Tuesday, October 28, 2008

ரகு4 நந்த3ன ராஜ மோஹன - ராகம் ஸுத்3த4 தே3ஸி1 - Raghunandana - Raga Suddha Desi

பல்லவி
ரகு4 நந்த31ராஜ மோஹன
ரமியிம்பவே நா மனஸுன

அனுபல்லவி
நக3ஜானிலஜ நாரதா3தி3
ஹ்ரு2ந்-2நாளிக 3நிவாஸுடை3 கானி ஸ்1ரீ (ரகு4)

சரணம்
சித்தமந்து3 நின்னுஞ்சி ப்ரேமதோ
சிந்திஞ்சு ஸத்34க்துல-
4நுத்தமோத்தமுலஞ்சு நா மதி3-
நுஞ்சி பூஜிஞ்ச லேதா3
தத்தரம்பு3 தீர்சு காரணம்பு3 நீவே
தாள ஜாலனிக த்யாக3ராஜ நுத (ரகு4)


பொருள் - சுருக்கம்
இரகுநந்தனா! வனப்பினரசே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

மலைமகள், அனுமன், நாரதர் ஆகியோர் இதயக் கமலத்தினில் உறைவோனாயினும், எனதுள்ளத்திலும் களித்திருப்பாய்!

உள்ளத்தில் உன்னையிருத்தி, காதலுடன், சிந்திக்கும் நற்றொண்டர்களை, உத்தமரிலும் உத்தமரென்றெண்ணி, எனதுள்ளத்தினில் (உன்னை) இருத்தி வழிபட்டேன்;
(எனது) தடுமாற்றத்தினைத் தீர்க்கும் காரணம் நீயே; தாளவியலேன் இனியும்.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4/ நந்த3ன/ ராஜ/ மோஹன/
இரகு/ நந்தனா/ அரசே/ வனப்பின்/

ரமியிம்பவே/ நா/ மனஸுன/
களித்திருப்பாய்/ எனது/ உள்ளத்தில்/

அனுபல்லவி
நக3ஜா/-அனிலஜ/ நாரத3/-ஆதி3/
மலைமகள்/ அனுமன்/ நாரதர்/ ஆகியோர்/

ஹ்ரு2ந்/-நாளிக/ நிவாஸுடு3/-ஐன-கானி/ ஸ்1ரீ/ (ரகு4)
இதய/ கமலத்தினில்/ உறைவோன்/ என்றாலும்/ ஸ்ரீ/ இரகு..

சரணம்
சித்தமந்து3/ நின்னு/-உஞ்சி/ ப்ரேமதோ/
உள்ளத்தில்/ உன்னை/ இருத்தி/ காதலுடன்/

சிந்திஞ்சு/ ஸத்34க்துலனு/-
சிந்திக்கும்/ நற்றொண்டர்களை/

உத்தம/-உத்தமுலு/-அஞ்சு/ நா/ மதி3னி/-
உத்தமரிலும்/ உத்தமர்/ என்று/ எனது/ உள்ளத்தினில்/

உஞ்சி/ பூஜிஞ்ச லேதா3/
(உன்னை) இருத்தி/ வழிபடவில்லையா/

தத்தரம்பு3/ தீர்சு/ காரணம்பு3/ நீவே/
(எனது) தடுமாற்றத்தினை/ தீர்க்கும்/ காரணம்/ நீயே/

தாள/ ஜாலனு/-இக/ த்யாக3ராஜ/ நுத/ (ரகு4)
தாள/ இயலேன்/ இனியும்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2நாளிக - நாளீகா - இரண்டு சொற்களும் சரியென்று தோன்றுகின்றது.
3நிவாஸுடை3 - நிவாஸுடை3 : பிற்கொடுக்கப்பட்ட சொல் தவறாகும்.
4உத்தமோத்தமுலஞ்சு - உத்தமோத்தமுலனு்சு

மேற்கோள்கள்

விளக்கம்
1ராஜ மோஹன - 'ராஜ' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்றும் 'மதி'யென்றும் பொருளாகும். இரண்டுமே இங்கு பொருந்துவதனால் 'ராஜ மோஹன' என்பதன் சரியான பொருள் தெரியவில்லை

மலைமகள் - பார்வதி
Top


No comments: