Showing posts with label Rama Nannu Brova. Show all posts
Showing posts with label Rama Nannu Brova. Show all posts

Wednesday, April 15, 2009

தியாகராஜ கிருதி - ராம நன்னு ப்3ரோவ - ராகம் ஹரி காம்போ4ஜி - Rama Nannu Brova - Raga Hari Kambhoji

பல்லவி
ராம நன்னு ப்3ரோவ 1ராவேமகோ லோகாபி4(ராம)

அனுபல்லவி
சீமலோ ப்3ரஹ்மலோ ஸி1வ கேஸ1வாது3லலோ
ப்ரேம மீர மெலகு3சுண்டே3 பி3ருது3 வஹிஞ்சின ஸீதா (ராம)

சரணம்
மெப்புலகை கன்ன தாவுனப்பு பட3க விர்ர வீகி3
தப்பு பனுலு லேகயுண்டே3 த்யாக3ராஜ 2வினுத ஸீதா (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! உலகினை மகிழ்விப்போனே!

  • எறும்பிலும், பிரமனிலும், சிவன், கேசவன் முதலானோரிலும், மிக்கு கனிவுடன், இயங்கிக்கொண்டிருக்கும் விருதினை யேந்திய சீதாராமா!

  • தியாகராசனால் போற்றப் பெற்ற சீதாராமா!

    • புகழுக்காக, கண்ட இடங்களில் கடன் படாமலும்,

    • செருக்குற்று, தவறான செயல்கள் புரியாமலும் இருக்கின்றேன்.

    • அப்படியிருக்க, என்னைக் காக்க வாராயேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நன்னு/ ப்3ரோவ/ ராவு-ஏமகோ/ லோக/-அபி4ராம/
இராமா/ என்னை/ காக்க/ வாராயேனோ/ உலகினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
சீமலோ/ ப்3ரஹ்மலோ/ ஸி1வ/ கேஸ1வ/-ஆது3லலோ/
எறும்பிலும்/ பிரமனிலும்/ சிவன்/ கேசவன்/ முதலானோரிலும்/

ப்ரேம/ மீர/ மெலகு3சு-உண்டே3/ பி3ருது3/ வஹிஞ்சின/ ஸீதா/ (ராம)
கனிவு/ மிக/ இயங்கிக்கொண்டிருக்கும்/ விருதினை/ ஏந்திய/ சீதா/ ராமா!


சரணம்
மெப்புலகை/ கன்ன/ தாவுன/-அப்பு/ பட3க/ விர்ர வீகி3/
புகழுக்காக/ கண்ட/ இடங்களில்/ கடன்/ படாமலும்/ செருக்குற்று/

தப்பு/ பனுலு/ லேக/-உண்டே3/ த்யாக3ராஜ/ வினுத/ ஸீதா/ (ராம)
தவறான/ செயல்கள்/ புரியாமலும் (இல்லாமலும் )/ இருக்கும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சீதா/ ராமா!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வினுத - நுத.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ராவேமகோ - ராவு+ஏமகோ : 'ஏமகோ' என்ற சொல் தெலுங்கு அகராதியில் காணப்படவில்லை. ஆயினும், இவ்விடத்தில் 'ஏமகோ' என்ற சொல்லுக்கு 'ஏனோ' என்று பொருளாகும். அதற்கீடான (ஏனோ) தெலுங்கு சொல் 'ஏமிடிகோ'. அனேகமாக, 'ஏமகோ', 'ஏமிடிகோ' என்ற சொல்லின் திரிபாக பேச்சு வழக்கலிருக்கலாம்.

Top


Updated on 15 Apr 2009