Monday, November 3, 2008

ரார சீதா ரமணீ - ராகம் ஹிந்தோ3ள வசந்த - Rara Sita Ramani - Raga Hindola Vasanta

பல்லவி
1ரார ஸீதா ரமணீ மனோ-ஹர

அனுபல்லவி
நீரஜ நயன ஒக 2முத்3தீ3 தீ4ர முங்க3ல (ரா)

சரணம் 1
3ங்கா3ரு வல்வலு நே பா3கு33 கட்டெத3 மரி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி ஸேவ ஜேஸி கௌகி3ட ஜேர்செத3 (ரா)

சரணம் 2
ஸாரெகு நுது3டனு கஸ்தூரி திலகமு பெட்டெத3
ஸாரமைன 3முக்தா ஹாரமுல தி3த்3தெ33 (ரா)

சரணம் 3
4யோக3மு 5நீபையனு ராக3மு பாடெ33
வேரே க3தி எவரு ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (ரா)

பொருள் - சுருக்கம்
அழகி சீதையின் மனம் கவர்ந்தோனே! கமலக்கண்ணா! தீரனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

எதிரில் வாராய்; ஓர் முத்தம் தாராய்;
பொன்னாடைகளை உனக்கு நான் நன்கு கட்டுவேன்;
உனது நெற்றியில் கத்தூரிப் பொட்டிடுவேன்;
சிறந்த முத்து மாலைகளையணிவிப்பேன்;
சிங்காரித்து, சேவை செய்துன்னை மார்போடணைப்பேன்;
'சிந்தனை உந்தன் மீது' என ராகம் பாடுவேன்;
நீயே எனக்கு புகல்.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரார/ ஸீதா/ ரமணீ/ மனோ/-ஹர/
வாராய்/ சீதை/ அழகி/ மனம்/ கவர்ந்தோனே/

அனுபல்லவி
நீரஜ/ நயன/ ஒக/ முத்3து3/-ஈர/ தீ4ர/ முங்க3ல/ (ரா)
கமல/ கண்ணா/ ஓர்/ முத்தம்/ தாராய்/ தீரனே/ எதிரில்/ வாராய் ...

சரணம் 1
3ங்கா3ரு/ வல்வலு/ நே/ பா3கு33/ கட்டெத3/ மரி/
பொன்/ ஆடைகளை/ நான்/ நன்கு/ கட்டுவேன்/ மேலும்/

ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி/ ஸேவ/ ஜேஸி/ கௌகி3ட/ ஜேர்செத3/ (ரா)
சிங்காரித்து/ சேவை/ செய்து/ மார்போடு/ அணைப்பேன்/

சரணம் 2
ஸாரெகு/ நுது3டனு/ கஸ்தூரி/ திலகமு/ பெட்டெத3/
எப்போதும்/ நெற்றியில்/ கத்தூரி/ பொட்டு/ இடுவேன்/

ஸாரமைன/ முக்தா/ ஹாரமுல/ தி3த்3தெ33/ (ரா)
சிறந்த/ முத்து/ மாலைகளை/ அணிவிப்பேன்/

சரணம் 3
யோக3மு/ நீபை/-அனு/ ராக3மு/ பாடெ33/
சிந்தனை/ உந்தன் மீது/ என/ ராகம்/ பாடுவேன்/

வேரே/ க3தி/ எவரு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (ரா)
வேறு/ புகல்/ எவர்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரார - ராரா

2 - முத்3தீ3 - முத்3தீ3ரா

3 - முக்தா ஹாரமுல தி3த்3தெ33 - முக்தா ஹாரமுலனிக தி3த்3தெ33 : பிற்குறித்த வேறுபாடு சரியன்று

5 - நீபையனு ராக3மு பாடெ33 - நீபையனு ராக3மு கானி
Top

மேற்கோள்கள்

விளக்கம்
4 - யோக3மு - இதனை சிலர் 'பேறு' என்றும், சிலர் 'சிந்தனை' என்றும் பொருள் கொடுத்துள்ளனர் - 'சிந்தனை' சரியென தோன்றுகின்றது

5 - அனு ராக3மு பாடெ33 - வேறுபாட்டினில் கொடுத்துள்ள 'பாடெ33' சரியென்றால் 'அனு+ராகமு' என்று பிரிக்கவேண்டும்; அன்றி, 'கானி' சரியென்றால் 'அனுராகமு' என ஓர் சொல்லாகவும், 'மிக்கு காதலுடன்' என்ற பொருளும் கொள்ளலாம்

கத்தூரி - புனுகு
Top

No comments: