Sunday, October 5, 2008

நீவண்டி தை3வமு - ராகம் பை4ரவி - Neevanti Daivamu - Raga Bhairavi

பல்லவி
நீவண்டி தை3வமு நே கான
நீரஜாக்ஷ ஸ்ரீ ராமய்ய

அனுபல்லவி
பா4விஞ்சி ஜூசுபட்ல
1பட்டாபி4ராம-சந்த்3 (நீ)

சரணம்
2ஆடி3னா நின்னாட3 வலெகா3
2பாடி3னா நின்னு பாட3 வலெகா3
2கூடி3னா நின்னு கூட3 வலெ நீ
ஜாட3 தெலிஸின த்யாக3ராஜுனிகி (நீ)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! இராமய்யா! பட்டாபிராம சந்திரா!

உள்ளத்தினில் உணர்ந்து பார்க்கையில்,
உன்னையொத்த தெய்வத்தை நான் காணேன்.

உனது குறிப்பறிந்த தியாகராஜனுக்கு,
பேசினால், உன்னைப் பற்றிப் பேசவேண்டுமன்றோ;
பாடினால், உன்னைப் பாடவேண்டுமன்றோ;
கூடினால், உன்னைக் கூடவேண்டுமன்றோ!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவண்டி/ தை3வமு/ நே/ கான/
உன்னையொத்த/ தெய்வத்தை/ நான்/ காணேன்/

நீரஜ/-அக்ஷ/ ஸ்ரீ ராமய்ய/
கமல/ கண்ணா/ ஸ்ரீ ராமய்யா/

அனுபல்லவி
பா4விஞ்சி ஜூசுபட்ல/
உள்ளத்தினில் உணர்ந்து பார்க்கையில்/

பட்ட/-அபி4ராம/-சந்த்3ர/
பட்ட/ அபிராம/ சந்திரா/ உன்னையொத்த...

சரணம்
ஆடி3னா/ நின்னு/-ஆட3/ வலெகா3/
பேசினால்/ உன்னைப் பற்றி/ பேச/ வேண்டுமன்றோ/

பாடி3னா/ நின்னு/ பாட3/ வலெகா3/
பாடினால்/ உன்னை/ பாட/ வேண்டுமன்றோ/

கூடி3னா/ நின்னு/ கூட3/ வலெ/ நீ/
கூடினால்/ உன்னை/ கூட/ வேண்டுமன்றோ/ உனது/

ஜாட3/ தெலிஸின/ த்யாக3ராஜுனிகி/
குறிப்பு/ அறிந்த/ தியாகராஜனுக்கு/ உன்னையொத்த...

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

2ஆடி3னா - ஆடி3ன : ஆடி3னா - என்பது சரியாகும

2பாடி3னா - பாடி3ன : பாடி3னா - என்பது சரியாகும்

2கூடி3னா - கூடி3ன : கூடி3னா - என்பது சரியாகும்

Top

மேற்கோள்கள்


விளக்கம்

1பட்டாபி4ராம-சந்த்3 - இதனை 'பட்டாபி4' - 'ராம' - என பிரிப்பது தவறாகும்

பட்டம் - மகுடம்

அபிராம - களிப்பூட்டும

சந்திரன் - தலை சிறந்தவன்

குறிப்பு - சாடையாக வெளிப்படும் உள்ளப் பாங்கு

Top


No comments: