Sunday, October 5, 2008

நிஜமைதே முந்த3ர - ராகம் பை4ரவி - Nijamaite Mundara - Raga Bhairavi

பல்லவி
நிஜமைதே முந்த3ர நிலுவுமீ வேள

அனுபல்லவி
அஜுடை3ன ஹரி-ஹயுடை3ன நா ப4க்தியு (நி)

சரணம்
சரணம் 1
கா3ஸி ஜெந்து3சு நேனு க3ர்ப4முலோனுண்ட3
தே3ஸி1க வருடு3பதே3ஸி1ஞ்சினதெ3ல்ல (நி)

சரணம் 2
உன்னதமுனனுண்டி3 பட3-த்3ரோஸின வேள
1உர்வி தே3வி நன்னெத்தி ப்3ரோசினதெ3ல்ல (நி)

சரணம் 3
நாக3 நாக3முலு நன்னு பா3தி4ஞ்சக3
த்யாக3ராஜ நுதுடு3 நன்னு காசினதெ3ல்ல (நி)


பொருள் - சுருக்கம்
பிரமனாகிலும், இந்திரனாகிலும், எனது பக்தி மெய்யென்றால், எதிரில் நிற்பீராக, இவ்வமயம்

(1) துயருற்று, நான் கருவிலிருக்க, நாரதர் எனக்கு உபதேசித்ததெல்லாம் மெய்யென்றால்,
(2) உயரத்திலிருந்து கீழே எறியப்பட்ட போழ்து, நிலமகள் என்னையெடுத்துக் காத்ததெல்லாம் மெய்யென்றால்,
(3) கரிகளும், அரவங்களும் தொல்லைப்படுத்த, அரி என்னைக் காத்ததெல்லாம் மெய்யென்றால்,
எதிரில் நிற்பீராக, இவ்வமயம்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிஜமு/-ஐதே/ முந்த3ர/ நிலுவுமு/-ஈ வேள/
மெய்/ என்றால்/ எதிரில்/ நிற்பீராக/ இவ்வமயம்/

அனுபல்லவி
அஜுடு3-ஐன/ ஹரி/-ஹயுடு3-ஐன/ நா/ ப4க்தியு/
பிரமனாகிலும்/ பொற்/ குதிரையோனாகிலும்/ எனது/ பக்தி/ மெய்யென்றால்...


சரணம்
சரணம் 1
கா3ஸி ஜெந்து3சு/ நேனு/ க3ர்ப4முலோன/-உண்ட3/
துயருற்று/ நான்/ கருவில்/ இருக்க/

தே3ஸி1க/ வருடு3/-உபதே3ஸி1ஞ்சினதி3/-எல்ல/
ஆசானிற்/ தலைசிறந்தவர்/ உபதேசித்தது/ எல்லாம்/ மெய்யென்றால்...


சரணம் 2
உன்னதமுன-உண்டி3/ பட3-த்3ரோஸின/ வேள/
உயரத்திலிருந்து/ கீழே எறியப்பட்ட/ போழ்து/

உர்வி/ தே3வி/ நன்னு/-எத்தி/ ப்3ரோசினதி3/-எல்ல/
நில/ மகள்/ என்னை/ எடுத்து/ காத்தது/ எல்லாம்/ மெய்யென்றால்...


சரணம் 3
நாக3/ நாக3முலு/ நன்னு/ பா3தி4ஞ்சக3/
கரிகளும்/ அரவங்களும்/ என்னை/ தொல்லைப்படுத்த/

த்யாக3ராஜ/ நுதுடு3/ நன்னு/ காசினதி3/-எல்ல/
தியாகராஜனால்/ போற்றப்பெற்றோன்/ என்னை/ காத்தது/ எல்லாம்/ மெய்யென்றால்...

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

1உர்வி - உர்வீ


மேற்கோள்கள்


விளக்கம்

இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் எனும் நாட்டிய நாடகத்தினைச் சேர்ந்ததாகும்.

அரியைக் காண வேண்டி பிரகலாதன் முறையிடுகையில், வீணையின் ஒலி கேட்க, அவ்விடம் யாரோ வருவதாக எண்ணி, தனக்கு நற்செய்தி கொணர இப்பாடலில் வேண்டுகின்றான்.

அரியின் மீதுள்ள வெறுப்பினால், இரணியன், அரியினைத் தொழும் தனது மகன் பிரகலாதனை மாற்ற இயலாது, அவனைக் கொல்ல முயற்சித்தான். ஆனால் எல்லா இடுக்கண்களிலுமிருந்து பிரகலாதன் காப்பாற்றப்பட்டான். இதனை இரண்டு, மூன்றாவது சரணங்களில் கூறப்பட்டுள்ளது

பொற்குதிரையோன் - இந்திரன்

ஆசானிற் தலைசிறந்தவர் - நாரதர்

தியாகராசனால் போற்றப்பெற்றோன் - அரி

Top


No comments: