Tuesday, December 9, 2008

நகு3 மோமு கன லேனி - ராகம் ஆபே4ரி - Nagu Momu Kana Leni - Raga Abheri

பல்லவி
நகு3 மோமு கன லேனி நா ஜாலி தெலிஸி
நன்னு 1ப்3ரோவ ராதா3 ஸ்ரீ ரகு4வர நீ (நகு3)

அனுபல்லவி
நக3 ராஜ த4ர நீது3 பரிவாருலெல்ல
2ஒகி3 போ34ன ஜேஸே வாரலு காரே3யடுலுண்டு3து3ரே நீ (நகு3)

சரணம்
423 ராஜு நீயானதி வினி வேக3 சன லேடோ3
33னானிகிலகு ப3ஹு தூ3ரம்ப3னினாடோ3
5ஜக3மேலே பரமாத்ம 6எவரிதோ மொரலிடு3து3
வக3 ஜூபகு தாளனு நன்னேலுகோரா த்யாக3ராஜ நுத நீ (நகு3)


பொருள் - சுருக்கம்
இரகுவரா! மந்தர மலை சுமந்தோனே! உலகத்தினையாளும் பரம்பொருளே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

உனது சிரித்த முகத்தினைக் காணவியலாத எனது துயரறிந்து, என்னைக் காக்கலாகாதா?

உனது பரிவாரத்தினர் யாவரும் முறையான அறிவுரை வழங்குபவரன்றோ? அவ்விதமிருப்பரோ?

புள்ளரசன் உனதாணையைக் கேட்டு, விரைந்து செல்லவில்லையோ? ஆகாயத்திலிருந்து புவிக்கு வெகு தூரமென்றானோ? எவரிடம் முறையிடுவேன்? போக்குக் காட்டாதே; தாளேன்; என்னையாள்வாய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நகு3/ மோமு/ கன/ லேனி/ நா/ ஜாலி/ தெலிஸி/
சிரித்த/ முகத்தினை/ காண/ இயலாத/ எனது/ துயர்/ அறிந்து/

நன்னு/ ப்3ரோவ ராதா3/ ஸ்ரீ ரகு4வர/ நீ/ (நகு3)
என்னை/ காக்கலாகாதா/ ஸ்ரீ ரகுவர/ உனது/


அனுபல்லவி
நக3/ ராஜ/ த4ர/ நீது3/ பரிவாருலு/-எல்ல/
மலை/ அரசனை/ சுமந்தோனே/ உனது/ பரிவாரத்தினர்/ யாவரும்/

ஒகி3/ போ34ன/ ஜேஸே வாரலு/ காரே/-அடுலு/-உண்டு3து3ரே/ நீ. (நகு3)
முறையான/ அறிவுரை/ வழங்குபவர்/ அன்றோ/ அவ்விதம்/ இருப்பரோ/ உனது/ சிரித்த..


சரணம்
23/ ராஜு/ நீ/-ஆனதி/ வினி/ வேக3/ சன/ லேடோ3/
புள்/ அரசன்/ உனது/ ஆணையை/ கேட்டு/ விரைந்து/ செல்லவில்லையோ/

33னானிகி/-இலகு/ ப3ஹு/ தூ3ரம்பு3/-அனினாடோ3/
ஆகாயத்திலிருந்து/ புவிக்கு/ வெகு/ தூரம்/ என்றானோ/

ஜக3மு/-ஏலே/ பரமாத்ம/ எவரிதோ/ மொரலு-இடு3து3/
உலகத்தினை/ ஆளும்/ பரம்பொருளே/ எவரிடம்/ முறையிடுவேன்/

வக3/ ஜூபகு/ தாளனு/ நன்னு/-ஏலுகோரா/ த்யாக3ராஜ/ நுத/ நீ/ (நகு3)
போக்கு/ காட்டாதே/ தாளேன்/ என்னை/ யாள்வாய்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ உனது/ சிரித்த..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோவ ராதா3 - ப்3ரோவக3 ராதா3

3 - அடுலுண்டு3து3ரே - அடுலுண்ட3து3ரா - இடுலுண்டு3து3ரே : 'அடுலுண்ட3து3ரா' தவறாகும். இது ஒரு கேள்வியாகும் - 'அவ்விதம் இருப்பரோ?'

6 - எவரிதோ - எவரிதோ நே
Top

மேற்கோள்கள்
4 - 23 ராஜு - முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரனைக் காக்க அரி கருடன் மீது விரைந்ததைக் குறிக்கும்.
Top

விளக்கம்
2 - ஒகி3 - தெலுங்கு மொழியில் 'ஓகு3', 'ஓகி3' என்று இரண்டு சொற்கள் உள்ளன. 'ஓகு3' என்பதற்கு 'கெட்ட' என்றும் 'ஓகி3' என்பதற்கு 'முறையான' என்றும் பொருள். இவற்றினில் 'முறையான' என்ற பொருளுடைய 'ஓகி' என்ற சொல் இவ்விடம் பொருந்தும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் 'ஒகி' என்று குறில் 'ஒ' கொடுக்கப்பட்டுள்ளது.

2 - போ34 - இச்சொல்லும் இரு விதமாக பொருள் படும். 'தத்துவ போதனை' என்பதற்கு 'தத்துவ அறிவுரை' என்றும், 'யாருடைய போதனை' என்பதற்கு 'யாருடைய தூண்டுதல்' என்றும். இச்சொல்லுக்கு முற்பட்ட 'ஒகி' என்னும் 'முறையான' என்ற பொருளுடைய சொல் வருவதனால் இங்கு 'அறிவுரை' என்ற பொருள் பொருந்தும்.

2 - ஒகி3 போ34ன ஜேஸே வாரலு காரே - இது ஒரு கேள்வியாகும் - 'முறையான அறிவுரை வழங்குபவர் அன்றோ?'

5 - ஜக3மேலே பரமாத்ம - 'ஒவ்வொரு உயிரிலும் உள்ளியக்கமாக உள்ள பரம்பொருளுக்கு எப்படி என்னுடைய துயர் தெரியவில்லை' எனும் பொருள்பட தியாகராஜர் இச்சொல்லினை உபயோகிக்கின்றார்.

புள்ளரசன் - கருடன்
ஆகாயம் - வைகுண்டத்தினைக் குறிக்கும்
Top


Updated on 09 Dec 2008

5 comments:

Naras said...

Great work Govindan.
Thanks a lot.
Naras.

Anonymous said...

Great work Govindan.
Thanks a lot.
Naras.

Unknown said...

Really great sir....

Vedhavyasa. Sampathkumarabhattar said...

What a beautiful translation. You have brought out Thysgaraja swamy's feelings aptly.

Ravi said...

Great work..Thank you very much..