Saturday, December 27, 2008

மீவல்ல கு3ண தோ3ஷமேமி - ராகம் காபி - Meevalla Guna Doshamemi - Raga Kapi

பல்லவி
மீவல்ல கு3ண தோ3ஷமேமி ஸ்ரீ ராம

அனுபல்லவி
நாவல்லனே கானி நளின த3ள நயன (மீ)

சரணம்
சரணம் 1
3ங்கா3ரு பா3கு33 பதி3வன்னெ கா3குண்டே
அங்க3லார்சுசு 13த்துனாடு3கோனேல (மீ)

சரணம் 2
தன தனய ப்ரஸவ வேத3னகோர்வ லேகுண்டே
அனயயல்லுனிபை அஹங்கார பட3னேல (மீ)

சரணம் 3
ஏ ஜன்மமுன 2பாத்ரமெரிகி3 தா3னம்பீ3
பூஜிஞ்ச மரசி வேல்புலனாடு3கோனேல (மீ)

சரணம் 4
நா மனஸு நா ப்ரேம நன்னலய ஜேஸின
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ நுத சரண (மீ)


பொருள் - சுருக்கம்
இராமா! தாமரையிதழ்க் கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்ற திருவடியோனே!
என்னாலே யன்றி, ஒளிரும் உம்மால் குணக்கேடென்ன,
  • பொன் நன்கு புடமிட்டதாக இல்லாமற்போனால், துயருற்று, பத்தரைக் குறை சொல்வதேன்?

  • தனது மகள் பிரசவ வேதனை தாங்காவிடில், மிக்கு, மருமகன் மீது சினப்படுவதேன்?

  • எப்பிறவியிலும் பாத்திரமறிந்து ஈயாமலும், தொழ மறந்தும், கடவுளரைக் குற்றம் சொல்வதேன்?

எனது மனது, எனதிச்சைகள் என்னை யலைய வைத்தன;


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மீவல்ல/ கு3ண/ தோ3ஷமு/-ஏமி/ ஸ்ரீ ராம/
உம்மால்/ குண/ கேடு/ என்ன/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
நாவல்லனே/ கானி/ நளின/ த3ள/ நயன/ (மீ)
என்னாலே/ யன்றி/ தாமரை/ யிதழ்/ கண்ணா/ உம்மால்...


சரணம்
சரணம் 1
3ங்கா3ரு/ பா3கு33/ பதி3வன்னெ/ கா3குண்டே/
பொன்/ நன்கு/ புடமிட்டதாக/ இல்லாமற்போனால்/

அங்க3லார்சுசு/ ப3த்துனு/-ஆடு3கோனு/-ஏல/ (மீ)
துயருற்று/ பத்தரை/ குறை/ சொல்வது/ ஏன்?


சரணம் 2
தன/ தனய/ ப்ரஸவ/ வேத3னகு/-ஓர்வ லேகுண்டே/
தனது/ மகள்/ பிரசவ/ வேதனை/ தாங்காவிடில்/

அனய/-அல்லுனிபை/ அஹங்கார பட3னேல/ (மீ)
மிக்கு/ மருமகன் மீது/ சினப்படுவதேன்/


சரணம் 3
ஏ/ ஜன்மமுன/ பாத்ரமு/-எரிகி3/ தா3னம்பு3-ஈக/
எந்த/ பிறவியிலும்/ பாத்திரம்/ அறிந்து/ ஈயாமலும்/

பூஜிஞ்ச/ மரசி/ வேல்புலனு/-ஆடு3கோனு/-ஏல/ (மீ)
தொழ/ மறந்தும்/ கடவுளரை/ குற்றம் சொல்வது/ ஏன்/


சரணம் 4
நா/ மனஸு/ நா/ ப்ரேம/ நன்னு/-அலய/ ஜேஸின/
எனது/ மனது/, எனது/ இச்சைகள்/ என்னை/ அலைய/ வைத்தன/

ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ சரண/ (மீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3த்து - ப3ச்சு : 'ப3ச்சு' என்ற சொல்லுக்கு 'செட்டியார்' என்று பொருள். 'ப3த்து' என்ற சொல்லுக்கு 'பத்தர்' என்று பொருள். இரண்டு சொற்களுமே இவ்விடத்தில் பொருந்தும். ஆனால், எல்லா புத்தகங்களிலும் 'பத்தர்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே 'ப3த்து' ஏற்றுக்கொள்ளப்பட்டது

மேற்கோள்கள்

விளக்கம்
2 - பாத்ரமெரிகி3 தா3னம்பீ3 - பாத்திரமறிந்து பிச்சையிடாது - தகுந்தவர்க்கு தானம் செய்யாதிருத்தலும், தகுதியற்றோருக்கு தானம் செய்தலும் நல்வினையாகா.
Top


Updated on 27 Dec 2008

No comments: