Friday, October 10, 2008

ஸ்ரீ ரகு4வர ஸுகு3ணாலய - ராகம் பை4ரவி - SrI Raghuvara Sugunaalaya - Raga Bhairavi

பல்லவி
ஸ்ரீ ரகு4வர 1ஸுகு3ணாலய
ஸரஸிஜ லோசன விரோசனாப4

அனுபல்லவி
2தரான லேனி பராகுலேடிகி
பி3ரான நனு ப்3ரோவக3 ராதா3 வாதா3 (ஸ்ரீ)

சரணம்
சரணம் 1
கமலா ஹித நத கமலாஹித த4
மமத தெலிஸி நன்னு மன்னிஞ்ச ராதா3 (ஸ்ரீ)

சரணம் 2
கலஸ1 ஜலதி4லோ லக்ஷ்மிதோ நாடே3
3கல காலமுன நீ ஸேவ ரா ஜேஸே (ஸ்ரீ)

சரணம் 3
கனிகரமுன நனு கனி கரமுனனிடி3
சனுவுனனொக மனவினி பல்க ராதா3 (ஸ்ரீ)

சரணம் 4
ஆக3ம மூல அவனிஜா லோல
வேக3மே தெலுஸுகோ த்யாக3ராஜார்சித (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
இரகுவரா! நற்குணங்களினுறைவிடமே! கமலக்கண்ணா! பரிதியின் ஒளியோனே!
கமலைக்கினியோனே! பிறைசூடியால் வணங்கப்பெற்றோனே! ஆகம மூலமே!
புவிமகளிடம் திளைப்போனே! தியாகராஜனால் தொழப்பெற்றோனே!

  • குலத்திலில்லாத அசட்டையேன்? விரைவிலென்னைக் காக்கலாகாதா? வாதா?
  • தன்னவனென் றுணர்ந்து என்னை மன்னிக்கலாகாதா (அல்லது) மதிக்கலாகாதா?
  • பாற்கடலில், இலக்குமியுடன், அன்றே, என்றைக்கும், உனது சேவை பெறச்செய்தாய்
  • கனிவுடன் என்னைக் கண்டு, கைப்பற்றி, அன்பாகப் பகரலாகாதா?
  • விரைவில் அறிந்துகொள்வாய்;


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ ஸுகு3ண/-ஆலய/
ஸ்ரீ ரகுவரா/ நற்குணங்களின்/ உறைவிடமே/

ஸரஸிஜ/ லோசன/ விரோசன/-ஆப4/
கமல/ கண்ணா/ பரிதியின்/ ஒளியோனே/



அனுபல்லவி
தரான/ லேனி/ பராகுலு/-ஏடிகி/
குலத்தில்/ இல்லாத/ அசட்டை/ ஏன்/

பி3ரான/ நனு/ ப்3ரோவக3 ராதா3/ வாதா3/
விரைவில்/ என்னை/ காக்கலாகாதா/ வாதா/




சரணம்
சரணம் 1
கமலா/ ஹித/ நத/ கமலா/-அஹித/ த4ர/
கமலைக்கு/ இனியோனே/ வணங்கப்பெற்றோனே/ கமல/ பகைவனை (மதி)/ அணிவோனால்/

மமத/ தெலிஸி/ நன்னு/ மன்னிஞ்ச ராதா3/
தன்னவன் என்று/ உணர்ந்து/ என்னை/ மன்னிக்கலாகாதா (அல்லது) மதிக்கலாகாதா/




சரணம் 2
கலஸ1/ ஜலதி4லோ/ லக்ஷ்மிதோ/ நாடே3/
குட/ கடலில் (பாற்கடல்)/ இலக்குமியுடன்/ அன்றே/

கல காலமுன/ நீ/ ஸேவ/ ரா/ ஜேஸே/
என்றைக்கும்/ உனது/ சேவை/ வர/ செய்யும்/ இரகுவரா...




சரணம் 3
கனிகரமுன/ நனு/ கனி/ கரமுன/-இடி3/
கனிவுடன்/ என்னை/ கண்டு/ கை/ பற்றி/

சனுவுன/-ஒக/ மனவினி/ பல்க ராதா3/
அன்பாக/ ஒரு/ வேண்டுதல்/ பகரலாகாதா/




சரணம் 4
ஆக3ம/ மூல/ அவனிஜா/ லோல/
ஆகம/ மூலமே/ புவிமகளிடம்/ திளைப்போனே/

வேக3மே/ தெலுஸுகோ/ த்யாக3ராஜ/-அர்சித/
விரைவில்/ அறிந்துகொள்வாய்/ தியாகராஜனால்/ தொழப்பெற்றோனே/



குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

1ஸுகு3ணாலய - ஸுகு3ணாலய ராம - ஸுகு3ணாலய (ராம)

3கல காலமுன நீ ஸேவ ரா ஜேஸே - நா மனஸெரிகி3 பல்குமிகனு - கல காலமுன நீ ஸேவ ரா ஜேஸே நா மனஸெரிகி3 பல்குமிகனு;

சில புத்தகங்களில் இந்த சரணம் கொடுக்கப்படவில்லை

Top



மேற்கோள்கள்

விளக்கம்

2தரான லேனி - 'தரான' என்ற சொல்லின் வடிவமும் பொருளும் சரிவரத் தெரியவில்லை.

அனுபல்லவியிலும் சரணம் 1, 3 மற்றும் 4-ல் தியாகராஜர் இறைவனை, தனக்காக இரங்கும்படி வேண்டுகின்றார். ஆனால் இரண்டாவது சரணத்தில் தனக்கு இறைவன் என்றைக்கும் பாற்கடலில் சேவையினை அருளியதாகக் கூறுகிறார். எனவே, இரண்டாவது சரணம், அனுபல்லவியிலும் சரணம் 1, 3 மற்றும் 4-லும் காணும் பொருளுக்கு எதிரிடையாக உள்ளது. அதனால் இந்த சரணம் யாராலோ திணிக்கப்பட்டதாகக் கருதத் தோன்றுகின்றது.

கமலை - இலக்குமி

பிறை சூடி - சிவன்

புவிமகள் - சீதை
Top



No comments: