சலமேலரா ஸாகேத ராம
அனுபல்லவி
வலசி ப4க்தி மார்க3முதோனு நின்னு
வர்ணிஞ்சுசுன்ன 1நாதோ (ச)
சரணம்
எந்து3 போது3 நேனேமி ஸேயுது3னு
2எச்சோட நே மொர பெட்டுது3னு
3த3ந்த3னலதோ ப்ரொத்3து3 போவலெனா
தாள ஜாலரா த்யாக3ராஜ நுத (ச)
பொருள் - சுருக்கம்
சாகேதராமா! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
விரும்பி, பத்தி நெறியுடனுன்னை வருணித்துக்கொண்டிருக்கும் என்னிடம் சினமேனய்யா?
எங்கு செல்வேன்? நானேது செய்வேன்? எவ்விடத்தில் நான் முறையிடுவேன்?
(உனது) ஏய்த்தல்களுடன் பொழுது போகவேண்டுமா? தாளவியலேனய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சலமு/-ஏலரா/ ஸாகேத/ ராம/
சினம்/ ஏனய்யா/ சாகேத/ ராமா/
அனுபல்லவி
வலசி/ ப4க்தி/ மார்க3முதோனு/ நின்னு/
விரும்பி/ பத்தி/ நெறியுடன்/ உன்னை/
வர்ணிஞ்சுசு-உன்ன/ நாதோ/
வருணித்துக்கொண்டிருக்கும்/ என்னிடம்/ சினம் ..
சரணம்
எந்து3/ போது3/ நேனு/-ஏமி/ ஸேயுது3னு/
எங்கு/ செல்வேன்/ நான்/ ஏது/ செய்வேன்/
எச்சோட/ நே/ மொர/ பெட்டுது3னு/
எவ்விடத்தில்/ நான்/ முறை/ இடுவேன்/
த3ந்த3னலதோ/ ப்ரொத்3து3/ போவலெனா/
ஏய்த்தல்களுடன்/ பொழுது/ போகவேண்டுமா/
தாள/ ஜாலரா/ த்யாக3ராஜ/ நுத/
தாள/ இயலேனய்யா/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நாதோ - நாபை
2 - எச்சோட நே - எச்சோடனி
மேற்கோள்கள்
விளக்கம்
3 - த3ந்த3னலதோ - ஏய்த்தல்களுடன் - இச்சொல், இவ்விடத்தில் தியாகராஜருக்கும் பொருந்தும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் இச்சொல் இறைவனைக் குறிப்பதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இங்கும் அவ்வகையிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Top
No comments:
Post a Comment