Wednesday, October 15, 2008

ராம ராம நீவாரமு - ராகம் ஆனந்த3 பை4ரவி - Rama Rama Neevaramu - Raga Ananda Bhairavi

பல்லவி
ராம ராம நீவாரமு கா3மா ராம ஸீதா
ராம ராம ஸாது4 ஜன ப்ரேம ராரா

சரணம்
சரணம் 1
மெருகு3 சேலமு 1கட்டுக மெல்ல ராரா ராம
கரகு33ங்கா3ரு ஸொம்முலு கத3ல ராரா (ராம)

சரணம் 2
வரமைனட்டி ப4க்தாபீ4ஷ்ட வரத3 ராரா ராம
2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம ராரா (ராம)

சரணம் 3
மெண்டை3ன கோத3ண்ட3 காந்தி மெரய ராரா கனுல
பண்டு3வக3யுண்டு3 3உத்33ண்ட3 ராரா (ராம)

சரணம் 4
சிரு நவ்வு க3ல மோமு ஜூப ராரா ராம
கருணதோ நன்னெல்லப்புடு3 காவ ராரா (ராம)

சரணம் 5
கந்த3ர்ப ஸுந்த3ரானந்த3 கந்த3 ராரா நீகு
வந்த3னமு ஜேஸெத3 கோ3விந்த3 ராரா (ராம)

சரணம் 6
ஆத்3யந்த ரஹித வேத3 வேத்3ய ராரா 44
வேத்3
நே நீவாட3னைதி வேக3 ராரா (ராம)

சரணம் 7
ஸு-ப்ரஸன்ன 5ஸத்ய ரூப ஸுகு3ண ராரா ராம
அ-ப்ரமேய த்யாக3ராஜுனேல ராரா (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! நல்லோரின் அன்பே! ஒளிரும் உடையணிந்தோனே!
வரம் நிகர், தொண்டருக்கு வேண்டியதருள்வோனே!
திரையிட்டது போன்ற மகிமை உடையோனே!
கண்களுக்கு விருந்தாக, கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே!
காமனின் எழிலுடையோனே! ஆனந்தக் கிழங்கே!
கோவிந்தா! முதல் முடிவற்றோனே! மறைகளில் அறிப்படுவோனே!
சிவனால் மதிக்கப்பெற்றோனே! அமைதியானவனே!
மெய்ம்மையின் உருவே! நற்குணத்தோனே! அளவிடற்கரியனே!

நான் உன்னவனன்றோ, வாராய்;
மெள்ள வாராய்;
உருக்கிய தங்க அணிகலன்கள் அசைய வாராய்;
கோதண்டத்தின் காந்தி மிக்கொளிர வாராய்;
புன்னகை தவழும் முகத்தைக்காட்ட வாராய்;
கருணையுடன் என்னை யெந்நாளும் காக்க வாராய்;
வந்தனம் செலுத்தினேன், வாராய்;
உன்னவனானேன்; விரைவில் வாராய்;
தியாகராசனையாள வாராய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ நீவாரமு/ கா3மா/ ராம/ ஸீதா/
இராமா/ இராமா/ உன்னவன்/ அன்றோ/ இராமா/ சீதா-/

ராம/ ராம/ ஸாது4 ஜன/ ப்ரேம/ ராரா/
ராமா/ இராமா/ நல்லோரின்/ அன்பே - காதலே/ வாராய்/

சரணம்
சரணம் 1
மெருகு3/ சேலமு/ கட்டுக/ மெல்ல/ ராரா/ ராம/
ஒளிரும்/ உடை/ அணிந்தோய்/ மெள்ள/ வாராய்/ இராமா/

கரகு3/ ப3ங்கா3ரு/ ஸொம்முலு/ கத3ல/ ராரா/
உருக்கிய/ தங்க/ அணிகலன்கள்/ அசைய/ வாராய்/


சரணம் 2
வரமு/-ஐனட்டி/ ப4க்த/-அபீ4ஷ்ட/ வரத3/ ராரா/ ராம/
வரம்/ நிகர்/ தொண்டருக்கு/ வேண்டியதை/ அருள்வோனே/ வாராய்/ இராமா/

மருகு3/ ஜேஸுகொனு/-அட்டி/ மஹிம/ ராரா/
திரை/ இட்டது/ போன்ற/ மகிமை உடையோனே/ வாராய்/


சரணம் 3
மெண்டை3ன/ கோத3ண்ட3/ காந்தி/ மெரய/ ராரா/ கனுல/
மிக்கு/ கோதண்டத்தின்/ காந்தி/ ஒளிர/ வாராய்/ கண்களுக்கு/

பண்டு3வக3/-உண்டு3/ உத்33ண்ட3/ ராரா/
விருந்தாக/ உள்ள/ கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே/ வாராய்/


சரணம் 4
சிரு நவ்வு/ க3ல/ மோமு/ ஜூப/ ராரா/ ராம/
புன்னகை/ தவழும்/ முகத்தை/ காட்ட/ வாராய்/ இராமா/

கருணதோ/ நன்னு/-எல்லப்புடு3/ காவ/ ராரா/
கருணையுடன்/ என்னை/ எந்நாளும்/ காக்க/ வாராய்/


சரணம் 5
கந்த3ர்ப/ ஸுந்த3ர/-ஆனந்த3/ கந்த3/ ராரா/ நீகு/
காமனின்/ எழிலுடை/ ஆனந்த/ கிழங்கே/ வாராய்/ உனக்கு/

வந்த3னமு/ ஜேஸெத3/ கோ3விந்த3/ ராரா/
வந்தனம்/ செலுத்தினேன்/ கோவிந்தா/ வாராய்/


சரணம் 6
ஆதி3/-அந்த/ ரஹித/ வேத3/ வேத்3ய/ ராரா/ ப4வ/
முதல்/ முடிவு/ அற்ற/ மறைகளில்/ அறிப்படுவோனே/ வாராய்/ சிவனால்/

வேத்3ய/ நே/ நீவாட3னு/-ஐதி/ வேக3/ ராரா/
மதிக்கப்பெற்றோனே/ நான்/உன்னவன்/ ஆனேன்/ விரைவில்/ வாராய்/


சரணம் 7
ஸு-ப்ரஸன்ன/ ஸத்ய/ ரூப/ ஸுகு3ண/ ராரா/ ராம/
அமைதியானவனே/ மெய்ம்மையின்/ உருவே/ நற்குணத்தோனே/ வாராய்/ இராமா/

அ-ப்ரமேய த்யாக3ராஜுனு-ஏல ராரா (ராம)
அளவிடற்கரியனே/ தியாகராசனை/ ஆள/ வாராய்/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1கட்டுக - கட்டுகோ : 'கட்டுக' என்ற சொல் சரியாகும்

44வ வேத்3 - ப4வ வைத்3ய : 'ப4வ - வைத்3ய' என்பது சரியானால், இதனை
'உலக வாழ்வெனும் நோயினைப் போக்கும் மருத்துவன் (வைத்தியன்)' என பொருள் கொள்ளப்படும்; ('ப4வ' என்ற சொல்லுக்கு 'சிவனெ'ன்றும், 'உலக வாழ்வெ'ன்றும் பொருள் உண்டு)
Top

மேற்கோள்கள்

2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம - வால்மீகி இராமயணம் யுத்த காண்டம் அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது -


"நான் என்னை, ராமன் எனும் பெயர்கொண்ட, தசரதமன்னனுக்குப் பிறந்த, மனிதனாகவே கருதுகின்றேன்;
நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதனை, கடவுளர் தாங்களே தெரிவிப்பீராக" (11)
ஆனால், அகலிகையினை உயர்த்திய மகிமையோ, கழுகு ஜடாயுவுக்கும், பணிப்பெண் சபரிக்கும் மோக்ஷம் அளித்த மகிமையோ, மனித இலக்கணத்தினில் வாராது. எனவே தியாகராஜர் 'மகிமை திரையிட்டது போன்று' என்கின்றார்.
Top

விளக்கம்

3உத்33ண்ட3 - 'கோல் பிடித்து (உயர்த்தி) நிற்போன்' என பொருள் - இங்கு, 'கோல்', 'கோதண்டத்தினை'க் குறிக்கும்

முதல் முடிவற்ற - இராமன் பரம்பொருளென

5ஸத்ய ரூப : பரம்பொருளின் இலக்கணம் - 'சச்சிதானந்தம்' (ஸத்-சித்-ஆனந்தம்); ஸத்' என்பது 'உண்மை' - 'இன்மை (பொய்)' எனும் உலக வழக்கின் 'இருமை'க்கு மேற்பட்ட, இரண்டும் அடங்கிய (சதாசிவ) நிலையைக் குறிக்கும். இராமன் பரம்பொருள் என்பதனால் 'ஸத்' எனப்படும் 'உண்மை'யின் வடிவாகவோ அல்லது இராமன் தனது அவதாரத்தில் உண்மையின் இலக்கணமாகத் திகழ்ந்ததனால் அந்த 'உண்மை' (இருமை) வடிவென்றோ கொள்ளலாம்.
Top



1 comment:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே.
சரணம் 1 ல் கட்டுக என்பதற்கு உடையணிந்தோனே/ அணிந்தோய் என்று பொருள் கூறியுள்ளீர். கட்டுகொனி/கட்டுகு/கட்டுகுனி என்னும் பேச்சு வழக்குகள் அணிந்து என்னும் பொருள் தரும் என்னும் என் கருத்தினை ஆங்கில கருத்துப் பரிமாற்ற தளத்திலும் கூறியுள்ளேன். கட்டுகு என்பதுதான் சரியான சொல் என்பது என் கருத்து. தமிழில் உடுத்தி/அணிந்து/தரித்து/கட்டிக்கொண்டு என்பன செந்தமிழிலும், கட்டிக்கிட்டு/கட்டிண்டு/கட்டிக்கிணு என்பன பேச்சுவழக்கிலும் உள்ளன.
”அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது” -

அடைப்புக் குறியினை அடுத்து இராமன் என்றிருந்தால் கூறியது சீதையா என்னும் ஐயம் எழ வாய்ப்பிருக்காது.
நன்றி
கோவிந்தசாமி