா)

சரணம் 11
இகனைன 21ங்கர ஸக2 ப்3ரஹ்மானந்த3
ஸுக2 ஸாக3ர ப்3ரோவுமீ ஓ ராம (ரா)

சரணம் 12
3ஆ-ஜானு பா3 ஸரோஜானன த்யாக3-
ராஜ ஸன்னுத சரித ஓ ராம (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! முகில்வண்ணா! பண்புகளின் உறைவிடமே! புவிமகள் கேள்வா! கமலக்கண்ணா! சங்கரனின் நண்பனே! பேரின்ப சுகக் கடலே! முழந்தாள் நீளக் கைகளோனே! கமலவதனனே! தியாகராசனால் சிறக்க போற்றப்பெற்ற சரித்தோனே!

  • என்னைக் காப்பாய்

  • மூவுலகிலும் (உனக்கு) ஈடில்லையென உன்னை வேண்டிக்கொண்டேன் நான்;

  • உலகோரை மிக்கு நம்பாது, உனக்கே பணிந்தவன் நானாகினேன்;

  • எவ்வமயமும், என்னைச் சேர்ந்த, தேவாதி தேவன் நீயேயெனக்கொண்டேன்;

  • யாவும் பொய்யென, உன்னையே மெய்யெனக் கொண்டவனாகினேன்;

  • நினைத்தளவிலேயே, உடல் புல்லரிக்க, உன்னைக் காதலித்து, உன்னவனாகினேன்;

  • தீயோர் கும்பலினை விலக்க, (உனது) பெயரின் உறுமலே கதியென்றேன்;

  • மனதில் தினமும் புதியதொரு இனிய தன்மையைக் கண்டுகொண்டேன்;

  • இப்பிறவிக் கடலில் எவருக்கும் எவருமிலரெனக்கொண்டேன்;

  • நற்செயல்களை உனக்கென அளித்தேன், அந்த ஐம்பூதங்கள் சாட்சியாக;

  • எனதுரைகளையெல்லாம் மெய்யெனக் கருதுவாயாக;

  • இனியாவது (என்னைக்) காப்பாயாக.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ பாஹி/ மேக4/ ஸ்1யாம/ பாஹி/ கு3ண/
இராமா/ காப்பாய்/ முகில்/ கருநீல (வண்ணா)/ காப்பாய்/ பண்புகளின்/

தா4ம/ மாம்/ பாஹி/ ஓ ராம/
உறைவிடமே/ என்னை/ காப்பாய்/ ஓ இராமா/


சரணம்
சரணம் 1
மூடு3/ லோகமுலலோ/ ஈடு3/ லேது3/-அனி/ நின்னு/
மூன்று /உலகிலும் (உனக்கு) ஈடு/ இல்லை/ என/ உன்னை

வேடு3கொண்டினி/ நேனு/ ஓ ராம/ (ரா)
வேண்டிக்கொண்டேன்/ நான்/ ஓ இராமா/


சரணம் 2
லோகுல/ நெர/ நம்முகோகனே/ நீகே/
உலகோரை/ மிக்கு/ நம்பாது/ உனக்கே/

லோகுவ/ நேனு/-ஐதினி/ ஓ ராம/ (ரா)
பணிந்தவன்/ நான்/ ஆகினேன்/ ஓ இராமா/


சரணம் 3
ஏ வேள/ நா-பாலி/ தே3வ-ஆதி3/ தே3வுடு3/
எவ்வமயமும்/ என்னைச் சேர்ந்த/ தேவாதி/ தேவன்/

நீவே/-அனுகொண்டினி/ ஓ ராம/ (ரா)
நீயே/ எனக்கொண்டேன்/ ஓ இராமா/


சரணம் 4
அன்னி/ கல்லலு/-அனி/ நின்னே/ நிஜமு/-
யாவும்/ பொய்/ என/ உன்னையே/ மெய்/

அனுகொன்ன-வாட3னு/-ஐதினி/ ஓ ராம/ (ரா)
எனக்கொண்டவன்/ ஆகினேன்/ ஓ இராமா/


சரணம் 5
தலசின/-அந்தனே/ மேனு/ புலகரிஞ்சக3/ நீபை/
நினைத்த/ அளவிலேயே/ உடல்/ புல்லரிக்க/ உன்னை/

வலசி/ நீவாட3னு/-ஐதினி/ ஓ ராம/ (ரா)
காதலித்து/ உன்னவன்/ ஆகினேன்/ ஓ இராமா/


சரணம் 6
து3ர்ஜன/ க3ணமுல/ வர்ஜிஞ்சுடகு/ நாம/
தீயோர்/ கும்பலினை/ விலக்க/ (உனது) பெயரின்/

3ர்ஜன/ க3தி/-அண்டினி/ ஓ ராம/ (ரா)
உறுமலே/ கதி/ யென்றேன்/ ஓ இராமா/


சரணம் 7
மனஸுன/ நித்ய/ நூதனமைன/ சக்கனி/
மனதில்/ தினமும்/ புதியதொரு/ இனிய/

தனமுனு/ கனுகொண்டினி/ ஓ ராம/ (ரா)
தன்மையை/ கண்டுகொண்டேன்/ ஓ இராமா/


சரணம் 8
அவனி/ ஸுதா/ த4வ/ ப4வமுன/-எவ்வரிகி/-
புவி/ மகள்/ கேள்வா/ பிறவிக் கடலில்/ எவருக்கும்/

எவரு/ லேது3/-அனுகொண்டினி/ ஓ ராம/ (ரா)
எவரும்/ இலர்/ எனக்கொண்டேன்/ ஓ இராமா/


சரணம் 9
மஞ்சி/ க்ரு2த்யமுலு/ நீகு/-அஞ்சு/ இச்சிதினி/-ஆ/
நற்/ செயல்களை/ உனக்கு/ என/ அளித்தேன்/ அந்த/

பஞ்ச/ பூ4தமு/ ஸாக்ஷிகா3/ ஓ ராம/ (ரா)
ஐந்து/ பூதங்கள்/ சாட்சியாக/ ஓ இராமா/


சரணம் 10
வனஜ/ நயன/ நா/ வசனமுலு/-எல்ல/ ஸத்யமு/-
கமல/ கண்ணா/ எனது/ உரைகளை/ யெல்லாம்/ மெய்/

அனுசு/ ஆலகிஞ்சுமீ/ ஓ ராம/ (ரா)
என/ கருதுவாயாக/ ஓ இராமா/


சரணம் 11
இகனைன/ ஸ1ங்கர/ ஸக2/ ப்3ரஹ்மானந்த3/
இனியாவது/ சங்கரனின்/ நண்பனே/ பேரின்ப/

ஸுக2/ ஸாக3ர/ ப்3ரோவுமீ/ ஓ ராம/ (ரா)
சுக/ கடலே/ (என்னைக்) காப்பாயாக/ ஓ இராமா/


சரணம் 12
ஆ-ஜானு/ பா3ஹ/ ஸரோஜ/-ஆனன/ த்யாக3ராஜ/
முழந்தாள் நீள/ கைகளோனே/ கமல/ வதனனே/ தியாகராசனால்/

ஸன்னுத/ சரித/ ஓ ராம/ (ரா)
சிறக்க போற்றப்பெற்ற/ சரித்தோனே/ ஓ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 1ங்கர ஸக2 - ஸ1ங்கர ஸு1க : இவ்விடத்தில் 'ஸ1ங்கர ஸு1க' பொருந்தாது.

3 - ஆ-ஜானு பா3- ஆ-ஜானு பா3ஹு : இவ்விடத்தில் 'ஆ-ஜானு பா3ஹு' பொருந்தாது
Top
மேற்கோள்கள்

விளக்கம்
1 - எவ்வரிகெவரு லேது3 - எவருக்கும் எவருமிலர் - தியாகராஜர் இங்கு உபநிடதித்தின் சொற்களை சுட்டுகின்றார் என்று தெரிகின்றது - யாக்3ஞவல்க்ய முனிவர் தன் மனைவி மைத்ரேயிக்குக் கூறும் மெய்நெறிச் சொற்கள் - "கணவனுக்காக அவன் நேசிக்கப்படுவதில்லை, தனக்காகவே அவன் நேசிக்கப்படுகின்றான்; மனைவிக்காக அவள் நேசிக்கப்படுவதில்லை, தனக்காகவே அவள் நேசிக்கப்படுகின்றாள்; மக்களுக்காக அவர்கள் நேசிக்கப்டுவதில்லை, தனக்காகவே அவர்கள் நேசிக்கப்படுகின்றார்கள்; செல்வத்திற்காக அது விரும்பப்படுவதில்லை, தனக்காகவே அது விரும்பப்படுகின்றது." ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம் - II.iv.5. (ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

தேவாதி தேவன் - வானோர் ஆகியோருக்கும் தலைவன்
Top


Updated on 28 Dec 2008

No comments: