Wednesday, September 24, 2008

கலுகு3னா பத3 நீரஜ ஸேவ - பூர்ண லலிதா ராகம் - Kaluguna Pada Neeraja Seva - Raga Poorna Lalita


பல்லவி
1கலுகு3னா பத3 நீரஜ ஸேவ
3ந்த4 வாஹ தனய

அனுபல்லவி
பலுமாரு ஜூசுசு ப்3ரஹ்மானந்து3டை3
பரகே34க்(தா)க்3ரேஸர தனகு (க)

சரணம்
2வேகுவ ஜாமுன நீ கரமுன(னி)டி3
ஸ்ரீ காந்து(ட3)ம்ரு23 ஸ்னானமு ஜேஸி
பாகமுலனு ஸ்ரீ 4ரங்கே3ஸு1னி(க)ர்பணமு ஜேஸி தா
ஸீதா கரமுலசே பு4ஜிஞ்சி நினு
5ஸாத்வீக புராண பட2ன ஸேயமனே
ஸாகேத பதினி ஸர்(வா)தா4ருனி
ப்ராகடமுக3 த்யாக3ராஜ நுதுனி கன (க)



பொருள் - சுருக்கம்
(இராமனை) அடிக்கடி கண்டு, பேரானந்தமுற்றோனாய்த்
திகழும், தொண்டரிற் தலைசிறந்த, வாயு மைந்தா!
தனக்கும் கிடைக்குமா, இறைவனின் திருவடித்
தாமரையின் தொண்டு?

விடியற்காலை வேளை, உனது கரங்களைப் பற்றி,
இலக்குமி மணாளன், அமுத நீராடி,
உண்டி வகைகளைத் திருவரங்கனுக்குப் படையல் செய்து,
தான், சீதையின் கரங்களினால் உணவருந்தி,
உன்னை, புராணங்களை ஓதிடச் சொல்லும்,
சாகேத நகரின் தலைவனை, எல்லாவற்றிற்கும் ஆதாரமானவனை,
தியாகராசனால் போற்றப்பெற்றோனை,
நேரிடையாகக் காணக் கிடைக்குமா, வாயு மைந்தா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கலுகு3னா/ பத3/ நீரஜ/ ஸேவ/
கிடைக்குமா/ திருவடி/ தாமரையின்/ தொண்டு/

3ந்த4/ வாஹ/ தனய/
மணம்/ வீசச்செய்வோன் (வாயு)/ மைந்தா/




அனுபல்லவி
பலுமாரு/ ஜூசுசு/ ப்3ரஹ்மானந்து3டை3/
அடிக்கடி/ கண்டு/ பேரானந்தமுற்றோனாய்/

பரகே3/ ப4க்த/ அக்3ரேஸர/ தனகு/
திகழும்/ தொண்டரிற்/ தலைசிறந்தோனே/ தனக்கும்
கிடைக்குமா திருவடித் தாமரையின் தொண்டு?




சரணம்
வேகுவ/ ஜாமுன/ நீ/ கரமுனனு/ இடி3/
விடியற்காலை/ வேளை/ உனது/ கரங்களை/ பற்றி/

ஸ்ரீ/ காந்துடு3/ அம்ரு2த/ ஸ்னானமு-ஜேஸி/
இலக்குமி/ மணாளன்/ அமுத/ நீராடி/

பாகமுலனு/ ஸ்ரீ ரங்கே3ஸு1னிகி/
உண்டி வகைகளை/ திருவரங்கனுக்கு/

அர்பணமு/ ஜேஸி/ தா/
படையல்/ செய்து/ தான்/

ஸீதா/ கரமுலசே/ பு4ஜிஞ்சி/ நினு/
சீதையின்/ கரங்களினால்/ உணவருந்தி/ உன்னை/

ஸாத்வீக/ புராண/ பட2ன/ ஸேயமனே/
உயர் / புராணங்களை/ ஓதிட/ சொல்லும்/

ஸாகேத/ பதினி/ ஸர்வ/ ஆதா4ருனி/
சாகேத நகரின்/ தலைவனை/ எல்லாவற்றிற்கும்/ ஆதாரமானவனை/

ப்ராகடமுக3/ த்யாக3ராஜ/ நுதுனி/ கன/ (க)
நேரிடையாக/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனை/ காண/ கிடைக்குமா?



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)


மேற்கோள்கள்
4 - ரங்கேஸுஸு1னி - அரங்கநாதன் ஆதியில் இராமனின் குலத்தில் வழிபடப் பெற்ற
தெய்வமாகும். விபீடணன் அரங்க விமானத்தினை இராமனிடமிருந்து பெற்று இலங்கைக்குக் கொண்டு செல்கையில் காவிரிக்கரையில் கீழே வைத்ததாகவும் அதனால் அரங்கநாதன் அங்கேயே தங்கிவிட்டதாகவும் ஸ்ரீரங்க தல புராணம் கூறும்.

விவரங்களுக்குக் கீழ்க்கண்ட website-களை நோக்கவும்

ஸ்ரீரங்கம்-1

ஸ்ரீரங்கம்-2

5ஸாத்வீக புராணங்கள் - விஷ்ணு, பாகவத, நாரதீய, கருட, பத்ம, மற்றும் வராஹ புராணங்கள் - விஷ்ணுவை புகழ்ந்தேத்துபவை.

Top




விளக்கம்
1 - கலுகு3னா பத3 நீரஜ ஸேவ - பல்லவியிலும், அனுபல்லவியினை இணைக்கையிலும், இதனை 'இராமனின் திருவடி சேவியினை தியாகராஜர் வேண்டுவதாகவும்', சரணத்தை இணைக்கையில், 'இராமனை நேரிடையாக, அனுமன் போன்று, தியாகராஜர் காண விழைவதாகவும்' பொருள் கொள்ளப்படும்

2 - வேகுவ ஜாமுன - பொழுது விடிவதற்கு முந்தைய மூன்று மணி நேரம்

3 - அம்ரு23 ஸ்னானமு - உயிர்களைக் காப்பதனால் தண்ணீருக்கும் அமுதமென்று வழக்கு

திருவடித் தாமரையின் தொண்டு - பரமனுக்கு

வாயு மைந்தன் - அனுமன்

Top





No comments: