சூதாமு ராரேயீ வேட்3கனு ஸுத3துலார நேடு3
அனுபல்லவி
1புருஹூதாது3லகருதை3னயோட3லோ
2யுவதுலெல்ல ஹரினி கூடி3யாடெ3த3ரு (சூ)
சரணம்
சரணம் 1
ஒகரிகொகரு க3ந்த4முனலதெ3த3ரு
ஒகரிகொகரு திலகமு தி3த்3தெ3த3ரு
ஒகரிகொகரு விடெ3முலொஸகெ3த3ரு
ஒகரிகொகரு ஹாரமு வேஸெத3ரு (சூ)
சரணம் 2
ஒகரிகொகரு வலுவலு கட்டெத3ரு
ஒகரிகொகரு ரவிகெலு 3தொடி3கெ3த3ரு
ஒகரினொகரு கௌகி3ட கூர்செத3ரு
ஒகரிகொகரு தமலோ ஸொக்கெத3ரு (சூ)
சரணம் 3
ஒகரிகொகரு பாடலு பாடெ3த3ரு
ஒகரிகொகரு ஸரஸமுலாடெ3த3ரு
ஒகரினொகரு ஹரியனி ஜூசெத3ரு
ஒகரினொகரு கானக ப்4ரமஸெத3ரு (சூ)
பொருள் - சுருக்கம்
காணலாம் வாரீர் இந்த வேடிக்கையை, மடந்தையரே! இன்று
ஓடத்தினிலே யுவதிகளனைவரும், இந்திராதியருக்கும் அரிதான அரியைக் கூடியாடுகின்றனர்;
- ஒருவருக்கொருவர் சந்தனம் பூசிக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் திலகமிட்டுக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் தாம்பூலமளித்துக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் மாலை சூடிக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் ஆடை கட்டிக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் ரவிக்கைகளை அணிவிக்கின்றனர்;
- ஒருவரையொருவர் அணைத்துக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் தமக்குள் சொக்குகின்றனர்;
- ஒருவருக்கொருவர் பாடல்கள் பாடிக்கொள்கின்றனர்;
- ஒருவருக்கொருவர் கேளிக்கைகள் செய்துகொள்கின்றனர்;
- ஒருவரையொருவர் அரியென நோக்குகின்றனர்;
- ஒருவரையொருவர் காணாது திகைக்கின்றனர்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சூதாமு/ ராரே/-ஈ/ வேட்3கனு/ ஸுத3துலார/ நேடு3/
காணலாம்/ வாரீர்/ இந்த/ வேடிக்கையை/ மடந்தையரே/ இன்று/
அனுபல்லவி
புருஹூத/-ஆது3லகு/-அருதை3ன/-ஓட3லோ/
இந்திரன்/ ஆகியோருக்கும்/ அரிதான/ ஓடத்தினிலே/
யுவதுலு/-எல்ல/ ஹரினி/ கூடி3/-ஆடெ3த3ரு/ (சூ)
யுவதிகள்/ அனைவரும்/ அரியை/ கூடி/ ஆடுகின்றனர்/
சரணம்
சரணம் 1
ஒகரிகி-ஒகரு/ க3ந்த4முனு/-அலதெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ சந்தனம்/ பூசிக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ திலகமு/ தி3த்3தெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ திலகம்/ இட்டுக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ விடெ3முலு/-ஒஸகெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ தாம்பூலம்/ அளித்துக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ ஹாரமு/ வேஸெத3ரு/ (சூ)
ஒருவருக்கொருவர்/ மாலை/ சூடிக்கொள்கின்றனர்/
சரணம் 2
ஒகரிகொகரு/ வலுவலு/ கட்டெத3ரு/
ஒருவருக்கொருவர்/ ஆடை/ கட்டிக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ ரவிகெலு/ தொடி3கெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ ரவிக்கைகளை/ அணிவிக்கின்றனர்/
ஒகரினி-ஒகரு/ கௌகி3ட கூர்செத3ரு/
ஒருவரையொருவர்/ அணைத்துக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ தமலோ/ ஸொக்கெத3ரு/ (சூ)
ஒருவருக்கொருவர்/ தமக்குள்/ சொக்குகின்றனர்/
சரணம் 3
ஒகரிகொகரு/ பாடலு/ பாடெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ பாடல்கள்/ பாடிக்கொள்கின்றனர்/
ஒகரிகொகரு/ ஸரஸமுலு/-ஆடெ3த3ரு/
ஒருவருக்கொருவர்/ கேளிக்கைகள்/ செய்துகொள்கின்றனர்/
ஒகரினொகரு/ ஹரி/ அனி/ ஜூசெத3ரு/
ஒருவரையொருவர்/ அரி/ என/ நோக்குகின்றனர்/
ஒகரினொகரு/ கானக/ ப்4ரமஸெத3ரு/ (சூ)
ஒருவரையொருவர்/ காணாது/ திகைக்கின்றனர்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இப்பாடலின் ராகம் 'கர்நாடக காபி' - என சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது
1 - புருஹூதாது3லகருதை3னயோட3லோ - சில புத்தகங்களில் 'புரு' என்ற சொல் (bracket-களில்)- (புரு) என கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.
1 - புருஹூதாது3லகருதை3னயோட3லோ - புருஹூதாது3லகருதை3ன ஈ ஓட3லோ.
2 - யுவதுலெல்ல - யுவித3லெல்ல : 'யுவித3லெல்ல' சரியன்று.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இந்தவொரு பாடலில் மட்டும் 'தியாகராஜரின் முத்திரை' - 'தியாகராஜ நுத' போன்ற சொற்கள் கொடுக்கப்படவில்லை.
3 - தொடி3கெ3த3ரு - தெலுங்கில் 'தொடுகு3', 'தொடுகு' என்று இரு சொற்கள் உள்ளன. 'தொடுகு3' என்ற சொல்லுக்கு 'அணிவித்தல்' என்றும், 'தொடுகு' என்ற சொல்லுக்கு 'பறித்தல்' என்றும் பொருள். இவை முற்றிலும் மாறுபட்ட சொற்களானாலும், இரண்டு சொற்களுமே இவ்விடம் பொருந்தும். 'ரவிக்கைகளை அணிவிக்கின்றனர்' என்றோ 'ரவிக்கைகளை பறிக்கின்றனர்' என்றோ பொருள் கொள்ளலாம்.
இப்பாடல் 'நௌக சரித்ரம்' எனப்படும் நாட்டிய நாடகத்தில் இடம்பெறுகின்றது. யமுனையில், ஓடத்தினில் ஆய்ச்சியர் கண்ணனுடன் கும்மாளமாகச் செல்தவனையும் அதனைக் கண்டு வான்மடந்தையர் வியப்பதையும் இப்பாடல் வருணிக்கின்றது. இப்பாடல் வான்மடந்தையர் தமக்குள் உரையாடுவதை சித்திரிக்கின்றது.
Top
Updated on 21 Dec 2008
No comments:
Post a Comment