Thursday, December 18, 2008

அன்யாயமு - ராகம் காபி - Anyaayamu - Raga Kaapi

பல்லவி
அன்யாயமு ஸேயகுரா ராம
1நன்னன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3 ராம

அனுபல்லவி
2என்னோ தப்புலு க3 வாரினி
ராஜன்ய நீவு ப்3ரோசினாவு க3னுகனு (அ)

சரணம்
3ஜட34ரதுடு3 ஜிங்க ஸி1ஸு1வுனெத்தி
33லிக தீர்சக3 லேதா3
கட3லினி முனிகி3ன கி3ரினொக
4கூர்மமு காபாட33 லேதா3
புட3மினி 5பாண்ட3வ த்3ரோஹினி
4ர்ம புத்ருடு3 ப்3ரோவக3 லேதா3
நடி3மி ப்ராயமுன த்யாக3ராஜ நுத
நா பூர்வஜு பா34 6தீர்ப லேனனி (அ)


பொருள் - சுருக்கம்
இராமா! மன்னா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

எனக்கு அநீதியிழைக்காதீருமய்யா; என்னை அயலோனாக நோக்காதீருமய்யா; ஏனெனில், எத்தனையோ தவறுகள் உள்ளவரையும், நீர் காத்துள்ளீர்.

ஜடபரதன் மான் குட்டியையெடுத்து (அதன்) களைப்பைப் போக்கவில்லையா?
கடலினில் மூழ்கிய மலையையொரு ஆமை காப்பாற்றவில்லையா?
புவியில், பாண்டவருக்கு துரோகியை, தரும புத்திரர் காக்கவில்லையா?

(எனது) நடு வயதினில், எனது மூத்தோன் (இழைக்கும்) தொல்லைகளைத் தீர்க்கவியலேனென எனக்கு அநீதியிழைக்காதீருமய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அன்யாயமு/ ஸேயகுரா/ ராம/
அநீதி/ இழைக்காதீருமய்யா/, இராமா/

நன்னு/-அன்யுனிகா3/ ஜூட3குரா/ நாயெட3/ ராம/
என்னை/ அயலோனாக/ நோக்காதீருமய்யா/ எனக்கு/ இராமா/


அனுபல்லவி
என்னோ/ தப்புலு/ க3ல வாரினி/
எத்தனையோ/ தவறுகள்/ உள்ளவரையும்/

ராஜன்ய/ நீவு/ ப்3ரோசினாவு/ க3னுகனு/ (அ)
மன்னா/ நீர்/ காத்துள்ளீர்/ எனவே/ எனக்கு...


சரணம்
ஜட3/ ப4ரதுடு3/ ஜிங்க/ ஸி1ஸு1வுனு/-எத்தி/
ஜட/ பரதன்/ மான்/ குட்டியை/ யெடுத்து/

33லிக/ தீர்சக3 லேதா3/
களைப்பை/ போக்கவில்லையா/

கட3லினி/ முனிகி3ன/ கி3ரினி/-ஒக/
கடலினில்/ மூழ்கிய/ மலையை/ யொரு/

கூர்மமு/ காபாட33 லேதா3/
ஆமை/ காப்பாற்றவில்லையா/

புட3மினி/ பாண்ட3வ/ த்3ரோஹினி/
புவியில்/ பாண்டவருக்கு/ துரோகியை/

4ர்ம/ புத்ருடு3/ ப்3ரோவக3 லேதா3/
தரும/ புத்திரர்/ காக்கவில்லையா/

நடி3மி/ ப்ராயமுன/ த்யாக3ராஜ/ நுத/
நடு/ வயதினில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

நா/ பூர்வஜு/ பா34/ தீர்ப/ லேனு/-அனி/ (அ)
எனது/ மூத்தோன்/ தொல்லைகளை/ தீர்க்க/ இயலேன்/ என/ எனக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நன்னன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3 ராம - அன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3.

6 - தீர்ப லேனனி - தீர்ப லேதா3 : 'தீர்ப லேதா3' என்பதற்கு 'தீர்க்கவில்லையா' என்று பொருள். இப்பாடலில் 'எனக்கு அநீதி இழைக்காதே' என்று இறைவனிடம் வேண்டி அதற்கு மூன்று உதாரணங்களைக் கொடுக்கின்றார். அவர் கேட்பது 'என்னுடை தமையனின் தொல்லைகளைத் தீர்ப்பாயென'. எனவே 'தீர்ப லேதா3' இப்பாடலின் கருத்தையே மாற்றுவதனால் முற்றிலும் பொருந்தாது
Top

மேற்கோள்கள்
2 - என்னோ தப்புலு க3 - இது சுக்கிரீவனைக் குறிக்கும். சுக்கிரீவனிடம் பல குறைபாடுகள் இருந்தாலும் ராமன் அவற்றைப் பொருட்படுத்தாது அவனை ஆட்கொண்டார்.

3 - ஜட34ரதுடு3 - பாகவத புராணத்தில் ஒரு கதை. இதன் முழு விவரமும் ஸ்ரீமத் பாகவதம், 5-வது புத்தகம், 8-வது அத்தியாயத்தினில் நோக்கவும். ஜட பரதன் மானை எடுத்து வளர்த்த கதை - சுருக்கம்

4 - கூர்மமு - இறைவனின் கூர்மாவதாரம் - ஆமையாக முதுகினில் மந்தர மலையைச் சுமந்தது.

Top

5 - பாண்ட3வ த்3ரோஹி - சில புத்தகங்களில் இதனை துரோணரின் மகன் அஸ்வத்தாமாவைக் குறிக்கும் என்றுள்ளது. அஸ்வத்தாமா பாண்டவர்களின் குழந்தைகளைக் கொன்று, அத்துடன் பாண்டவ வமிசமே அழியவேண்டுமென பிரமாஸ்திரத்தினை ஏவினான். அதனை கண்ணன் தடுத்ததுமல்லாமல் அவனை சபித்தான். அஸ்வத்தாமாவை துரோபதை மன்னித்தாள். மகாபாரதம் - 10-வது புத்தகம்; அஸ்வத்தாமாவின் கதை-1; அஸ்வத்தாமாவின் கதை-2.

எனவே, 'பாண்டவ துரோகி' என்பது துரியோதனனைக் குறிக்கும். பாண்டவர்கள் வனவாசம் செய்கையில் அவர்களுக்கு வேண்டுமென்றே தொல்லைகள் கொடுக்க கௌரவர்களும் வனத்திற்கு வந்து தங்குகினர். அங்கு கௌரவர்களுக்கும் அங்கிருந்த கந்தருவகளுடன் போர் மூண்டது. அப்போரினில் துரியோதனன் முதலாக யாவரும் கைதிகளாகி நின்றதனைக் கண்டு தரும புத்திரர் தனது தம்பிகளை அனுப்பி அவர்களை விடுவித்தார். இதனை தியாகராஜர் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். துரியோதனன், கர்ணன் ஆகியோரை தருமபுத்திரர் காத்த நிகழ்ச்சி.

விளக்கம்
நடு வயதினில் - தியாகராசர் தன்னைச் சொல்கிறார்.
TopUpdated on 18 Dec 2008

No comments: