Monday, September 22, 2008

ப2ணி பதி ஸா1யி - ராகம் ஜங்காரத்4வனி - phaNi pati SAyi - jhankAradhvani Raga

பல்லவி
2ணி பதி ஸா1யி மாம் பாது
பாலிதாப்3தி4 பாயி

அனுபல்லவி
மணி-மய மகுட விராஜமானோ
மன்மத2 கோடி கோடி ஸமானோ (ப2)

சரணம்
3ஜ வர க3மன: கமனீயானன:
ஸுஜன க3ணாவன: ஸுந்த3ர ரத3ன:
3ஜ முக2 வினுத: கருணாகர:
1ரஜ நயன: த்யாக3ராஜ ஹ்ரு2த்ஸத3ன: (ப2)



பொருள் - சுருக்கம்
அரி என்னைக் காக்கட்டும்;
அகத்தியரைக் காத்தவன் அவன்!

மணிமயமான மகுடத்துடன் விளங்குபவன்!
கோடி கோடி மன்மதர்கள் நிகரானவன்!

களிறு நடையோன்! காமுறு முகத்தோன்!
நன்மக்களைக் காப்போன்! அழகிய பற்களோன்!
ஆனைமுகத்தோனால் போற்றப் பெற்றோன்! கருணாகரன்!
கமலக்கண்ணன்! தியாகராசனின் இதயத்திலுறைவோன்!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
2ணி-பதி/ ஸா1யி/ மாம்/ பாது/
அரவரசன்/ (மேல்) துயில்வோன்/ என்னை/ காக்கட்டும்/

பாலித/ அப்3தி4/ பாயி/
காத்தவன்/ கடல்/ குடித்தோனை



அனுபல்லவி
மணி-மய/ மகுட/ விராஜமானோ/
மணிமயமான/ மகுடத்துடன்/ விளங்குபவன்/

மன்மத2/ கோடி-கோடி/ ஸமானோ/
மன்மதர்கள்/ கோடி கோடி/ நிகரானவன்/



சரணம்
3ஜ/ வர/ க3மன:/ கமனீய/ ஆனன:/
களிற்றின்/ உயர்/ நடையோன்/ காமுறு/ முகத்தோன்/

ஸுஜன-க3ண/ அவன:/ ஸுந்த3ர/ ரத3ன:/
நன்மக்களை/ காப்போன்/ அழகிய/ பற்களோன்/

3ஜ/ முக2/ வினுத:/ கருணாகர:/
ஆனைமுகத்தோனால்/ போற்றப் பெற்றோன்/ கருணாகரன்/

1ரஜ/ நயன:/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3ன:/ (ப2)
கமல/ கண்ணன்/ தியாகராசனின்/ இதயத்தில்/ உறைவோன்!


குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)


மேற்கோள்கள்


விளக்கம்

அரவரசன் - சேடன்

அரவரசன் மேற்றுயில்வோன் - அரி

கடல் குடித்தோன் - அகத்தியன்



No comments: