அனாது2ட3னு கானு ராம நே(னனாது2)
அனுபல்லவி
1அனாது2ட3வு நீவனி நிக3மக்3ஞுல
2ஸனாதனுல மாட வின்னானு நே(னனாது2)
சரணம்
நிராத3ரவு ஜூசியீ கலி
நராத4முலனெத3ரு
புராண புருஷ புர ரிபு நுத
நாக3-ராட் ஸ1யன த்யாக3ராஜ நுத நே(னனாது2)
பொருள் - சுருக்கம்
இராமா! பழம்பொருளே! புரமெரித்தோனால் போற்றப்பெற்றோனே!
அரவரசன் மேற்றுயில்வோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
அனாதையன்று நான்;
அனாதை நீயென மறையுணர்ந்தோர் மற்றும் சனாதனர் முதலானோரின் சொல் கேள்வியுற்றேன்;
(எனது) ஆதரவின்மை கண்டு, இக்கலியின் இழிந்த மனிதர்கள் பகன்றனர் அங்ஙனம்; ஆனால்,
நான் அனாதையன்று
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அனாது2ட3னு/ கானு/ ராம/ நேனு/-(அனாது2)
அனாதை/ அன்று/ இராமா/ நான்/
அனுபல்லவி
அனாது2ட3வு/ நீவு/-அனி/ நிக3மக்3ஞுல/
அனாதை/ நீ/ என/ மறையுணர்ந்தோர்/
ஸனாதனுல/ மாட/ வின்னானு/ நேனு/-(அனாது2)
சனாதனர் முதலானோரின்/ சொல்/ கேள்வியுற்றேன்/ நான்/ ..
சரணம்
நிராத3ரவு/ ஜூசி/-ஈ கலி/
ஆதரவின்மை/ கண்டு/ இக்கலியின்/
நர/-அத4முலு/-அனெத3ரு/
மனிதரில்/ இழிந்தோர்/ பகன்றனர்/
புராண/ புருஷ/ புர/ ரிபு/ நுத/
பழம்/ பொருளே/ புர/ வைரியால்/ போற்றப்பெற்றோனே/
நாக3/-ராட்/ ஸ1யன/ த்யாக3ராஜ/ நுத/ நேனு/-(அனாது2)
அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ நான்/ ..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1அனாது2ட3வு - பரம்பொருளுக்கு மேற்பட்ட தலைவனின்மையால் இறைவனை 'அனாதை' என்று கூறுவர். ஸௌந்தர்ய லஹரி, 41-வது ஸ்லோகத்தை விவரிக்கையில் இதுபற்றி காஞ்சி முனிவரின் கருத்தினை நோக்கவும்
No comments:
Post a Comment