Friday, January 2, 2009

தியாகராஜ கிருதி - ம்ரு2து3 பா4ஷண - ராகம் மாருவ த4ன்யாஸி - Mrudu Bhaashana - Raga Maaruva Dhanyaasi

பல்லவி
ம்ரு2து3 பா4ஷண நத விபீ4ஷண

அனுபல்லவி
ஸு-து3ராஸ மான்பக3 லேனி நனு
ஸுக2 சித்துக3னெவரு 1ஸேதுரே (ம்ரு2)

சரணம்
வர தா3னவாம்பு33 ஸமீரண
வரதா3னகா4மர பாலக
23ர ஹாஸ ஸத்3கு3ண பூ4
பராத்பர த்யாக3ராஜ கரார்சித (ம்ரு2)


பொருள் - சுருக்கம்
மென்மையாகப் பகர்வோனே! விபீடணனால் தொழப்பெற்றோனே! அரக்கரெனும் முகிலைக் கலைக்கும் பெரும் புயலே! வரதா! பாவமற்றோனே! வானோரைக் காப்போனே!
புன்னகையோனே! நற்குணங்களை யணிவோனே! பராபரனே! தியாகராசனின் கைகளால் தொழப்பெற்றோனே!

தீய ஆசைகளைத் துறக்காத என்னை அமைதியான உள்ளத்தோனாக எவராக்குவரே?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ம்ரு2து3/ பா4ஷண/ நத/ விபீ4ஷண/
மென்மையாக/ பகர்வோனே/ தொழப்பெற்றோனே/ விபீடணனால்/


அனுபல்லவி
ஸு-து3ராஸ/ மான்பக3 லேனி/ நனு/
தீய ஆசைகளை/ துறக்காத/ என்னை/

ஸுக2/ சித்துக3னு/-எவரு/ ஸேதுரே/ (ம்ரு2)
அமைதியான/ உள்ளத்தோனாக/ எவர்/ ஆக்குவரே?


சரணம்
வர தா3னவ-அம்பு33 ஸமீரண
அரக்கரெனும் முகிலைக் கலைக்கும் பெரும் புயலே!

வரத3/-அனக4/-அமர/ பாலக/
வரதா/ பாவமற்றோனே/ வானோரை/ காப்போனே/

3ர ஹாஸ/ ஸத்3கு3ண/ பூ4ஷ/
புன்னகையோனே/ நற்குணங்களை/ யணிவோனே/

பராத்பர/ த்யாக3ராஜ/ கர/-அர்சித/ (ம்ரு2)
பராபரனே/ தியாகராசனின்/ கைகளால்/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸேதுரே - ஸேதுரா - (எவர்) ஆக்குவரே - அனுபல்லவியின் சொற்கள் வியப்பினைத் தெரிவிப்பதாக உள்ளமையால் 'ஸேதுரே' பொருந்தும்.

2 - 3ர ஹாஸ - த4ர ஹாஸ - இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'புன்னகை' என்று பொருளாகையால் 'த3ர ஹாஸ' பொருந்தும்.

மேற்கோள்கள்

விளக்கம்
எவராக்குவரே - உன்னையன்றி எவராக்குவரே
Top


Updated on 03 Jan 2009

No comments: