Monday, December 15, 2008

சின்ன நாடே3 - ராகம் கலா நிதி4 - Chinna Naade - Raga Kalaa Nidhi

பல்லவி
சின்ன நாடே3 நா 1செயி பட்டிதிவே

அனுபல்லவி
என்ன ரானியூடி33மு கைகொனி
எந்தோ 2நன்னு பாலனமு ஸேதுனனி (சி)

சரணம்
இட்டி வேள 3விட3னாடு3தா3மனோ
4ஏலுகொந்தா3மனியெஞ்சினாவோ தெலிய
5கு3ட்டு ப்3ரோவவே ஸுகு3ண வாரி நிதி4
கொ3ப்ப தை3வமா த்யாக3ராஜ நுத (சி)


பொருள் - சுருக்கம்
நற்குணக் கடலே! மேலான தெய்வமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
என்ணற்ற எனது ஊழியங்களை யேற்றுக்கொண்டு, மிக்கு என்னை 'பேணுவேன்' என சிறு வயதிலேயே எனது கைப்பற்றினாயே?
இவ்வேளை, கைவிடுவோமென்றோ, அன்றி ஆண்டுகொள்வோமென்றோ, என்ன எண்ணியுள்ளாயோ, அறியேன்.
எனது மானத்தைக் காப்பாய்,


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சின்ன/ நாடே3/ நா/ செயி/ பட்டிதிவே/
சிறு/ வயதிலேயே/ எனது/ கை/ பற்றினாயே/


அனுபல்லவி
என்ன ரானி/-ஊடி33மு/ கைகொனி/
என்ணற்ற/ ஊழியங்களை/ யேற்றுக்கொண்டு/

எந்தோ/ நன்னு/ பாலனமு ஸேதுனு/-அனி/ (சி)
மிக்கு/ என்னை/ 'பேணுவேன்'/ என/ சிறு..


சரணம்
இட்டி/ வேள/ விட3னாடு3தா3மு/-அனோ/
இந்த/ வேளை/ கைவிடுவோம்/ என்றோ/

ஏலுகொந்தா3மு/-அனி/-எஞ்சினாவோ/ தெலிய/
ஆண்டுகொள்வோம்/ என்றோ/ எண்ணியுள்ளாயோ/ அறியேன்/

கு3ட்டு/ ப்3ரோவவே/ ஸுகு3ண/ வாரி நிதி4/
மானத்தை/ காப்பாய்/, நற்குண/ கடலே/

கொ3ப்ப/ தை3வமா/ த்யாக3ராஜ/ நுத/ (சி)
மேலான/ தெய்வமே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நன்னு - நின்னு - இவ்விடத்தில் 'நன்னு' பொருந்தும்.

4 - ஏலுகொந்தா3மனி - ஏலுகொந்து3மனி - சொற்களின் கோர்வையை நோக்குகையில் 'ஏலுகொந்தா3மனி' இவ்விடத்தில் பொருந்தும்.
Top

மேற்கோள்கள்
3 - விட3னாடு3தா3மனோ - கைவிடுவோமென்றோ - 'கா3ரவிம்ப ராதா3' எனும் 'க4ண்டா' ராக பாடலில் - 'தான் கைப்பிடித்த மனைவியின் உருவம் எப்படியிருந்தாலும், அவள் பண்புடையவளாயிருந்தால் அவளைக் கைவிடமாட்டார்' என்கிறார் தியாகராஜர்.
Top

விளக்கம்
1 செயி பட்டிதிவே - கைப்பற்றினாயே - 'மணந்தாயே' என்றும் கொள்ளலாம். இப்பாடல், இறைவனை கணவனாக பாவித்து வழிபடும் முறைமையில் அமைந்துள்ளது. 'நாரத பக்தி சூத்திர'த்தில் இவ்வகையான காதலுக்கு 'காந்தாஸக்தி' எனறு கூறப்படும். ஆண்டாளும், மீராவும் இங்ஙனமே வழிபட்டனர்.

5 - கு3ட்டு - பொதுவாக இச்சொல்லுக்கு 'ரகசியம்' என்று பொருள். ஆனால் 'மானம்', 'மதிப்பு' என்றும் பொருளுண்டு. இதற்கடுத்து வரும் 'ப்3ரோவவே' - காப்பாய் - என்ற சொல்லினால், இங்கு 'ரகசியம்' என்ற பொருள் பொருந்தாது. அதனால் 'மானத்தைக் காப்பாய்' என மொழிபெயர்க்கப்பட்டது.

ஊழியங்கள் - இறைவன் தொண்டு
Top



Updated on 15 Dec 2008

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

அனுபல்லவியில் 'நன்னு' என்பது தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளிர். ‘என' என்பதை 'என்று கூறி' என்று பொருள் கொள்ளலாமே.
நின்னு என்று எடுத்துக்கொண்டால் கீழ்க்கண்ட பொருள் வருமே.
என்ணற்ற எனது ஊழியங்களை யேற்றுக்கொண்டு, மிக்கு உன்னைப் பேணுவேன்' என்று கூறி சிறு வயதிலேயே எனது கைப்பற்றினாயே?

வணக்கம்

கோவிந்தஸ்வாமி

V Govindan said...

Sri Govindaswami,
The statement in anupallavi - 'entO nannu (ninnu) pAlanamu sEtunu ani' - is made by the Lord to tyAgarAja. Superficially, your argument seems to be correct. We would keep arguing as to which one is more appropriate. As the language of the kRti is more colloquial, I would not like to venture more.
With regarrds,
V Govindan