Saturday, November 13, 2010

தியாகராஜ கிருதி - மனஸா மன - ராகம் வர்த4னி - Manasaa Mana - Raga Vardhani

பல்லவி
மனஸா மன ஸாமர்த்2யமேமி ஓ (ம)

அனுபல்லவி
வினு ஸாகேத ராஜு விஸ்1வமனே ரத2முனெக்கி
தன ஸாமர்த்2யமுசே தானே நடி3பிஞ்செனே (ம)

சரணம்
அல நாடு3 வஸிஷ்டா2து3லு பட்டமு கட்டே
பலுகுல வினி வேக3மே பூ4ஷணமுலனொஸகி3ன கைகனு
பலுமாரு ஜக3ம்பு3லு 1கல்லலனின ரவிஜுனி மாய
வல வேஸி த்யாக3ராஜ வரது3டு3 தா 2சனக3 லேதா3 (ம)


பொருள் - சுருக்கம்
ஒ மனமே!

  • கேள்!
  • நமது திறமையென்ன?

  • சாகேத மன்னன் பேரண்டமெனும் தேரேறி, தனது திறமையினால், தானே (தேரை) நடத்துகின்றானே!

    • அன்று, வசிட்டர் ஆகியோர் (ராமனுக்கு) பட்டம் கட்டும் சொற்களைக் கேட்டு, விரைவாக, நகைகளை யளித்த கைகேயியையும்,
    • பன்முறை, உலகம் பொய்யென்ற பரிதி மைந்தனையும்,

  • மாய வலை வீசி, தியாகராசனுக்கருள்வோன், தான் மாற்றவில்லையா?

  • நமது திறமையென்ன?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸா/ மன/ ஸாமர்த்2யமு/-ஏமி/ ஓ/ (ம)
மனமே/ நமது/ திறமை/ யென்ன/ ஒ/ மனமே...


அனுபல்லவி
வினு/ ஸாகேத/ ராஜு/ விஸ்1வமு/-அனே/ ரத2முன/-எக்கி/
கேள்/ சாகேத/ மன்னன்/ பேரண்டம்/ எனும்/ தேர்/ ஏறி/

தன/ ஸாமர்த்2யமுசே/ தானே/ நடி3பிஞ்செனே/ (ம)
தனது/ திறமையினால்/ தானே/ (தேரை) நடத்துகின்றானே/


சரணம்
அல நாடு3/ வஸிஷ்ட2/-ஆது3லு/ பட்டமு/ கட்டே/
அன்று/ வசிட்டர்/ ஆகியோர்/ (ராமனுக்கு) பட்டம்/ கட்டும்/

பலுகுல/ வினி/ வேக3மே/ பூ4ஷணமுலனு/-ஒஸகி3ன/ கைகனு/
சொற்களை/ கேட்டு/ விரைவாக/ நகைகளை/ யளித்த/ கைகேயியையும்/

பலுமாரு/ ஜக3ம்பு3லு/ கல்லலு/-அனின/ ரவிஜுனி/ மாய/
பன்முறை/ உலகம்/ பொய்/ யென்ற/ பரிதி மைந்தனையும்/ மாய/

வல/ வேஸி/ த்யாக3ராஜ/ வரது3டு3/ தா/ சனக3 லேதா3/ (ம)
வலை/ வீசி/ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ தான்/ மாற்றவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கல்லலனின - கல்லமனின.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - சனக3 லேதா3 - இதற்கு 'மாற்றவில்லையா?' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், 'சனக3' என்ற சொல்லுக்கு, 'மாற்று' என்று பொருள் உள்ளதா என்று தெரியவில்லை.

சாகேத - அயோத்தி நகர்
நகைகளையளித்த - மந்தரைக்கு அளித்தது
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

Top


Updated on 13 Nov 2010

No comments: