பல்லவி
ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம1
சரணம்
சரணம் 1
ராம ஸீதா பதி ராம நீவே க3தி
ராம நீகு ம்ரொக்கிதி ராம நீ சே ஜிக்கிதி (ரா)
சரணம் 2
ராம நீகெவரு ஜோடு3 ராம க்ரீ-கண்ட ஜூடு3
ராம நேனு நீவாடு3 ராம நாதோ மாடாடு3 (ரா)
சரணம் 3
2ராம நாமமே மேலு ராம சிந்தனே சாலு
ராம நீவு நன்னேலு ராம ராயடே3 சாலு (ரா)
சரணம் 4
ராம 3நீகொக மாட ராம நாகொக மூட
ராம நீ பாடே பாட ராம 4நீ பா3டே பா3ட (ரா)
சரணம் 5
ராம 5நேனெந்தை3னனு ராம வேரெஞ்ச லேனு
ராமயென்னடை3னனு ராம பா3யக லேனு (ரா)
சரணம் 6
ராம விராஜ ராஜ ராம முக2 ஜித ராஜ
ராம ப4க்த ஸமாஜ ரக்ஷித த்யாக3ராஜ (ரா)
பொருள் - சுருக்கம்
இராமா! கோதண்டராமா! கல்யாணராமா! சீதை மணாளா!
கருடன் தலைவனே! மதியை வெல்லும் முகத்தோனே!
தொண்டர் குழுமத்துளோனே! தியாகராசனைக் காப்போனே!
நீயே புகல்; உன்னை வணங்கினேன்; உன் கையில் சிக்கினேன்;
- உனக்கெவரீடு? கடைக்கண்ணால் நோக்குவாய்; நான் உன்னவன்; என்னுடன் பேசுவாய்;
- இராம நாமமே மேலானது; இராமனின் சிந்தனையே போதுமானது; நீ என்னையாள்வாய்; இராமனெனும் தலைவனே போதுமானது;
- உனக்கொரு சொல், எனக்கொரு மூட்டை; உனது பாடலே பாடலாகும்; உனது வழியே வழியாகும்;
- நான் எங்கிருந்தாலும், வேறெண்ணேன்; என்றாகிலும், உன்னைப் பிரியேன்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ கோத3ண்ட3/ ராம/ ராம/ கல்யாண/ ராம/
இராமா/ கோதண்ட/ ராமா/ இராமா/ கல்யாண/ ராமா/
சரணம்
சரணம் 1
ராம/ ஸீதா/ பதி/ ராம/ நீவே/ க3தி/
இராமா/ சீதை/ மணாளா/ இராமா/ நீயே/ புகல்/
ராம/ நீகு/ ம்ரொக்கிதி/ ராம/ நீ/ சே/ ஜிக்கிதி/
இராமா/ உன்னை/ வணங்கினேன்/ இராமா/ உன்/ கையில்/ சிக்கினேன்/
சரணம் 2
ராம/ நீகு/-எவரு/ ஜோடு3/ ராம/ க்ரீ-கண்ட/ ஜூடு3/
இராமா/ உனக்கு/ எவர்/ ஈடு/ இராமா/ கடைக்கண்ணால்/ நோக்குவாய்/
ராம/ நேனு/ நீவாடு3/ ராம/ நாதோ/ மாட-ஆடு3/
இராமா/ நான்/ உன்னவன்/ இராமா/ என்னுடன்/ பேசுவாய்/
சரணம் 3
ராம/ நாமமே/ மேலு/ ராம/ சிந்தனே/ சாலு/
இராம/ நாமமே/ மேலானது/ இராமனின்/ சிந்தனையே/ போதுமானது/
ராம/ நீவு/ நன்னு/-ஏலு/ ராம/ ராயடே3/ சாலு/
இராமா/ நீ/ என்னை/ ஆள்வாய்/ இராமனெனும்/ தலைவனே/ போதுமானது/
சரணம் 4
ராம/ நீகு/-ஒக/ மாட/ ராம/ நாகு/-ஒக/ மூட/
இராமா/ உனக்கு/ ஒரு/ சொல்/ இராமா/ எனக்கு/ ஒரு/ மூட்டை/
ராம/ நீ/ பாடே/ பாட/ ராம/ நீ/ பா3டே/ பா3ட/
இராமா/ உனது/ பாடலே/ பாடல்/ இராமா/ உனது/ வழியே/ வழி/
சரணம் 5
ராம/ நேனு/-எந்து3/-ஐனனு/ ராம/ வேரு/-எஞ்ச/ லேனு/
இராமா/ நான்/ எங்கு/ இருந்தாலும்/ இராமா/ வேறு/ எண்ண/ மாட்டேன்/
ராம/-என்னடு3/-ஐனனு/ ராம/ பா3யக/ லேனு/
இராமா/ என்றாகிலும்/ இராமா/ உன்னை/ பிரிய/ மாட்டேன்/
ராம/ வி-ராஜ/ ராஜ/ ராம/ முக2/ ஜித/ ராஜ/
இராமா/ கருடன்/ தலைவனே/ இராமா/ முகத்தோனே/ வெல்லும்/ மதியை
ராம/ ப4க்த/ ஸமாஜ/ ரக்ஷித/ த்யாக3ராஜ/
இராமா/ தொண்டர்/ குழுமத்துளோனே/ காப்போனே/ தியாகராசனை/
வேறுபாடுகள் - (Pathanthara)
1 ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம -
ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம ராம ஸாகேத ராம ராம பட்டாபி4ராம
மேற்கோள்கள்
2ராம நாமமே மேலு - ராம நாமம் பிரணவத்திற்கீடான தாரக நாமமாக கருதப்ப்டும். காஞ்சி மஹாஸ்வாமிகளின் பிரசங்கம் நோக்குக
விளக்கம்
3நீகொக மாட ராம நாகொக மூட - ஒரு பிடி அவலுக்கு, குசேலர் என்றழைக்கப்படும் சுதாமாவுக்குக் கண்ணன் பெரும் செல்வத்தையளித்தான்.
4நீ பா3டே பா3ட - இராமனின் காதை மனித வாழ்வுக்கோர் வழிகாட்டியாகும்.
5நேனெந்தை3னனு ராம வேரெஞ்ச லேனு - இறைவனை துன்பம் நேர்கையில் மட்டுமே நினைக்கும் உலகோரை நோக்கி கபீர்தாஸர் பாடுகிறார்
“இன்பத்திலும் இறைவனை நினைத்தால், துன்பம் ஏன் நேரும்?”
பாண்டவர்களின் தாயாரும் கண்ணனுக்கு அத்தையுமான குந்தி கண்ணனை நோக்கிச் சொல்வது -
“எம்மை எப்போதுமே துன்பங்களே சூழ்ந்திருக்கட்டும்; ஏனெனில் இடர்களிலே உன்னுடைய தரிசனம் எமக்குக் கிடைக்கின்றதல்லவா?”
மூட்டை - பெரும் செல்வம்
Top
3 comments:
very nice explanation and description.. thank you very much!!
Very nice explanation and interest to learn thanks a lot.
Thank you
Post a Comment