Wednesday, December 10, 2008

நன்னு ப்3ரோவ நீகிந்த - ராகம் ஆபோ4கி3 - Nannu Brova Neekinta - Raga Abhogi

பல்லவி
நன்னு ப்3ரோவ நீகிந்த தாமஸமா
நாபை நேரமேமி பல்குமா

அனுபல்லவி
சின்ன நாடே3 நீ செலிமி கல்க3 கோரி
சிந்திம்ப லேதா3 ஸ்ரீ ராமா (ந)

சரணம்
நிஜ 1தா3ஸ வருலகு3 தம்முலதோ
நீவு பா33 புட்டக3 லேதா3
3ஜ ராஜ ரக்ஷக தனயுலனு
கனி பெஞ்ச லேதா3 த்யாக3ராஜ நுத (ந)


பொருள் - சுருக்கம்
இராமா! கரியரசனைக் காத்தோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
என்னைக் காக்க உனக்கு இத்தனை தாமதமா? என்மீது குற்றமென்ன? பகர்வாயய்யா
சிறு வயதிலேயே உனது பற்றுண்டாக வேண்டி சிந்திக்கவில்லையா?
உண்மையான, தொண்டரிற் சிறந்தோராகிய பின்னோருடன் நீ சிறக்க பிறக்கவில்லையா? மக்களைப் பெற்று வளர்க்கவில்லையா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ ப்3ரோவ/ நீகு/-இந்த/ தாமஸமா/
என்னை/ காக்க/ உனக்கு/ இத்தனை/ தாமதமா/

நாபை/ நேரமு/-ஏமி/ பல்குமா/
என்மீது/ குற்றம்/ என்ன/ பகர்வாயய்யா/


அனுபல்லவி
சின்ன/ நாடே3/ நீ/ செலிமி/ கல்க3/ கோரி/
சிறு/ வயதிலேயே/ உனது/ பற்று/ உண்டாக/ வேண்டி/

சிந்திம்ப லேதா3/ ஸ்ரீ ராமா/ (ந)
சிந்திக்கவில்லையா/ ஸ்ரீ ராமா/


சரணம்
நிஜ/ தா3ஸ/ வருலு-அகு3/ தம்முலதோ/
உண்மையான/ தொண்டரிற்/ சிறந்தோராகிய/ பின்னோருடன்/

நீவு/ பா33/ புட்டக3 லேதா3/
நீ/ சிறக்க/ பிறக்கவில்லையா/

3ஜ/ ராஜ/ ரக்ஷக/ தனயுலனு/
கரி/ அரசனை/ காத்தோனே/ மக்களை/

கனி/ பெஞ்ச லேதா3/ த்யாக3ராஜ/ நுத/ (ந)
பெற்று/ வளர்க்கவில்லையா/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ஸ வருலகு3 - தா3ஸ வருலகு : 'தா3ஸ வருலகு' சரியென்றால் 'உண்மையான தொண்டரிற் சிறந்தோருக்காக பின்னோருடன் நீ சிறக்க பிறக்கவில்லையா' என மொழி பெயர்க்கப்படும்.

மேற்கோள்கள்

விளக்கம்
பின்னோர் - தம்பிகள்


Top

Updated on 10 Dec 2008

No comments: