தீருனா நா லோனி து3க்3த4
அனுபல்லவி
ஸாரமௌ நீ பாத3 ஸாரஸமு நாது3 ஹ்ரு2த3-
யாரவிந்த3முன பெட்டி கட்டுகோக (தீ)
சரணம்
சரணம் 1
கம்ம வில்துனி கன்ன காந்தி கலிகி3ன 1ஹரீ
2மும்மாரு பாலன்னமு பு4ஜிம்ப பெட்டி
கம்மனி விடெ3மொஸகி3 கடு3 ரத்னமுலு மெரயு
தம்ம படி3க3னு பட்டி தானிபுடு3 நிலுவகனு (தீ)
சரணம் 2
அனுதி3னமு 3நீது3 பாதா3ப்3ஜமுலனொத்துசுனு
கனக மயமௌ ஸுரடி கரமுனிடி3 விஸரி
க4னமைன ப2ணி தல்பமுனனுஞ்சி பாடு3சுனு
கனுலார ஸேவிஞ்சி காலமுல க3ட3பகனு (தீ)
சரணம் 3
ராஜாதி4 ராஜ ஸுர ராஜ வந்தி3த பாத3
ஸ்ரீ ஜானகீ ரமண ஸ்1ரு2ங்கா3ர ஜலதே4
ராஜ த4ருட3கு3 4த்யாக3ராஜ பூஜிதுட3னுசு
ராஜில்லு நீ கீர்தி ராஜிக3 பொக3ட3கனு (தீ)
பொருள் - சுருக்கம்
- கரும்பு வில்லோனை யீன்ற, ஒளிபடைத்த அரியே!
- அரசர்க்கரசே! தேவர் தலைவன் வணங்கும் திருவடியோனே! சானகி மணாளா! வனப்புக் கடலே!
- தீருமா எனதுள்ளத்தின் ஏக்கம்?
- சாரமான உனது திருவடித்தாமரையினை எனது இதயக் கமலத்திலிருத்தி, அணைத்துக்கொள்ளாது,
- தீருமா எனதுள்ளத்தின் ஏக்கம்?
- முவ்வேளையும் பாற்சோறு உண்ணுவித்து,
- மணக்கும் வீடிகையளித்து,
- உயர் இரத்தினங்கள் ஒளிரும் வெற்றிலைப் படிகத்தினை யேந்தி, நான் இவ்வமயம் நில்லாது
- முவ்வேளையும் பாற்சோறு உண்ணுவித்து,
- தீருமா எனதுள்ளத்தின் ஏக்கம்?
- நாளுமுனது திருவடித்தாமரைகளைத் தடவிக்கொடுத்து,
- பொன் மயமான விசிறியைக் கையிலேந்தி, விசிறி,
- உயர் அரவணையில் படுக்கவைத்து, பாடிக்கொண்டு,
- கண்ணார சேவித்துக்கொண்டு, நாட்களைக் கழிக்காது
- நாளுமுனது திருவடித்தாமரைகளைத் தடவிக்கொடுத்து,
- தீருமா எனதுள்ளத்தின் ஏக்கம்?
- மதியணிவோனாகிய தியாகராசன் வழிபடுவோனெனத் திகழும் உனது புகழை, வாயாரப் போற்றாது
- தீருமா எனதுள்ளத்தின் ஏக்கம்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தீருனா/ நா/ லோனி/ து3க்3த4/
தீருமா/ எனது/ உள்ளத்தின்/ ஏக்கம்/
அனுபல்லவி
ஸாரமௌ/ நீ/ பாத3/ ஸாரஸமு/ நாது3/ ஹ்ரு2த3ய/-
சாரமான/ உனது/ திருவடி/ தாமரையினை/ எனது/ இதய/
அரவிந்த3முன/ பெட்டி/ கட்டுகோக/ (தீ)
கமலத்தில்/ இருத்தி/ அணைத்துக்கொள்ளாது/ தீருமா...
சரணம்
சரணம் 1
கம்ம/ வில்துனி/ கன்ன/ காந்தி/ கலிகி3ன/ ஹரீ/
கரும்பு/ வில்லோனை/ யீன்ற/ ஒளி/ படைத்த/ அரியே/
மும்மாரு/ பாலு/-அன்னமு/ பு4ஜிம்ப பெட்டி/
முவ்வேளையும்/ பாற்/ சோறு/ உண்ணுவித்து/
கம்மனி/ விடெ3மு/-ஒஸகி3/ கடு3/ ரத்னமுலு/ மெரயு/
மணக்கும்/ வீடிகை/ யளித்து/ உயர்/ இரத்தினங்கள்/ ஒளிரும்/
தம்ம/ படி3க3னு/ பட்டி/ தானு/-இபுடு3/ நிலுவகனு/ (தீ)
வெற்றிலை/ படிகத்தினை/ யேந்தி/ நான்/ இவ்வமயம்/ நில்லாது/ தீருமா...
சரணம் 2
அனுதி3னமு/ நீது3/ பாத3/-அப்3ஜமுலனு/-ஒத்துசுனு/
நாளும்/ உனது/ திருவடி/ தாமரைகளை/ தடவிக்கொடுத்து/
கனக/ மயமௌ/ ஸுரடி/ கரமுன/-இடி3/ விஸரி/
பொன்/ மயமான/ விசிறியை/ கையில்/ ஏந்தி/ விசிறி/
க4னமைன/ ப2ணி/ தல்பமுனனு/-உஞ்சி/ பாடு3சுனு/
உயர்/ அரவு/ அணையில்/ படுக்கவைத்து/ பாடிக்கொண்டு/
கனுலார/ ஸேவிஞ்சி/ காலமுல/ க3ட3பகனு/ (தீ)
கண்ணார/ சேவித்துக்கொண்டு/ நாட்களை/ கழிக்காது/ தீருமா...
சரணம் 3
ராஜ/-அதி4 ராஜ/ ஸுர/ ராஜ/ வந்தி3த/ பாத3/
அரசர்க்கு/ அரசே/ தேவர்/ தலைவன்/ வணங்கும்/ திருவடியோனே/
ஸ்ரீ ஜானகீ/ ரமண/ ஸ்1ரு2ங்கா3ர/ ஜலதே4/
ஸ்ரீ ஜானகி/ மணாளா/ வனப்பு/ கடலே/
ராஜ/ த4ருடு3/-அகு3/ த்யாக3ராஜ/ பூஜிதுடு3/-அனுசு/
மதி/ யணிவோன்/ ஆகிய/ தியாகராசன்/ வழிபடுவோன்/ என/
ராஜில்லு/ நீ/ கீர்தி/ ராஜிக3/ பொக3ட3கனு/ (தீ)
திகழும்/ உனது/ புகழை/ வாயார/ போற்றாது/ தீருமா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹரீ - ஹரே.
3 - நீது3 பாதா3ப்3ஜ - நீ பாதா3ப்3ஜ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - மும்மாரு - இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'உறுதியாக' என்றும் 'மும்முறை' என்று பொருளுண்டு. இவ்விடம், 'மும்முறை' (முவ்வேளை) என்று பொருள் கொள்ளப்பட்டது.
4 - த்யாக3ராஜ - தியாகராஜன் - இவ்விடம் (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், பிரகலாதனின் ஏக்கத்தினைத் தியாகராஜர் விவரிக்கின்றார்.
கரும்பு வில்லோன் - காமன்
மதியணிவோன் - சிவன்
Top
Updated on 03 Jan 2011
No comments:
Post a Comment