பல்லவி
நீகே தெலியக போதே
நேனேமி ஸேயுது3ரா
அனுபல்லவி
லோகாதா4ருட3வை நா
லோனி ப்ரஜ்வலிஞ்சு ஜாலி (நீ)
சரணம்
1எந்தெ3ந்து3 ஜூசின எந்தெ3ந்து3 பலிகின
எந்தெ3ந்து3 ஸேவிஞ்சின எந்தெ3ந்து3 பூஜிஞ்சின
அந்த3ந்து3 நீவனி தோசுடந்து3கு நீ
பாதா3ரவிந்த3முனு த்4யானிஞ்சின-
தெ3ந்து3கனி த்யாக3ராஜ ஸன்னுத (நீ)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்றோனே!
உனது திருவடித் தாமரையினை தியானித்தது, எங்கெங்கு நோக்கினும், எவருடன் பகர்ந்தாலும்,
எவரை வணங்கினாலும், எவரை வழிபட்டாலும், அங்கங்கு (அவரவர்) நீயாகவே தோன்றுதற்கு;
பல்லுலகிற்கும் ஆதாரமானவனாகியும், எனது உள்ளத்து, கொழுந்துவிட்டெரியும் துயரம்
ஏனென, உனக்கே தெரியாமற்போனால் நானென்ன செய்வேனய்யா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகே/ தெலியக/ போதே/
உனக்கே/ தெரியாமல்/ போனால்/
நேனு/-ஏமி/ ஸேயுது3ரா/
நான்/ என்ன/ செய்வேனய்யா/
அனுபல்லவி
லோக/-ஆதா4ருட3வை/ நா/
பல்லுலகிற்கும்/ ஆதாரமானவனாகியும்/ எனது/
லோனி/ ப்ரஜ்வலிஞ்சு/ ஜாலி/
உள்ளத்து/ கொழுந்துவிட்டெரியும்/ துயரம்/ உனக்கே..
சரணம்
எந்தெ3ந்து3/ ஜூசின/ எந்தெ3ந்து3/ பலிகின/
எங்கெங்கு/ நோக்கினும்/ எவருடன்/ பகர்ந்தாலும்/
எந்தெ3ந்து3/ ஸேவிஞ்சின/ எந்தெ3ந்து3/ பூஜிஞ்சின/
எவரை/ வணங்கினாலும்/ எவரை/ வழிபட்டாலும்/
அந்த3ந்து3/ நீவ-அனி/ தோசுட-அந்து3கு/ நீ/
அங்கங்கு (அவரவர்)/ நீயாகவே/ தோன்றுதற்கு/ உனது/
பாத3/-அரவிந்த3முனு/ த்4யானிஞ்சினதி3/-
திருவடி/ தாமரையினை/ தியானித்தது/
எந்து3கு-அனி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
ஏனென/ தியாகராசனால்/ சிறக்க/ போற்றப்பெற்றோனே/ உனக்கே..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1எந்தெ3ந்து3 ஜூசின - எங்கெங்கு நோக்கினாலும் நீயாகக் காண - ஸ்ரீமத் பகவத்கீதை, அத்தியாயம் 6-ல் கண்ணன் கூறிய வசனம் -
என்னையெங்குமாகவும் என்னில் யாவுமாகவும் எவன் காண்கின்றானோ
அவனிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவனும் பிரிவதில்லை 30
விளக்கம்
Top
No comments:
Post a Comment