1ஜய ஜய ஸீதா ராம் ஜய ஜய ரகு4 ராம்
ஜய ஜய கல்யாண ஸுந்த3ர காருண்ய ராம்
சரணம்
சரணம் 1
ஸ1ரணாக3த வத்ஸலாக3ம ஸார
பரம புருஷ நம்மிதினி மனஸார (ஜய)
சரணம் 2
2பரிபூர்ண காருண்ய பாராவார
ஸுர முனி ஜன யோகி3 க3ண பரிவார (ஜய)
சரணம் 3
நீ மர்மமெருக3 ப்3ரஹ்மாது3ல வஸ1மா
ராம சந்த்3ர நிஜ தா3ஸ ஸ்வ-வஸ1மா (ஜய)
சரணம் 4
நிஸி1 சர ஹரண த4ராதி4ப ராகா
ஸ1ஸி1 முக2 நாபை நீகிந்த பராகா (ஜய)
சரணம் 5
காவவே நனு ஸச்சிதா3னந்த3 க4னமா
நாவண்டி தீ3னுனி ப்3ரோசுட க4னமா (ஜய)
சரணம் 6
நீவே தை3வமனி நெர நம்மினானு
தே3வ நீது3 நாமமே நம்மினானு (ஜய)
சரணம் 7
அஜ முக2 பாலன 3நித்யாக3
ராஜாத்மஜ பதி நுத பாலித த்யாக3ராஜ (ஜய)
பொருள் - சுருக்கம்
- ஜய! ஜய! சீதாராமா! ஜய! ஜய! இரகுராமா! ஜய! ஜய! கலியாண சுந்தர, கருணை மிகு இராமா!
- சரணடைந்தோரிடம் பரிவுடையோனே! ஆகம சாரமே! பரம்பொருளே!
- பரிபூரணனே! கருணைக்கடலே! வானோர், முனிவர்கள், யோகியர்கள் சுற்றத்தோனே!
- இராமசந்திரா! உண்மைத் தொண்டர் வயப்பட்டோனே!
- இரவில் சரிப்போரை அழித்தோனே! புவியாள்வோனே! முழு மதி வதனத்தோனே!
- நிறை சச்சிதானந்தமே!
- இறைவா!
- பிரமன் ஆகியோரைக் காப்போனே! அழியாதவனே! மலையரசன் மகள் மணாளன் போற்றும், தியாகராசனைப் பேணுவோனே!
- உன்னை நம்பினேன் மனதார.
- உனது மருமத்தினையறிய பிரமன் ஆகியோராலும் இயலுமா?
- என்மீது உனக்கித்தனை அசட்டையா?
- காப்பாய்!
- என்னைப்போன்ற தீனனைக் காப்பது பளுவா?
- நீயே தெய்வமென முழுமையாக நம்பியுள்ளேன்.
- உனது நாமத்தினையே நம்பியுள்ளேன்.
- உன்னை நம்பினேன் மனதார.
- ஜய! ஜய! சீதாராமா! ஜய! ஜய! இரகுராமா! ஜய! ஜய! கலியாண சுந்தர, கருணை மிகு இராமா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ ஜய/ ஸீதா/ ராம்/ ஜய/ ஜய/ ரகு4/ ராம்/
ஜய/ ஜய/ சீதா/ ராமா/ ஜய/ ஜய/ இரகு/ ராமா/
ஜய/ ஜய/ கல்யாண/ ஸுந்த3ர/ காருண்ய/ ராம்/
ஜய/ ஜய/ கலியாண/ சுந்தர/ கருணை மிகு/ இராமா/
சரணம்
சரணம் 1
ஸ1ரணு/-ஆக3த/ வத்ஸல/-ஆக3ம/ ஸார/
சரண்/ அடைந்தோரிடம்/ பரிவுடையோனே/ ஆகம/ சாரமே/
பரம புருஷ/ நம்மிதினி/ மனஸார/ (ஜய)
பரம்பொருளே/ உன்னை/ நம்பினேன்/ மனதார/
சரணம் 2
பரிபூர்ண/ காருண்ய/ பாராவார/
பரிபூரணனே/ கருணை/ கடலே/
ஸுர/ முனி ஜன/ யோகி3 க3ண/ பரிவார/ (ஜய)
வானோர்/ முனிவர்கள்/ யோகியர்கள்/ சுற்றத்தோனே/
சரணம் 3
நீ/ மர்மமு/-எருக3/ ப்3ரஹ்மா/-ஆது3ல/ வஸ1மா/
உனது/ மருமத்தினை/ யறிய/ பிரமன்/ ஆகியோராலும்/ இயலுமா/
ராம/ சந்த்3ர/ நிஜ/ தா3ஸ/ ஸ்வ-வஸ1மா/ (ஜய)
இராம/ சந்திரா/ உண்மை/ தொண்டர்/ வயப்பட்டோனே/
சரணம் 4
நிஸி1/ சர/ ஹரண/ த4ரா/-அதி4ப/ ராகா/
இரவில்/ சரிப்போரை/ அழித்தோனே/ புவி/ யாள்வோனே/ முழு/
ஸ1ஸி1/ முக2/ நாபை/ நீகு/-இந்த/ பராகா/ (ஜய)
மதி/ வதனத்தோனே/ என்மீது/ உனக்கு/ இத்தனை/ அசட்டையா/
சரணம் 5
காவவே/ நனு/ ஸத்-சித்-ஆனந்த3/ க4னமா/
காப்பாய்/ சச்சிதானந்தமே/ நிறை/
நா/-அண்டி/ தீ3னுனி/ ப்3ரோசுட/ க4னமா/ (ஜய)
என்னை/ போன்ற/ தீனனை/ காப்பது/ பளுவா/
சரணம் 6
நீவே/ தை3வமு/-அனி/ நெர/ நம்மினானு/
நீயே/ தெய்வம்/ என/ முழுமையாக/ நம்பியுள்ளேன்/
தே3வ/ நீது3/ நாமமே/ நம்மினானு/ (ஜய)
இறைவா/ உனது/ நாமத்தினையே/ நம்பியுள்ளேன்/
சரணம் 7
அஜ/ முக2/ பாலன/ நித்ய/-அக3/
பிரமன்/ ஆகியோரை/ காப்போனே/ அழியாதவனே/ மலை/
ராஜ/-ஆத்மஜ/ பதி/ நுத/ பாலித/ த்யாக3ராஜ/ (ஜய)
அரசன்/ மகள்/ மணாளன்/ போற்றும்/ தியாகராசனை/ பேணுவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜய ஜய - ஜே ஜே.
3 - அக3 ராஜாத்மஜ (அக ராஜ ஆத்மஜ) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இது மலையரசன் மகளாகிய பார்வதியைக் குறிப்பதனால், 'ஆத்மஜா' (பெண்பால்) என்று இருக்கவேண்டுமென்று நான் கருதுகின்றேன்.
சில புத்தகங்களில், பல்லவி, முதலாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சில புத்தகங்களில் சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
2 - பரிபூர்ண - பரிபூரணண் - இச்சொல்லுக்கு விளக்கம் கூறுவது இயலாது. ஆயினும், கீழ்க்கண்ட உபநிடதச் செய்யுளினை நோக்கவும் -
ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத்-பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவஸி1ஷ்யதே ||
"ஓம். பூரணம் அஃது (பரம்பொருள்); பூரணம் இஃது (புலப்படும் உலகம்); அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது.
அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."
Top
விளக்கம்
இரவில் சரிப்போர் - அரக்கர்
புவியாள்வோனே - 'புவிமகள் (பூதேவி) மணாளா' என்றும் கொள்ளலாம்.
மலையரசன் மகள் - பார்வதி
மலையரசன் மகள் மணாளன் - சிவன்
Top
Updated on 01 Jan 2011
No comments:
Post a Comment