Sunday, October 12, 2008

ஸ்ரீ ராம பாத3மா - ராகம் அம்ரு2த வாஹினி - Sri Rama Paadama - Raga Amrta Vaahini

பல்லவி
ஸ்ரீ ராம பாத3மா நீ க்ரு2ப சாலுனே
சித்தானிகி ராவே

அனுபல்லவி
வாரிஜ ப4வ ஸனக ஸனந்த3
வாஸவாதி3 நாரது3லெல்ல பூஜிஞ்சே (ஸ்ரீ)

சரணம்
1தா3ரினி ஸி1லயை தாபமு தாளக
வாரமு கன்னீருனு ரால்சக3
2ஸூ1ர அஹல்யனு ஜூசி ப்3ரோசிதிவி
ஆ ரீதி த4ன்யு ஸேயவே த்யாக3ராஜ கே3யமா (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
மலரோன், சனகர், சனந்தனர், வாசவன், நாரதர் ஆகியோர் தொழும், தியாகராசனால் பாடப்பெற்ற, இராமனின் திருவடியே!

  • உனது கிருபை போதுமே; எனதுள்ளத்துள் வாராய்!
  • வழியில் கல்லாகி, வெம்மை தாளாது, எவ்வமயமும் கண்ணீர் உதிர்த்திருந்த அகலிகையைக் கண்டு காத்தாய்;
  • அவ்விதம் (என்னையும்) பேறுறச்செய்வாய்;



  • பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸ்ரீ ராம/ பாத3மா/ நீ/ க்ரு2ப/ சாலுனே/
    ஸ்ரீ ராமனின்/ திருவடியே/ உனது/ கிருபை/ போதுமே/

    சித்தானிகி/ ராவே/
    (எனது) உள்ளத்துள்/ வாராய்/



    அனுபல்லவி
    வாரிஜ ப4வ/ ஸனக/ ஸனந்த3ன/
    மலரோன்/ சனகர்/ சனந்தனர்/

    வாஸவ/-ஆதி3/ நாரது3லு/-எல்ல/ பூஜிஞ்சே/
    வாசவன்/ முதலாக/ நாரதர்/ ஆகியோரும்/ தொழும்/ இராமனின் ...


    சரணம்
    தா3ரினி/ ஸி1லயை/ தாபமு/ தாளக/
    வழியில்/ கல்லாகி/ வெம்மை/ தாளாது/

    வாரமு/ கன்னீருனு/ ரால்சக3/
    எவ்வமயமும்/ கண்ணீரை/ உதிர்க்க/

    ஸூ1ர/ அஹல்யனு/ ஜூசி/ ப்3ரோசிதிவி/
    சூர/ அகலிகையை/ கண்டு/ காத்தாய்/

    ஆ ரீதி/ த4ன்யு ஸேயவே/ த்யாக3ராஜ/ கே3யமா/
    அவ்விதம்/ பேறுறச்செய்வாய்/ தியாகராசனால்/ பாடப்பெற்ற/
    இராமனின்...

    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்

    விளக்கம்

    1தா3ரினி ஸி1லயை - வழியில் கல்லாகி - அகலிகை, தனது கணவர் கௌதம முனிவரால், கல்லாக சாபமிடப்பட்டாள் என நம்புகின்றோம். ஆனால் வால்மீகி ராமாயணம் அவள் சாம்பலாக சாபமிடப்பட்டாள் என்று கூறும்.
    வால்மீகி ராமாயணம் - அகலிகையின் சாபம் நோக்க

    2ஸூ1ர அஹல்ய - கௌதம முனிவர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில், இந்திரன், கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அகலிகையுடன் கலவி கொண்டான். வந்திருப்பது தனது கணவன் அல்லவென்றறி்ந்தும் அகலிகை அதற்கு உடன்பட்டாள். இதனையறிந்த கௌதம முனிவர் இந்திரனையும் தனது மனைவியையும் சபித்தார். ராமனால் அகலிகைக்கு சாப விமோசனம் கிட்டும் என்றும் விதித்தார்.

    மலரோன் - பிரமன்

    சனகர், சனந்தனர் - பிரமனின் மைந்தர்கள்.

    வாசவன் - இந்திரன்
    Top


    No comments: