Saturday, November 13, 2010

தியாகராஜ கிருதி - நே மொர பெட்டிதே - ராகம் ரூபவதி - Ne Mora Pettite - Raga Rupavati

பல்லவி
நே மொர பெட்டிதே மதி3லோன
1நீகாயாஸமேலரா

அனுபல்லவி
ஈ மானவாத4முலனு கோரி
எல்ல வாரல வலெனுண்ட3கனு (நே)

சரணம்
2தபமொகடியொனர 3ஜேஸிதினோ
தா3னம்பொ3கடி 3அடி3கி3தினோ
கபடாத்முடை3 3பலிகிதினோ
கலி ஹர த்யாக3ராஜ நுத (நே)


பொருள் - சுருக்கம்
கலியை அடக்குவோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • நான் (உன்னிடம்) முறையிட்டால் மனதிற்குள், உனக்கு ஆயாசம் ஏனய்யா?

    • இந்த மனிதரில் இழிந்தோரைக் கோரி, (மற்ற) எல்லோரையும் போல இல்லாமல்,

  • நான் (உன்னிடம்) முறையிட்டால் மனதிற்குள், உனக்கு ஆயாசம் ஏனய்யா?

      (வரம் கோரி) தவமேதும் இயற்றினேனோ?
    • தானம் ஏதும் கேட்டேனோ?
    • வஞ்ச உள்ளத்தினனாகி (ஏதும்) பேசினேனோ?

  • நான் (உன்னிடம்) முறையிட்டால் மனதிற்குள், உனக்கு ஆயாசம் ஏனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நே/ மொர/ பெட்டிதே/ மதி3லோன/
நான்/ (உன்னிடம்) முறை/ யிட்டால்/ மனதிற்குள்/

நீகு/-ஆயாஸமு/-ஏலரா/
உனக்கு/ ஆயாசம்/ ஏனய்யா/


அனுபல்லவி
ஈ/ மானவ/-அத4முலனு/ கோரி/
இந்த/ மனிதரில்/ இழிந்தோரை/ கோரி/

எல்ல வாரல/ வலெ/-உண்ட3கனு/ (நே)
(மற்ற) எல்லோரையும்/ போல/ இல்லாமல்/ நான்...


சரணம்
தபமு/-ஒகடி/-ஒனர ஜேஸிதினோ/
(வரம் கோரி) தவம்/ ஏதும்/ இயற்றினேனோ/

தா3னம்பு3/-ஒகடி/ அடி3கி3தினோ/
தானம்/ ஏதும்/ கேட்டேனோ/

கபட/-ஆத்முடை3/ பலிகிதினோ/
வஞ்ச/ உள்ளத்தினனாகி/ (ஏதும்) பேசினேனோ/

கலி/ ஹர/ த்யாக3ராஜ/ நுத/ (நே)
கலியை/ அடக்குவோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீகாயாஸமேலரா - நீகாயாஸமுயேலரா.

3 - ஜேஸிதினோ - அடி3கி3தினோ - பலிகிதினோ : ஜேஸிதினனோ - அடி3கி3தினனோ - பலிகிதினனோ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - தபமொகடி - தவம் ஏதும் இயற்றினேனோ. எந்த தெய்வத்தினை நோக்கித் தவம் இயற்றப்படுகின்றதோ, அந்த தெய்வம் வரமருளக் கடமைப் படுகிறது. அந்த மாதிரி, வரம் பெறுவதற்குத் தவமியற்றி, உன்னை நான் கட்டுப்படுத்தவில்லை என்கின்றார்.

மற்றெல்லோரையும் போல - செல்வந்தரை இரந்து திரிவோர்.
கலியை - கலியுகத்தில் காணப்படும் கேடுகளை என.

Top


Updated on 14 Nov 2010

No comments: