Saturday, September 20, 2008

வர ஸி1கி2 வாஹன - ராகம் சுப்ரதீபம்

பல்லவி
வர ஸி1கி2 வாஹன வாரிஜ லோசன
குரு ஸ1ம் தனு ஜித குஸும ஸ1ராயுத

அனுபல்லவி
1ரஜ ப4வாம்பு33 வாஹனாதி3
ஸுர நுத பாத3 ஸுகு3ண குமார (வ)

சரணம்
தாரக ஸூ1ர பத்3மாஸுர தூல
3ஹன பூ44ர ஸுதா நந்த3ன தீ4
ஸ்ரீ ரகு4வீர பா4கி3னேயாப்த
உதா3ர க்4ரு2ணாகர த்யாக3ராஜ நுத (வ)



பொருள் - சுருக்கம்
உயர் மயில் வாகனனே! கமலக்கண்ணா!
மங்களமளருள்வாய், உடல் வனப்பில்
பல்லாயிரம் மலர்க் கணையோனை வென்றோனே!

மலரோன், முகில் வாகனன் முதலான
வானோரால் போற்றப்பெற்ற திருவடியோனே!
நற்குணத்தோனே, குமரா!

தாரகன், சூரபதுமன் ஆகிய அரக்கரெனும் பஞ்சினை
எரித்தவனே! மலையரசன் மகள் மைந்தனே! தீரனே!
இரகுவீரனின் மருகனே! நெருங்கியோருக்கு
வள்ளலே! கருணாகரனே! தியாகராசனால்
போற்றப் பெற்றோனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வர/ ஸி1கி2/ வாஹன/ வாரிஜ/ லோசன/
உயர்/ மயில்/ வாகனனே!/ கமல/ கண்ணா!/

குரு/ ஸ1ம்/ தனு/ ஜித/ குஸும/ ஸ1ர/ அயுத/
அருள்வாய்/ மங்களம்/ உடல் (வனப்பில்)/
வென்றோனே!/ மலர்/ கணையோனை/ பல்லாயிரம்/



அனுபல்லவி
1ரஜ-ப4வ/ அம்பு33/ வாஹன/ ஆதி3/
மலரோன்/ முகில்/ வாகனன்/ முதலான/

ஸுர/ நுத/ பாத3/ ஸுகு3ண/ குமார/
வானோரால்/ போற்றப்பெற்ற/ திருவடியோனே!/
நற்குணத்தோனே/ குமரா!/




சரணம்
தாரக/ ஸூ1ர-பத்3ம/ அஸுர/ தூல/ த3ஹன/
தாரகன்,/ சூரபதுமன் (ஆகிய)/ அரக்கரெனும்/ பஞ்சினை/
எரித்தவனே!/

பூ4-த4ர/ ஸுதா/ நந்த3ன/ தீ4ர/
மலையரசன்/ மகள்/ மைந்தனே!/ தீரனே!/

ஸ்ரீ ரகு4வீர/ பா4கி3னேய/ ஆப்த/
இரகுவீரனின்/ மருகனே!/ நெருங்கியோருக்கு/

உதா3ர/ க்4ரு2ணாகர/ த்யாக3ராஜ/ நுத
வள்ளலே!/ கருணாகரனே!/ தியாகராசனால்/
போற்றப் பெற்றோனே!/



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்


விளக்கம்

மலர்க் கணையோன் - காமன்

மலரோன் - பிரமன்

முகில் வாகனன் - இந்திரன்

மலையரசன் மகள் - பார்வதி

மருகன் - தங்கை மைந்தன்
Top





No comments: