Monday, October 20, 2008

க்ஷீர ஸாக3ர விஹார - ராகம் ஆனந்த3 பை4ரவி - Ksheera Sagara Vihara - Raga Ananada Bhairavi

பல்லவி
க்ஷீர ஸாக3ர விஹார அபரிமித
கோ4ர பாதக விதா3
க்ரூர ஜன க3ண விதூ3ர நிக3
ஸஞ்சார ஸுந்த3ர ஸ1ரீர

சரணம்
சரணம் 1
1தமகா2ஹித விப4ங்க3 ஸ்ரீ ராம
1மன ரிபு ஸன்னுதாங்க3
ஸ்1ரித மானவாந்தரங்க3 ஜனகஜா
ஸ்1ரு2ங்கா3ர ஜலஜ ப்4ரு2ங்க3 (க்ஷீ)

சரணம் 2
ராஜாதி4 ராஜ வேஷ ஸ்ரீ ராம
ரமணீய கர ஸு-பூ4
ராஜ நுத லலித பா4ஷ ஸ்ரீ த்யாக3-
ராஜாதி34க்த போஷ (க்ஷீ)


பொருள் - சுருக்கம்
பாற்கடலுறைவோனே!
எண்ணிலடங்கா கொடும் பாதகங்களைக் களைவோனே!
கொடியோருக்கெட்டாதவனே!
மறைகளில் உறைவோனே! எழிலுருவத்தோனே!

இந்திரனின் பகைவரை முறிப்போனே, இராமா!
நமன் பகைவனால் மிக்கு போற்றப்பெற்றோனே!
சார்ந்த மானவருள்ளுறையே!
சனகன் மகளின் சிங்காரமெனும் தாமரையை மொய்க்கும் வண்டே!

மன்னாதி மன்னனின் வேடமணிந்தோனே, இராமா!
எழிலூட்டும் உயரணிகலன்களணிவோனே!
அரசரால் போற்றப்பெற்றோனே! கனிந்த சொல்லோனே!
தியாகராசன் முதலான பத்தர்களைப் பேணுவோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீர ஸாக3ர/ விஹார/ அபரிமித/
பாற்கடல்/ உறைவோனே/ எண்ணிலடங்கா/

கோ4ர/ பாதக/ விதா3ர/
கொடும்/ பாதகங்களை/ களைவோனே/

க்ரூர ஜன க3ண/ விதூ3ர/ நிக3ம/
கொடியோருக்கு/ எட்டாதவனே/ மறைகளில்/

ஸஞ்சார/ ஸுந்த3ர/ ஸ1ரீர/
உறைவோனே/ எழில்/ உருவத்தோனே/

சரணம்
சரணம் 1
1தமக2/-அஹித/ விப4ங்க3/ ஸ்ரீ ராம/
ஸதமகனின்/ பகைவரை/ முறிப்போனே/ ஸ்ரீ ராமா/

1மன/ ரிபு/ ஸன்னுதாங்க3/
நமன்/ பகைவனால்/ மிக்கு போற்றப்பெற்றோனே/

ஸ்1ரித/ மானவ/-அந்தரங்க3/ ஜனகஜா/
சார்ந்த/ மானவர்/ உள்ளுறையே/ சனகன் மகளின்/

ஸ்1ரு2ங்கா3ர/ ஜலஜ/ ப்4ரு2ங்க3/
சிங்காரமெனும்/ தாமரையை (மொய்க்கும்)/ வண்டே/


சரணம் 2
ராஜ-அதி4 ராஜ/ வேஷ/ ஸ்ரீ ராம/
மன்னாதி மன்னனின்/ வேடமணிந்தோனே/ ஸ்ரீ ராமா/

ரமணீய கர/ ஸு-பூ4ஷ/
எழிலூட்டும்/ உயரணிகலன்களணிவோனே/

ராஜ/ நுத/ லலித/ பா4ஷ/
அரசரால்/ போற்றப்பெற்றோனே/ கனிந்த/ சொல்லோனே/

ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ ப4க்த/ போஷ/
ஸ்ரீ தியாகராசன்/ முதலான/ பத்தர்களை/ பேணுவோனே/

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்

ஸதமகன் - இந்திரன்

நமன் பகைவன் - சிவன்




No comments: