Monday, October 27, 2008

எந்து3 கௌக3லிந்துரா - ராகம் ஸுத்3த4 தே3ஸி1 - Endu Kaugalintura - Raga Suddha Desi

பல்லவி
எந்து3 1கௌக3லிந்துரா
நின்னெந்தனி வர்ணிந்துரா நி(ன்னெந்து3)

அனுபல்லவி
2அந்த3மைன குந்த3 ரத3
இந்தி3ரா ஹ்ரு2ன்மந்தி3ர நி(ன்னெந்து3)

சரணம்
நீது3 பலுகே பலுகுரா
நீது3 குலுகே குலுகுரா
நீது3 தளுகே தளுகுரா
3நிஜமைன த்யாக3ராஜ நுத நி(ன்னெந்து3)


பொருள் - சுருக்கம்
அழகிய, முல்லைப்பற்களோனே! இந்திரையின் இதயத்துறைவோனே!

உனது சொல்லே சொல்லாகுமய்யா; உனது குலுக்கே குலுக்காகுமய்யா; உனது தளுக்கே தளுக்காகுமய்யா;
மெய்ப்பொருளான, தியாகராசனால் போற்றப்பெற்ற, உன்னையெங்கு அரவணைப்பேனய்யா? உன்னையென்னவென்று வருணிப்பேனய்யா?

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3/ கௌக3லிந்துரா/
எங்கு/ அரவணைப்பேனய்யா/

நின்னு/-எந்தனி/ வர்ணிந்துரா/ நின்னு/-(எந்து3)
உன்னை/ என்னவென்று/ வருணிப்பேனய்யா/ உன்னை/ ...

அனுபல்லவி
அந்த3மைன/ குந்த3/ ரத3ன/
அழகிய/ முல்லை/ பற்களோனே/

இந்தி3ரா/ ஹ்ரு2ன்-மந்தி3ர/ நின்னு/-(எந்து3)
இந்திரையின்/ இதயத்துறைவோனே/ உன்னை/ ..

சரணம்
நீது3/ பலுகே/ பலுகுரா/
உனது/ சொல்லே/ சொல்லாகுமய்யா/

நீது3/ குலுகே/ குலுகுரா/
உனது/ குலுக்கே/ குலுக்காகுமய்யா/

நீது3/ தளுகே/ தளுகுரா/
உனது/ தளுக்கே/ தளுக்காகுமய்யா/

நிஜமைன/ த்யாக3ராஜ/ நுத/ நின்னு/-(எந்து3)
மெய்ப்பொருளான/ தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ உன்னை/..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கௌக3லிந்துரா - எல்லா புத்தகங்களிலும் இவ்விதமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் 'கௌகி3லிந்துரா' சரியான சொல்லாகும்

மேற்கோள்கள்

விளக்கம்
2 - அந்த3மைன - 'அழகிய' - இதனை இறைவனை நேரிடையாக குறிப்பிடுவதாகவோ அல்லது 'அழகிய முல்லைப் பற்கள்' என்றோ கொள்ளலாம்
3 - நிஜமைன - மெய்ப்பொருள் - பரம்பொருள் - சத்-சித்-ஆனந்தம் (சச்சிதானந்தம்) எனும் பரம்பொருளின் இலக்கணத்தில் 'சத்' எனப்படும் 'மெய்ம்மை'யினைக் குறிக்கும்.

எங்கு - எந்த அங்கத்தினை

இந்திரை - இலக்குமி
Top


No comments: