Thursday, October 9, 2008

ஸ்ரீ நாரத3 முனி - ராகம் பை4ரவி - Sri Narada Muni - Raga Bhairavi

பல்லவி
ஸ்ரீ நாரத3 முனி கு3ரு 1ராய கண்டி-
மே நாடி தபமோ கு3ரு ராய

சரணம்
சரணம் 1
மனஸார கோரிதி கு3ரு ராய நேடு3
கனுலார கனுகொண்டிமி கு3ரு ராய (ஸ்ரீ)

சரணம் 2
மீ ஸேவ தொ3ரிகெனு கு3ரு ராய4
பாஸ1மு தொலகெ3னு கு3ரு ராய (ஸ்ரீ)

சரணம் 3
நீவே 2ஸு-ஞான ஸுகி2 கு3ரு ராய
நீவேயக்3ஞான2 ஸி1கி2 கு3ரு ராய (ஸ்ரீ)

சரணம் 4
ராஜில்லு வீணெ க3ல கு3ரு ராய த்யாக3-
ராஜுனி ப்3ரோசின ஸத்3-கு3ரு ராய (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
திகழும் வீணையுடைய நாரத முனி குருராயரே!
தியாகராசனைக் காத்த சற்குருராயரே!

  • என்று செய்த தவத்தின் பயனாகவோ இன்று உம்மைக் கண்டோம்;
  • மனதார வேண்டினோம்; இன்று கண்ணாரக் கண்டுகொண்டோம்;
  • உமது சேவை கிடைத்தது; அதனால் பிறவிக் கட்டு தொலைந்து;
  • நீரே மெய்யறிவிற் களிப்பவர்; நீரே அறிவின்மைக்கு நெருப்பு;

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ நாரத3/ முனி/ கு3ரு/ ராய/ கண்டிமி/-
ஸ்ரீ நாரத/ முனி/ குரு/ ராயரே/ கண்டோம்/

ஏ நாடி/ தபமோ/ கு3ரு/ ராய/
என்று செய்த/ தவமோ/ குரு/ ராயரே/



சரணம்
சரணம் 1
மனஸார/ கோரிதி/ கு3ரு/ ராய/ நேடு3/
மனதார/ வேண்டினோம்/ குரு/ ராயரே/ இன்று/

கனுலார/ கனுகொண்டிமி/ கு3ரு/ ராய/
கண்ணார/ கண்டுகொண்டோம்/ குரு/ ராயரே/



சரணம் 2
மீ/ ஸேவ/ தொ3ரிகெனு/ கு3ரு/ ராய/ ப4வ/
உமது/ சேவை/ கிடைத்தது/ குரு/ ராயரே/ பிறவி/

பாஸ1மு/ தொலகெ3னு/ கு3ரு/ ராய/
கட்டு/ தொலைந்து/ குரு/ ராயரே/


சரணம் 3
நீவே/ ஸு-ஞான/ ஸுகி2/ கு3ரு/ ராய/
நீரே/ மெய்யறிவில்/ களிப்பவர்/ குரு/ ராயரே/

நீவே/-அக்3ஞான/ ஸி1கி2/ கு3ரு/ ராய/
நீரே/ அறிவின்மைக்கு/ நெருப்பு/ குரு/ ராயரே/


சரணம் 4
ராஜில்லு/ வீணெ/ க3ல/ கு3ரு/ ராய/
திகழும்/ வீணை/ உடைய/ குரு/ ராயரே/

த்யாக3ராஜுனி/ ப்3ரோசின/ ஸத்3-கு3ரு/ ராய/
தியாகராஜனை/ காத்த/ சற்குரு/ ராயரே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1ராய - ராயா - (எல்லாவிடங்களிலும்)

சரணம் 1 - சில புத்தகங்களில் இது அனுபல்லவியாக கொடுக்கப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

2ஸு-ஞான - அக்3ஞான - (வித்யை - அவித்யை) - இச்சொற்களைப் பற்றிய விளக்கத்திற்கு ஸ்வாமி விரேஷ்வரானந்தா எழுதிய பிரம்ம சூத்திர விளக்கவுரையில் (பக்கம் 12 - 16 -ல்) காணவும். ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் பிரம்ம சூத்திரம் வி்ளக்கவுரை (Download)

விளக்கம்

1ராயர் - தலையாய - மதிப்புச் சொல்
Top



No comments: