Thursday, December 25, 2008

பாஹி மாம் ஸ்ரீ ராமசந்த்3ர - ராகம் காபி - Paahi Mam Sri Ramachandra - Raga Kaapi

பல்லவி
1பாஹி மாம் ஸ்ரீ ராமசந்த்3

சரணம்
சரணம் 1
அக்கரதோ பாத3முலகு ம்ரொக்கிதி ஏல பராகு (பா)

சரணம் 2
தி3க்கு நீவையுண்ட3கா3னு க்3ரக்குன வேடு3கொன்னானு (பா)

சரணம் 3
மக்குவதோ ராம நீவுயெக்குவ ஜேஸி நனு ப்3ரோவு (பா)

சரணம் 4
சக்கனி நீ முத்3து3 மோமுனொக்க ஸாரி கனுபிம்புமு (பா)

சரணம் 5
அன்னிடனு நெலகொன்ன நின்னு மிஞ்சின வாரெவரன்ன (பா)

சரணம் 6
பன்னக3 பூ4ஷணுடு3 சால நின்னு கொனியாடு3னே வேள (பா)

சரணம் 7
சின்ன நாடே3யனுஸரிஞ்சுகொன்ன வாட3னு நனு பாலிஞ்சு (பா)

சரணம் 8
2மன்னன ஜேஸியேலவய்யாபன்ன ரக்ஷக ராமய்ய (பா)

சரணம் 9
பன்னுக3 ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுத பா4ஸ்கர தேஜ (பா)


பொருள் - சுருக்கம்
ஓ இராமசந்திரா! இராமா! தந்தையே! இடர்களினின்று காப்போனே! இராமய்யா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! பரிதிச் சுடரொளியோனே!

  • அக்கறையுடன் (உனது) திருவடிகளை வணங்கினேன்; ஏன் அசட்டையோ?

  • புகல் நீயாகவிருக்க, தாமதிக்காது வேண்டிக்கொண்டேன்;

  • கனிவுடன், நீ பெருந்தன்மையாக என்னைக் காப்பாய்;

  • அழகான, உனது கொஞ்சு முகத்தினை ஒரு முறை காண்பிப்பாய்;

  • யாவற்றிலும் நிலைபெற்றுள்ள உன்னை மிஞ்சுவார் யார்?

  • அரவணிவோன் மிக்கு உன்னைப் புகழ்வா னெவ்வமயமும்;

  • சிறு வயது முதலே (உன்னை) பின்பற்றியவனாவேன்; என்னையாள்வாய்;

  • (என்னை) மன்னித்து ஆள்வாயய்யா;

  • சிறக்க என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஸ்ரீ ராமசந்த்3ர/
காப்பாய்/ என்னை/ ஸ்ரீ ராமசந்திரா!


சரணம்
சரணம் 1
அக்கரதோ/ பாத3முலகு/ ம்ரொக்கிதி/ ஏல/ பராகு/ (பா)
அக்கறையுடன்/ திருவடிகளை/ வணங்கினேன்/ ஏன்/ அசட்டையோ/?


சரணம் 2
தி3க்கு/ நீவை/-உண்ட3கா3னு/ க்3ரக்குன/ வேடு3கொன்னானு/ (பா)
புகல்/ நீயாக/ இருக்க/ தாமதிக்காது (வேகமாக)/ வேண்டிக்கொண்டேன்/


சரணம் 3
மக்குவதோ/ ராம/ நீவு/-எக்குவ ஜேஸி/ நனு/ ப்3ரோவு/ (பா)
கனிவுடன்/ இராமா/ நீ/ பெருந்தன்மையாக/ என்னை/ காப்பாய்/


சரணம் 4
சக்கனி/ நீ/ முத்3து3/ மோமுனு/-ஒக்க/ ஸாரி/ கனுபிம்புமு/ (பா)
அழகான/ உனது/ கொஞ்சு/ முகத்தினை/ ஒரு/ முறை/ காண்பிப்பாய்/


சரணம் 5
அன்னிடனு/ நெலகொன்ன/ நின்னு/ மிஞ்சின வாரு/-எவரு/அன்ன/ (பா)
யாவற்றிலும்/ நிலைபெற்றுள்ள/ உன்னை/ மிஞ்சுவார்/ யார்/ தந்தையே/


சரணம் 6
பன்னக3/ பூ4ஷணுடு3/ சால/ நின்னு/ கொனியாடு3னு/-ஏ வேள/ (பா)
அரவு/ அணிவோன்/ மிக்கு/ உன்னை/ புகழ்வான்/ எவ்வமயமும்/


சரணம் 7
சின்ன/ நாடே3/-அனுஸரிஞ்சுகொன்ன வாட3னு/ நனு/ பாலிஞ்சு/ (பா)
சிறு/ வயது முதலே/ (உன்னை) பின்பற்றியவனாவேன்/ என்னை/ யாள்வாய்/


சரணம் 8
மன்னன ஜேஸி/-ஏலவய்ய/-ஆபன்ன/ ரக்ஷக/ ராமய்ய/ (பா)
(என்னை) மன்னித்து/ ஆள்வாயய்யா/ இடர்களினின்று/ காப்போனே/ இராமய்யா/


சரணம் 9
பன்னுக3/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுத/ பா4ஸ்கர/ தேஜ/ (பா)
சிறக்க/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ பரிதிச் சுடர்/ ஒளியோனே/ என்னை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாஹி மாம் ஸ்ரீ ராமசந்த்3 - பாஹி மாம் ஸ்ரீ ராமசந்த்3ர பாஹி மாம் ஸ்ரீ ராம

2 - மன்னன ஜேஸியேலவய்ய - மன்னன ஜேஸேலவய்ய

Top

மேற்கோள்கள்

விளக்கம்
அரவணிவோன் - சிவன்

Top


Updated on 25 Dec 2008

No comments: