பல்லவி
1இந்த ஸௌக்2யமனி நே ஜெப்ப ஜால
எந்தோ ஏமோ எவரிகி தெலுஸுனோ
அனுபல்லவி
2தா3ந்த ஸீதா காந்த கருணா
ஸ்வாந்த ப்ரேமாது3லகே தெலுஸுனு கானி (இ)
சரணம்
ஸ்வர ராக3 லய ஸுதா4 ரஸமந்து3
வர ராம நாமமனே கண்ட3
சக்கெர மிஸ்1ரமு ஜேஸி பு4ஜிஞ்சே
ஸ1ங்கருனிகி தெலுஸுனு த்யாக3ராஜ வினுத (இ)
பொருள் - சுருக்கம்
சீதை மணாளா! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
இத்தனை சௌக்கியமென நான் சொல்லவியலேனே! எவ்வளவோ, எவ்விதமோ, எவருக்குத்தான் தெரியுமோ!
மனதையடக்கிய, கருணை யுள்ளமும் (இறைவனிடம்) காதலுமுடைத்தோருக்கே தெரியும்;
சுர, ராக, லய அமுதச்சாற்றினில், புனித இராம நாமமெனும் கண்ட-சருக்கரையைக் கலந்தருந்தும் சங்கரனுக்குத் தெரியும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ ஸௌக்2யமு/-அனி/ நே/ ஜெப்ப/ ஜால/
இத்தனை/ சௌக்கியம்/ என/ நான்/ சொல்ல/ இயலேனே/
எந்தோ/ ஏமோ/ எவரிகி/ தெலுஸுனோ/
எவ்வளவோ/ எவ்விதமோ/ எவருக்குத்தான்/ தெரியுமோ/
அனுபல்லவி
தா3ந்த/ ஸீதா/ காந்த/ கருணா/
மனதையடக்கிய/ சீதை/ மணாளா/ கருணை/
ஸ்வாந்த/ ப்ரேம/-ஆது3லகே/ தெலுஸுனு/ கானி/ (இ)
உள்ளமும்/ காதலும்/ உடைத்தோருக்கே/ தெரியும்/ அன்றி/ இத்தனை...
சரணம்
ஸ்வர/ ராக3/ லய/ ஸுதா4/ ரஸமு-அந்து3/
சுர/ ராக/ லய/ அமுத/ சாற்றினில்/
வர/ ராம/ நாமமு/-அனே/ கண்ட3/
புனித/ இராம/ நாமம்/ எனும்/ கண்ட/-
சக்கெர/ மிஸ்1ரமு ஜேஸி/ பு4ஜிஞ்சே/
சருக்கரையை/ கலந்து/ அருந்தும்/
ஸ1ங்கருனிகி/ தெலுஸுனு/ த்யாக3ராஜ/ வினுத/ (இ)
சங்கரனுக்கு/ தெரியும்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தா3ந்த - மனதையடக்கிய - சில புத்தகங்களில் இச்சொல்லினை இறைவனின் அடைமொழியாக சொல்லப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
1 - இந்த ஸௌக்2யமனி நே ஜெப்ப ஜால - இத்தனை சௌக்கியமென நான் சொல்லவியலேனே! நாரத பக்தி ஸூத்திரம் தியாகராஜரின் விவரிக்க இயலாத இந்நிலையை 'சுவையான உண்டியின் தன்மை உரைக்க இயலாத மூங்கை(ஊமை)யின் நிலை போன்றது' என்று கூறும் : 52-வது செய்யுள் நோக்குக.
விளக்கம்
அனுபல்லவியின் 'கருணா ஸ்வாந்த ப்ரேமாது3லகே' என்ற சொற்களை, தியாகராஜரின் உள்ளப்பாங்கினை உணராது, மொழிபெயர்த்தல் இயலாததொன்று.
Top
Updated on 19 Dec 2008
No comments:
Post a Comment