Tuesday, October 21, 2008

ஓ ராம ராம ஸர்வோன்னத - ராகம் நாக3 காந்தா4ரி - O Rama Rama Sarvonnata - Raga Naga Gandhari



பல்லவி
ஓ ராம ராம ஸர்வோன்னத நீகிபுடோ3ர-
வஞ்சனயேலரா க்4ரு2ணா-கர

சரணம்
சரணம் 1
1வேத3 ஸி1முலெல்லனாத3ரணதோ
நீவே தை3வமனி நம்மக3 நம்மிதி (ஓ)

சரணம் 2
2பெத்33லைன வாரியொத்33னே ஸத்யமு
கத்33னி நம்மிதினி ஸம்மதினி (ஓ)

சரணம் 3
3ந்து4 ரத்னமா த3யா ஸிந்து4 நீவனி ஸத்ய-
ஸந்து43வனுகொண்டினி ரம்மண்டினி (ஓ)

சரணம் 4
4ரது சர்ய 3ஸஹ சருனிதோ நிண்டா3
கரகு3சு பலிகிதிவே காசிதிவே (ஓ)

சரணம் 5
ஸதி மாடலு ஸதா3 4கபிஜுசே வினி
ஸம்மதினி கௌகி3லிஞ்சின ஸு1பா4னன (ஓ)

சரணம் 6
முனு ப4க்த கோடுலு கொனியாட3 நீவு
வாரல ப்3ரோசினதி3 லேதா3 மரியாதா3 (ஓ)

சரணம் 7
ஈ ஜக3தினி 5த்யாக3ராஜுனி ப்3ரோசுடகீ
ஜாலமிக தாளனுனீ வேளனு (ஓ)



பொருள் - சுருக்கம்
ஓ ராமா! யாவரிலுமுயர்ந்தோனே! கருணாகரா! தலை சிறந்த சுற்றமே! மங்கல வதனத்தோனே!

  • உனக்கு, இவ்வமயம், ஓரவஞ்சனை யேனய்யா?
  • உபநிடதங்கள் யாவும், பணிவுடனே, நீயே கடவுளென நம்ப, (நானும்) நம்பினேன்;
  • சான்றோரிடமே மெய்ம்மை உண்டென, முழுமனதுடன் நம்பினேன்;
  • கருணைக்கடல் நீயென, சொல் தவறாதவனெனக் கொண்டேன்; உன்னையழைத்தேன்;
  • பரதனின் நடத்தையினை, உனதுடனுறையிடம், நிரம்ப மனம்) உருகிப் பகர்ந்தாய்; அவனைக் காத்தாய்;
  • மனைவியின் சொற்களை, அனுமனிடம் கேட்டு, நிறைமனதுடன் (அவனை) அணைத்துக்கொண்டாய்;
  • முன்பு, உயர் தொண்டர்களுன்னைப் புகழ, நீ அவரைக் காத்தனை; இப்போது, நீ என்னைக் காவாதிருத்தல் முறையன்று
  • இவ்வுலகத்தினில், தியாகராசனைக் காப்பதில், இந்த தாமதத்தினை யினியும் தாளேன், இவ்வேளை.


  • பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஓ/ ராம/ ராம/ ஸர்வ/-உன்னத/ நீகு/-இபுடு3/-
    ஓ/ ராமா/ ராமா/ யாவரிலும்/ உயர்ந்தோனே/ உனக்கு/ இவ்வமயம்/

    ஓர-வஞ்சன/-ஏலரா/ க்4ரு2ணா-கர/
    ஓரவஞ்சனை/ ஏனய்யா/ கருணாகரனே/


    சரணம்
    சரணம் 1
    வேத3/ ஸி1ரமுலு/-எல்ல/-ஆத3ரணதோ/
    மறை/ முடிகள்/ யாவும்/ பணிவுடனே/

    நீவே/ தை3வமு/-அனி/ நம்மக3/ நம்மிதி/
    நீயே/ கடவுள்/ என/ நம்ப/ (நானும்) நம்பினேன்/



    சரணம் 2
    பெத்33லைன வாரி-ஒத்33னே/ ஸத்யமு/
    சான்றோரிடமே/ மெய்ம்மை/

    கத்3து3/-அனி/ நம்மிதினி/ ஸம்மதினி/
    உண்டு/ என/ நம்பினேன்/ முழுமனதுடன்/


    சரணம் 3
    3ந்து4/ ரத்னமா/ த3யா/ ஸிந்து4/ நீவு/-அனி/
    சுற்றமே/ தலை சிறந்த/ கருணை/ கடல்/ நீ/ என/

    ஸத்ய-ஸந்து43வு/-அனுகொண்டினி/ ரம்மண்டினி/
    சொல் தவறாதவன்/ எனக்கொண்டேன்/ (உன்னை)யழைத்தேன்/


    சரணம் 4
    4ரது/ சர்ய/ ஸஹ/ சருனிதோ/ நிண்டா3ர/
    பரதனின்/ நடத்தையினை/ (உனது) உடன்/ உறையிடம்/ நிரம்ப/

    கரகு3சு/ பலிகிதிவே/ காசிதிவே/
    (மனம்) உருகி/ பகர்ந்தாயன்றோ/ காத்தாயன்றோ/


    சரணம் 5
    ஸதி/ மாடலு/ ஸதா3/ கபிஜுசே/ வினி/
    மனைவியின்/ சொற்களை/ எவ்வமயமும்/ அனுமனிடம்/ கேட்டு/

    ஸம்மதினி/ கௌகி3லிஞ்சின/ ஸு14/-ஆனன/
    நிறைமனதுடன்/ (அவனை) அணைத்துக்கொண்ட/ மங்கல/ வதனத்தோனே/


    சரணம் 6
    முனு/ ப4க்த/ கோடுலு/ கொனியாட3/ நீவு/
    முன்பு/ தொண்டர்களில்/ உயர்ந்தோர்/ (உன்னை) புகழ/ நீ/

    வாரல/ ப்3ரோசினதி3/ லேதா3/ மரியாதா3/
    அவரை/ காத்தது/ இல்லையா/ (இப்போது நீ செய்வது) முறையாமோ/


    சரணம் 7
    ஈ ஜக3தினி/ த்யாக3ராஜுனி/ ப்3ரோசுடகு/-
    இவ்வுலகத்தினில்/ தியாகராசனை/ காப்பதற்கு/

    ஈ/ ஜாலமு/-இக/ தாளனு/-ஈ வேளனு/
    இந்த/ தாமதத்தினை/ இனியும்/ தாளேன்/ இப்போழ்து/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    4கபிஜுசே - கபிஜூசே : 'கபிஜூசே' என்பது தவறாகும்

    மேற்கோள்கள்

    1வேத3 ஸி1ரமு - மறை முடி - உபநிடதங்களைக் குறிக்கும். இதுபற்றி காஞ்சி மஹாஸ்வாமிகளின் உரை நோக்கவும்

    4கபிஜு - அனுமன் அஞ்சனைக்கும் கேஸரி என்னும் குரங்குக்கும் பிறந்தவன் - அனுமன் குறித்த சில விவரங்கள் நோக்கவும்
    Top

    விளக்கம்
    இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் எனும் நாட்டிய நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக.

    2பெத்33லைன வாரி - நாரத முனிவரைக் குறிக்கும். ஏனெனில், பிரகலாதன் தனது தாயின் கர்ப்பத்தினில் இருந்தபோதே அவர் அவனுக்கு உபதேசித்தார்.

    3ஸஹ சருனிதோ - லக்ஷ்மணனைக் குறிக்கும். பரதனைக் குறித்து லக்ஷமணனிடம் ராமன் புகழ்ந்துரைப்பதைப் பற்றி வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 97-ல் நோக்கவும்.

    5த்யாக3ராஜுனி - இப்பாடல் பிரகலாதன் பாடுவதானாலும், தியாகராஜரே பிரகலாதனாக மாறி தன்னைக் காக்க வேண்டுவது அவருடைய மனேபாவனையை விளக்குகின்றது. இந்நிலையினைத்தான் பல கீர்த்தனைகளில் 'பா4விஞ்சு' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

    ஓரவஞ்சனை - ஓரம்பேசல்

    மறை முடிகள் - உபநிடதங்கள்

    சான்றோர் - நாரதரைக் குறிக்கும்

    சான்றோரிடமே - சான்றோர் பகரும் சொற்களில்

    உடனுறை - இலக்குவன்

    காத்தாயன்றோ - பரதனைக்குறிக்கும்

    Top



    3 comments:

    Govindaswamy said...

    அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    சரணம் 7 ல் ‘தாமத்தினை’ என்பதும் விளக்கம் பகுதியில்
    லக்ஷமணனிடம் என்பதும் எழுத்துப்பிழைகள்
    2பெத்3த3லைன வாரி- இது பன்மையில் உள்ளதே. எவ்வாறு நாரதமுனிவரைக் குறிக்கும். ‘மேன்மக்களை’ யன்றோ குறிக்கிறது.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    Govindaswamy said...

    திரு கோவிந்தன் அவ்ர்களே

    “கபிஜுசே - கபி ஜுசே : 'கபி ஜுசே' என்பது தவறாகும்” என்று கொடுத்துள்ளீர்.
    கபி ஜூசே என்பதற்குப் பதிலாக கபி ஜுசே என்று தவறாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சரியாக உள்ளது.

    வணக்கம்
    கோவிந்தசாமி

    V Govindan said...

    திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    'தாமதத்தினை' - பிழையைத் திருத்திவிட்டேன்

    'கபி ஜுசே' என்று நான் கொடுத்துள்ளது பிழையாகும். அது 'கபிஜூசே' என்றிருக்கவேண்டும். TKG அவர்களின் புத்தகத்தில் அங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. திருத்திவிட்டேன்.

    இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜய'த்தினைச் சேர்ந்தது. எனவே 'பெத்3த3லு' என்பது இவ்விடத்தில் நாரதரையே குறிக்கும். 'பெத்3த3லு' என்பது மரியாதைப் பன்மை.

    தவறுகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    வணக்கம்.
    கோவிந்தன்