அல்லகல்லோலமாயெனம்ம யமுனா தே3வி
மாயார்துலெல்லனு தீர்பவம்ம
1அனுபல்லவி
2மொல்லலசே பூஜிஞ்சி ம்ரொக்கெத3மு ப்3ரோவுமம்ம (அ)
சரணம்
சரணம் 1
மாரு 3பா3ரிகி தாள லேகயீ ராஜ
குமாருனி தெச்சிதிமிந்தா3க
தாருமாராயெ ப்3ரதுகு 4தத்தளிஞ்சுனதெ3ந்தா3க (அ)
சரணம் 2
கா3லி வானலு நிண்டா3ராயெ மா பனுலெல்ல
கே3லி ஸேயுடகெட3மாயெ
மாலிமிதோ மம்மேலு மக3னியெட3 பா3யனாயெ (அ)
சரணம் 3
ஸொம்முலெல்ல 5நீகொஸகெ3த3மம்ம யமுனா தே3வியீ
ஸுமுகு2னி க3ட்டு ஜேர்புமம்ம
6எம்மெ கானி ப3லிமினியேல தெச்சிதிமம்ம (அ)
சரணம் 4
நளின ப4வுடு3 வ்ராஸின வ்ராலுயெட்லைன கானி
நாது2டு3 ப்3ரதிகியுண்டே சாலு
ப்ரளயமுலய்யெனு ஏ பனி ஜேஸின பா4மலு (அ)
சரணம் 5
5தே3ஹமுலெல்லனொஸகெ3த3மம்ம ஓ தே3வி க்ரு2ஷ்ண
தே3வுனி க3ட்டு ஜேர்புமம்ம
மோஹனாங்கு3னி மேமு மோஸ-பு3ச்சிதிமம்ம (அ)
சரணம் 6
மேமொக்கடெஞ்ச போதிமம்ம மா பாலி தே3வு-
டே3மோமோ எஞ்சுகொன்னாட3ம்ம
7ராமரோ ஸ்ரீ த்யாக3ராஜாப்துனி பா3யமம்ம (அ)
பொருள் - சுருக்கம்
- யமுனா தேவி!
- பெருங்குழப்பமானதம்மா;
- எமது துயரங்களையெல்லாம் தீர்ப்பாயம்மா.
- முல்லை மலர்களால் பூசித்து வணங்கினோம்;
- காப்பாயம்மா.
- மாரனின் தொல்லை தாள இயலாது, இந்த அரச குமாரனைக் கொணர்ந்தோம், இதுவரை;
- தாறுமாறானது பிழைப்பு;
- தத்தளிப்பது எதுவரை?
- காற்று, மழை வலுக்கலாயின;
- எமது செயல்கள் யாவும் கேலி செய்வதற்கிடமானது;
- அன்புடன் எம்மையாளும் கணவரை இடை பிரியலாயிற்று.
- நகைகள் யாவும் உனக்களித்தோமம்மா;
- இந்த இன்முகத்தோனைக் கரை சேர்ப்பாயம்மா;
- எவளாகிலும் (இவனை) வலிய யேன் கொணர்ந்தோமம்மா?
- மலரோன் எழுதிய எழுத்து எப்படியிருந்தாலும், நாதன் பிழைத்திருந்தால் போதும்;
- ஊழியானது, பெண்கள் எப்பணி செய்யினும்.
- உடல்களையெல்லாம் அளித்தோமம்மா;
- கண்ண தேவனைக் கரை சேர்ப்பாயம்மா;
- எழிலுருவத்தோனை யாம் மோசம் செய்தோமம்மா.
- யாமொன்று எண்ணப் போனோமம்மா;
- எம் காவல் தெய்வம் என்னென்னவோ எண்ணிக்கொண்டானம்மா;
- குழலியரோ தியாகராசனின் நண்பனைப் பிரியோமம்மா.
- மாரனின் தொல்லை தாள இயலாது, இந்த அரச குமாரனைக் கொணர்ந்தோம், இதுவரை;
- எமது துயரங்களையெல்லாம் தீர்ப்பாயம்மா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அல்லகல்லோலமு/-ஆயெனு/-அம்ம/ யமுனா/ தே3வி/
பெருங்குழப்பம்/ ஆனது/ அம்மா/ யமுனா/ தேவி/
மா/-ஆர்துலு/-எல்லனு/ தீர்பு/-அம்ம/
எமது/ துயரங்களை/ யெல்லாம்/ தீர்ப்பாய்/ அம்மா/
அனுபல்லவி
மொல்லலசே/ பூஜிஞ்சி/ ம்ரொக்கெத3மு/ ப்3ரோவுமு/-அம்ம/ (அ)
முல்லை மலர்களால்/ பூசித்து/ வணங்கினோம்/ காப்பாய்/ அம்மா/
சரணம்
சரணம் 1
மாரு/ பா3ரிகி/ தாள/ லேக/-ஈ/ ராஜ/
மாரனின்/ தொல்லை/ தாள/ இயலாது/ இந்த/ அரச/
குமாருனி/ தெச்சிதிமி/-இந்தா3க/
குமாரனை/ கொணர்ந்தோம்/ இதுவரை/
தாருமாரு/-ஆயெ/ ப்3ரதுகு/ தத்தளிஞ்சுனதி3/-எந்தா3க/ (அ)
தாறுமாறு/ ஆனது/ பிழைப்பு/ தத்தளிப்பது/ எதுவரை/
சரணம் 2
கா3லி/ வானலு/ நிண்டா3ரு-ஆயெ/ மா/ பனுலு/-எல்ல/
காற்று/ மழை/ வலுக்கலாயின/ எமது/ செயல்கள்/ யாவும்/
கே3லி/ ஸேயுடகு/-எட3மு-ஆயெ/
கேலி/ செய்வதற்கு/ இடமானது/
மாலிமிதோ/ மம்மு/-ஏலு/ மக3னி/-எட3/ பா3யனு-ஆயெ/ (அ)
அன்புடன்/ எம்மை/ யாளும்/ கணவரை/ இடை/ பிரியலாயிற்று/
சரணம் 3
ஸொம்முலு/-எல்ல/ நீகு/-ஒஸகெ3த3மு/-அம்ம/ யமுனா/ தே3வி/-ஈ/
நகைகள்/ யாவும்/ உனக்கு/ அளித்தோம்/ அம்மா/ யமுனா/ தேவி/ இந்த/
ஸுமுகு2னி/ க3ட்டு/ ஜேர்புமு/-அம்ம/
இன்முகத்தோனை/ கரை/ சேர்ப்பாய்/ அம்மா/
எம்மெ/ கானி/ ப3லிமினி/-ஏல/ தெச்சிதிமி/-அம்ம/ (அ)
எவள்/ ஆகிலும்/ (இவனை) வலிய/ யேன்/ கொணர்ந்தோம்/ அம்மா/
சரணம் 4
நளின ப4வுடு3/ வ்ராஸின/ வ்ராலு/-எட்லு/-ஐன கானி/
மலரோன்/ எழுதிய/ எழுத்து/ எப்படி/ யிருந்தாலும்/
நாது2டு3/ ப்3ரதிகி/-உண்டே/ சாலு/
நாதன்/ பிழைத்து/ இருந்தால்/ போதும்/
ப்ரளயமுலு/-அய்யெனு/ ஏ/ பனி/ ஜேஸின/ பா4மலு/ (அ)
ஊழி/ யானது/ எந்த/ பணி/ செய்யினும்/ பெண்கள்/
சரணம் 5
தே3ஹமுலு/-எல்லனு/-ஒஸகெ3த3மு/-அம்ம/ ஓ தே3வி/ க்ரு2ஷ்ண/
உடல்களை/ யெல்லாம்/ அளித்தோம்/ அம்மா/ ஓ தேவி/ கண்ண/
தே3வுனி/ க3ட்டு/ ஜேர்புமு/-அம்ம/
தேவனை/ கரை/ சேர்ப்பாய்/ அம்மா/
மோஹன/-அங்கு3னி/ மேமு/ மோஸ/-பு3ச்சிதிமி/-அம்ம/ (அ)
எழில்/ உருவத்தோனை/ யாம்/ மோசம்/ செய்தோம்/ அம்மா/
சரணம் 6
மேமு/-ஒக்கடி/-எஞ்ச/ போதிமி/-அம்ம/ மா/ பாலி/ தே3வுடு3/-
யாம்/ ஒன்று/ எண்ண/ போனோம்/ அம்மா/ எம்/ காவல்/ தெய்வம்/
ஏமோமோ/ எஞ்சுகொன்னாடு3/-அம்ம/
என்னென்னவோ/ எண்ணிக்கொண்டான்/ அம்மா/
ராமரோ/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆப்துனி/ பா3யமு/-அம்ம/ (அ)
குழலியரோ/ ஸ்ரீ தியாகராசனின்/ நண்பனை/ பிரியோம்/ அம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இந்த கீர்த்தனையில் வரும், 'அம்ம' என்ற தெலுங்கு சொல், புத்தகங்களில், ஒரே சீராகக் கொடுக்கப்படவில்லை. சில இடங்களில், 'அம்மா' என்றும், சிலவற்றில், 'அம்ம' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, எல்லா இடங்களிலும், 'அம்ம' என்றே ஏற்கப்பட்டது.
1 - அனுபல்லவி - சில புத்தகங்களில், அனுபல்லவி, பல்லவியின் கடைசி வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
4 - தத்தளிஞ்சுனதெ3ந்தா3க - தத்தளிஞ்சேதெ3ந்தா3க.
5 - ஒஸகெ3த3மம்ம - ஒஸகே3மம்ம.
7 - ராமரோ - பா4மரோ.
Top
மேற்கோள்கள்
2 - மொல்ல - அடுக்கு மல்லி.
Top
விளக்கம்
3 - பா3ரிகி - தெலுங்கில், 'பாரி' என்றும் 'பா3ரி' என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. 'பாரி' என்பதற்கு 'பருவம்', 'காலம்' என்று பொருளாகும் (மாரு பாரி - வசந்த காலம்). 'பா3ரி' என்பதற்கு, 'தொல்லை' என்று பொருளாகும். இரண்டு பொருள்களுமே இவ்விடத்தில் பொருந்தும். ஆனால், 'தொல்லை' என்ற பொருள் அதிகம் பொருந்துவதனால், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருளே ஏற்கப்பட்டது.
6 - எம்மெ கானி - 'எம்மெ' என்ற சொல்லுக்கு, 'ஒயில்', 'அழகு', 'கேளிக்கை' என்று பொருளாகும். இந்தப் பொருள் ஏதும் இவ்விடத்தில் பொருந்தாது. ஒரு புத்தகத்தினில், இதற்கு (எம்மெ கானி), 'யாராகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் ஏற்கப்பட்டது.
Top
இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. ஆய்ச்சியர், யமுனையில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சி, யமுனா தேவியினை வேண்டி இப்பாடல் பாடுகின்றனர்.)
தியாகராசனின் நண்பன் - கண்ணன்
Top
Updated on 14 Feb 2011
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
எம்மெ கானி- எம்மெ என்பதற்கு மனோஹரத்வமு/விலாஸமு என்ற பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு கர்வம், செருக்கு, தலைக்கனம், தற்பெருமை என்ற பொருள்கள் உண்டா?
(எங்கள்) செருக்கு அன்றி (வேறென்ன?) இவனை வலியயேன் கொணர்ந்தோமம்மா என்று பொருள் கொள்ளலாமா?
கோபியரின் செருக்கை அடக்கக் கண்ணன் நிகழ்த்திய நாடகம் தானே இது.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'எம்மெ' என்ற சொல்லுக்கு அடுத்து வரும் 'கானி' என்ற சொல்லினால், நீங்கள் கூறும் பொருள் கொள்ள இயலாது. நான் புத்தகங்களில் கொடுத்துள்ள பொருளைக் கருத்தில் கொண்டே, 'யாராகிலும்' என்ற பொருளை ஏற்றேன் என்று குறிப்பில் கூறியுள்ளேன்.
வணக்கம்,
கோவிந்தன்.
Post a Comment