Saturday, October 4, 2008

நாத2 ப்3ரோவவே - ராகம் பை4ரவி - Natha Brovave - Raga Bhairavi

பல்லவி
நாத2 ப்3ரோவவே ரகு4 நாத2 ப்3ரோவவே

சரணம்
சரணம் 1
ஸலலிதுட3னி முனு பலிகின
வால்மீகுல வாக்குலு கல்லலாயெனா ரகு4 (நாத2)

சரணம் 2
13யலு3ல முனி 2சயமுனு ஜூசி
ஹ்ரு23யமு கரக33னப4யமொஸகி33 ரகு4 (நாத2)

சரணம் 3
4வரமகு3 நுது3டி முங்கு3ருலனு தொலகி3ஞ்சி
கருணனு நிஜ ப4க்த வருலனு ஜுசு ரகு4 (நாத2)

சரணம் 4
அக3ணித ரிபுலகு வக3லொனரிஞ்சி ஸ்வ-
நக3ரமுனேல வச்சு ஸொக3ஸு 5ஜூபு ரகு4 (நாத2)

சரணம் 5
4ரதுனி கனி மதி3 கரகு3சு வானி
உரமுன ஜேர்சின கரமுனு 5ஜூபு ரகு4 (நாத2)

சரணம் 6
கல கலமனு முக2 கள கனி புர
பா4மலு 6வலசக3 தன 7தல்லுல வலெ ஜூசு ரகு4 (நாத2)

சரணம் 7
நிருபம நிர்கு3ண ஸரஸிஜ லோசன
8மரவக த்யாக3ராஜ 9வரத3 10ஸ்ரீ ரகு4 (நாத2)


பொருள் - சுருக்கம்
எழிலான நெற்றி (முடிச்)சுருளல்களை யகற்றி, கருணையுடன், உண்மையான நற்றொண்டர்களை நோக்கும் இரகுநாதா!

கல கலவெனும் முகக் களையைக் கண்டு, நகர்ப் பெண்டிர் காமுற, அவரைத் தமது தாயராக நோக்கும் இரகுநாதா!

உவமையற்ற, குணங்களற்ற, தாமரைக்கண்ணா! தியாகராசனுக்கருள்வோனே!

மென்மையானவனென, முன்பு பகர்ந்த, வால்மீகி முதலானோரின் சொற்கள் பொய்யானதோ?

திறந்த வெளியில் உள்ள முனிவர்களைக் கண்டு,மனமுருகி, அவர்களுக்கு அபயமளித்தாய்;

எண்ணிறந்த பகைவருக்கு துயரையளித்து, தனது நகரத்தினையாள வரும் ஒயிலினைக் காண்பிப்பாய்;

பரதனைக் கண்டு, உள்ளமுருகி, அவனை மார்போடணைத்த அக்கரங்களைக் காண்பிப்பாய்;
மறவாது காப்பாய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாத2/ ப்3ரோவவே/ ரகு4 நாத2/ ப்3ரோவவே/
நாதா/ காப்பாய்/ இரகுநாதா/ காப்பாய்/



சரணம்
சரணம் 1
ஸ-லலிதுடு3/-அனி/ முனு/ பலிகின/
மென்மையானவன்/ என/ முன்பு/ பகர்ந்த/

வால்மீகுல/ வாக்குலு/ கல்லலு-ஆயெனா/ ரகு4 (நாத2)
வால்மீகி முதலானோரின்/ சொற்கள்/ பொய்யானதோ/ இரகுநாதா ..


சரணம் 2
3யலு/ க3ல/ முனி சயமுனு/ ஜூசி/
திறந்த வெளியில்/ உள்ள/ முனிவர்களை/ கண்டு/

ஹ்ரு23யமு/ கரக33/-அப4யமு/-ஒஸகி3ன/ ரகு4 (நாத2)
மனம்/ உருகி/ அபயம்/ அளித்த/ இரகுநாதா...


சரணம் 3
வரமகு3/ நுது3டி/ முங்கு3ருலனு/ தொலகி3ஞ்சி/
எழிலான/ நெற்றி/ முடிச்சுருளல்களை/ அகற்றி/

கருணனு/ நிஜ/ ப4க்த வருலனு/ ஜுசு/ ரகு4 (நாத2)
கருணையுடன்/ உண்மையான/ நற்றொண்டர்களை/ நோக்கும்/ இரகுநாதா..


சரணம் 4
அக3ணித/ ரிபுலகு/ வக3லு/-ஒனரிஞ்சி/ ஸ்வ/-
எண்ணிறந்த/ பகைவருக்கு/ துயரை/ அளித்து/ தனது/

நக3ரமுனு/-ஏல/ வச்சு/ ஸொக3ஸு/ ஜூபு/ ரகு4 (நாத2)
நகரத்தினை/ ஆள/ வரும்/ ஒயிலினை/ காண்பிப்பாய்/ இரகுநாதா..


சரணம் 5
4ரதுனி/ கனி/ மதி3/ கரகு3சு/ வானி/
பரதனை/ கண்டு/ உள்ளம்/ உருகி/ அவனை/

உரமுன/ ஜேர்சின/ கரமுனு/ ஜூபு/ ரகு4 (நாத2)
மார்போடு/ அணைத்த/ கரங்களை/ காண்பிப்பாய்/ இரகுநாதா..


சரணம் 6
கல கலமனு/ முக2/ கள/ கனி/ புர/
கல கலவெனும்/ முக/ களையை/ கண்டு/ நகர்/

பா4மலு/ வலசக3/ தன/ தல்லுல வலெ/ ஜூசு/ ரகு4 (நாத2)
பெண்டிர்/ காமுற/ தமது/ தாயராக/ நோக்கும்/ இரகுநாதா..


சரணம் 7
நிருபம/ நிர்கு3ண/ ஸரஸிஜ/ லோசன/
உவமையற்ற/ குணங்களற்ற/ தாமரை/ கண்ணா/

மரவக/ த்யாக3ராஜ/ வரத3/ ஸ்ரீ ரகு4 (நாத2)
மறவாது/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ இரகுநாதா..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

13யலு - ப4யமு : ப3யலு - சரியாகும்

2சயமுனு - சயமுலு

4வரமகு3 - வரமுலு : வரமகு3 - சரியாகும்

6வலசக3 - வலசக3னு

7தல்லுல - ஸுதுல - 'தல்லி' என்றால் 'தாய்' - 'ஸுத' என்றால் 'மகள்'. இவ்விரண்டு பதங்களும் பொருந்தலாம். ஆனால் இவ்விரண்டில் ஏதாவதொன்றுதான் மூல கிருதியில் இருக்கவேண்டும். இதனை பாடாந்தரமாக ஏற்பதிற்கில்லை. வலிய செய்யப்பட்ட திருத்தமென்றே எண்ணவேண்டும்.

8மரவக - மருவக

9வரத3 - வர நுத : வர நுத தவறாகும்

10ஸ்ரீ ரகு4 (நாத2) - ஸ்ரீ ராம ரகு4 (நாத2)
Top
மேற்கோள்கள்

3அப4யமொஸகி3 - வால்மீகி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - 6-வது அத்தியாயம் நோக்கவும்


விளக்கம்

5ஜூபு - இதனை 'காண்பிக்கும்' என்றும் 'காண்பிப்பாய்' என்றும் பொருள் கொள்ளலாம். 'காண்பிப்பாய்' என்பது இந்த இடத்தில் சரியாகப் படுகின்றது
Top


No comments: