Sunday, December 14, 2008

ஸொக3ஸு ஜூட3 - ராகம் கன்னட3 கௌ3ள - Sogasu Jooda - Raga Kannada Gaula

பல்லவி
ஸொக3ஸு ஜூட3 தரமா நீ

அனுபல்லவி
நிக3-நிக3மனுசு கபோல
யுக3முசே மெரயு மோமு (ஸொ)

சரணம்
சரணம் 1
அமரார்சித பத3 யுக3மு1
அப4ய ப்ரத3 கர யுக3மு1
கமனீய தனு நிந்தி3
காம காம ரிபு நுத நீ (ஸொ)

சரணம் 2
வர 2பி3ம்ப3 ஸமாத4ரமு1
3வகுள ஸுமம்பு3யுரமு1
கர த்4ரு2த ஸ1ர கோத3ண்ட3
மரகதாங்க3 வரமைன (ஸொ)

சரணம் 3
சிரு நக3வுலு1 முங்கு3ருலு1
மரி கன்னுல தேட1
வர 4த்யாக3ராஜ
வந்த3னீய
யிடுவண்டி (ஸொ)


பொருள் - சுருக்கம்
காமன் பகைவனால் போற்றப்பெற்றோனே! மரகத நிற அங்கங்களோனே! தியாகராசனால் வணங்கப் பெற்ற புனிதனே!
உனது ஒய்யாரத்தினை (வேறெங்கும்) காண இயலுமா?
  • மினுமினுக்குமிரு கன்னங்களுடன், ஒளிரும் வதனம்;

  • அமரரால் தொழப்பெற்ற திருவடிகள்;

  • அபயமளிக்கும் கரங்கள்;

  • காமனை எள்ளும் விரும்பத்தகு உடல்;

  • சிவந்த, கோவைப்பழ நிகர் அதரங்கள்;

  • மகிழம்பூக்கள் திகழும் மார்பு;

  • கையிலேந்தும் அம்புகள் மற்றும், கோதண்டம்;

  • புன்னகை;

  • முடிச்சுருளல்கள்; மற்றும்

  • கண்களின் தெளிவு; -

இப்படிப்பட்ட சிறந்த ஒய்யாரத்தினைக் காண இயலுமா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸொக3ஸு/ ஜூட3/ தரமா/ நீ/
ஒய்யாரத்தினை/ காண/ இயலுமா/ உனது/


அனுபல்லவி
நிக3-நிக3-அனுசு/ கபோல/
மினுமினுக்கும்/ கன்னங்கள்/

யுக3முசே/ மெரயு/ மோமு/ (ஸொ)
இரண்டுடன்/ ஒளிரும்/ வதனத்தின்/ ஒய்யாரத்தினை...


சரணம்
சரணம் 1
அமர/-அர்சித/ பத3/ யுக3மு/
அமரரால்/ தொழப்பெற்ற/ திருவடி/ இணை/

அப4ய/ ப்ரத3/ கர/ யுக3மு/
அபயம்/ அளிக்கும்/ கரங்களின்/ இணை/

கமனீய/ தனு/ நிந்தி3த/
விரும்பத்தகு/ உடல்/ எள்ளும்/

காம/ காம/ ரிபு/ நுத/ நீ/ (ஸொ)
காமனை/ காமன்/ பகைவனால்/ போற்றப்பெற்றோனே/ உ னது/ ஒய்யாரத்தினை...


சரணம் 2
வர/ பி3ம்ப3/ ஸம/-அத4ரமு/
சிவந்த-உயர்/ கோவைப்பழ/ நிகர்/ அதரங்கள்/

வகுள/ ஸுமம்பு3ல/-உரமு/
மகிழம்/ பூக்கள் திகழும்/ மார்பு/

கர/ த்4ரு2த/ ஸ1ர/ கோத3ண்ட3/
கையில்/ ஏந்தும்/ அம்புகள்/ கோதண்டம்/

மரகத/-அங்க3/ வரமைன/ (ஸொ)
மரகத (நிற)/ அங்கங்களோனே/ சிறந்த/ ஒய்யாரத்தினை..


சரணம் 3
சிரு நக3வுலு/ முங்கு3ருலு/
புன்னகை/ (முடிச்)சுருளல்கள்/

மரி/ கன்னுல/ தேட/
மேலும்/ கண்களின்/ தெளிவு/

வர/ த்யாக3ராஜ/
புனித/ தியாகராசனால்/

வந்த3னீய/-இடுவண்டி/ (ஸொ)
வணங்கப் பெற்றோனே/ இப்படிப்பட்ட/ ஒய்யாரத்தினை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பத3 யுக3மு,   கர யுக3மு,   அத4ரமு,   உரமு,   நக3வுலு,   முங்கு3ருலு,   தேட
  - பத3 யுக3மோ, கர யுக3மோ, அத4ரமோ, உரமோ, நக3வுலோ, முங்கு3ருலோ, தேடோ

4 - த்யாக3ராஜ வந்த3னீய - த்யாக3ராஜார்சித வந்த3னீய

Top

மேற்கோள்கள்
2 - பி3ம்ப3 - கோவைப்பழம்
3 - வகுள - மகிழமரம் - மகிழம்பூ

விளக்கம்
எள்ளுதல் - கேலி செய்தல் (அழகில்)
காமன் பகைவன் - சிவன்
புனித - இறைவனைக் குறிக்கும்

Top

1 comment:

Chandra's said...

Great website. Good job and continue doing this wonderful service.
Cheers,
Chandrasekar.