Thursday, October 9, 2008

லலிதே ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4 - ராகம் பை4ரவி - Lalite Sri Pravrddhe - Raga Bhairavi

பல்லவி
லலிதே 1ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4 ஸ்ரீமதி
லாவண்ய 2நிதி4மதி

அனுபல்லவி
தெலிவினி வர்தி4ல்லு ஸ்ரீ
தபஸ்தீர்த2 நக3ர நிலயே (ல)

சரணம்
சரணம் 1
தெலியனி பா3லுட3 காதா3 அம்ப3
தெலிவி நீ ஸொம்மு காதா3
சலமு ஸேய 3மரியாதா3
சல்லனி மாடலு பல்க ராதா3 (ல)

சரணம் 2
4ப்3ரோசு வாரிலனு லேக
ஜூசி ஜூட3க பராகா
5ஈஸு ஜனுல வேட33 லேக
நே தா3ஸுட3 நீவே க3தி கா3க (ல)

சரணம் 3
கன்ன தல்லி ஸு14 வத3னே மீ-
யன்ன த3யகு பாத்ருட3 நே
தின்னக31ரணு ஜொச்சிதினே
த்யாக3ராஜ மானஸ ஸத3னே (ல)


பொருள் - சுருக்கம்
தாயே லலிதா! பெருந்திருப்பிராட்டியே! திருமதியே! எழிற்கடலே!
அறிவினைப் பெருக்கும், திருத்தவத்துறை நகருறைபவளே!
ஈன்ற தாயே! மங்கல வதனத்தினளே! தியாகராசனின் மனத்துறைபவளே!

  • அறியாத சிறுவனன்றோ (நான்), அறிவு உந்தன் சொத்தன்றோ?
  • பிடிவாதம் செய்தல் மரியாதையோ? குளிர்ந்த சொல் பகரலாகாதோ?
  • காப்போர் புவியில் இலர்; கண்டும் காணாது அசட்டை செய்யாதே;
  • நானுனது தொண்டன்; பொறாமையுடையோரை வேண்டேன்; நீயே புகலன்றோ?
  • உமது தமையனின் அருளுக்கு உரியவன் நான்; நேரிடையாக உன்னை சரணடைந்தேனே;


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லலிதே/ ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4/ ஸ்ரீமதி/
தாயே லலிதா/ பெருந்திருப்பிராட்டியே/ திருமதியே/

லாவண்ய/ நிதி4மதி/
எழில்/ கடலே/



அனுபல்லவி
தெலிவினி/ வர்தி4ல்லு/ ஸ்ரீ/
அறிவினை/ பெருக்கும்/ திரு/

தபஸ்தீர்த2/ நக3ர/ நிலயே/
தவத்துறை/ நகர்/ உறைபவளே/



சரணம்
சரணம் 1
தெலியனி/ பா3லுட3 காதா3/ அம்ப3/
அறியாத/ சிறுவனன்றோ/ தாயே/

தெலிவி/ நீ/ ஸொம்மு காதா3/
அறிவு/ உந்தன்/ சொத்தன்றோ/

சலமு/ ஸேய/ மரியாதா3/
பிடிவாதம்/ செய்தல்/ மரியாதையோ/

சல்லனி/ மாடலு/ பல்க ராதா3/
குளிர்ந்த/ சொல்/ பகரலாகாதோ/


சரணம் 2
ப்3ரோசு வாரு/-இலனு/ லேக/
காப்போர்/ புவியில்/ இலராதலால்/

ஜூசி/ ஜூட3க/ பராகா/
கண்டும்/ காணாது/ அசட்டையோ/

ஈஸு ஜனுல/ வேட33 லேக/
பொறாமையுடையோரை/ வேண்டாது/

நே/ தா3ஸுட3/ நீவே/ க3தி/ கா3க/
நான்/ உனது/ தொண்டன்/ நீயே/ புகலன்றோ/


சரணம் 3
கன்ன/ தல்லி/ ஸு14/ வத3னே/ மீ/-
ஈன்ற/ தாயே/ மங்கல/ வதனத்தினளே/ உமது/

அன்ன/ த3யகு/ பாத்ருட3/ நே/
தமையனின்/ அருளுக்கு/ உரியவன்/ நான்/

தின்னக3/ ஸ1ரணு/ ஜொச்சிதினே/
நேரிடையாக/ சரண்/ அடைந்தேனே/

த்யாக3ராஜ/ மானஸ/ ஸத3னே/
தியாகராஜனின்/ மனத்தில்/ உறைபவளே/

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

3மரியாதா3 - மரியாதா3 அம்ப3

4ப்3ரோசு வாரிலனு லேக - ப்3ரோசு வாரிலனு லேக அம்ப3

5ஈஸு ஜனுல - இதனை 'ஈ-ஸுஜனுல' என்று பிரிக்கக்கூடாது.
Top

மேற்கோள்கள்

1ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4 ஸ்ரீமதி -
பெருந்திருப்பிராட்டி - திருமதி - இவையிரண்டும் திருத்தவத்துறை கோயிலில் அம்மன் பெயர்

'ஸ்ரீ ப்ரவ்ரு2த்34' என்பது 'பெருந்திருப்பிராட்டி'யின் வடமொழிபெயர்ப்பு என கருதுகின்றேன்.

'ஸ்ரீ தபஸ்தீர்த2புரி' எனப்படும் திருத்தவத்துறை கோவிலைப் பற்றி விவரங்கள்
பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ்

Top

விளக்கம்

2நிதி4மதி - இதனை 'ஸ்ரீமதி' போன்று கொள்ளவேண்டும்; 'மதி' என்ற சொல்லுக்கு இங்கு தனியாக ஏதும் பொருளில்லை

பிடிவாதம் - கோபம் என்றும் கொள்ளலாம்

தமையன் - இராமன்

Top


2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1 ல் தெலியனி பா3லுட3 என்றுள்ளது. பா3லுடு3 என்பது சரியா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'பா3லுடு3' என்பதும் சரிதான். ஆனால் எல்லா புத்தகங்களிலும், 'பா3லுட3' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை, அச்சொல் தவறாகாது.

வணக்கம்,
கோவிந்தன்