பாஹி கல்யாண ஸுந்த3ர ராம மாம்
பாஹி கல்யாண ஸுந்த3ர 1ராம
சரணம்
சரணம் 1
சதி3வின வாட3னு கானு ராம
இதி3 2பு3த்3தி4யனுசு தெலிய லேனு (பா)
சரணம் 2
ப4ஜியிஞ்சுடகு பு3த்3தி4 லேக ராம
ப3திமாலி திரிகி3திந்தா3க (பா)
சரணம் 3
தி3ன தி3னமுத3ரமு கொரகை ராம
த4னிகுல 3காசிதீவரகு (பா)
சரணம் 4
ஆலு ஸுதுல பைனி ப்ரேம நீ
பதா3லனுஞ்சனைதி ராம (பா)
சரணம் 5
ஸம்ஸார ஸுக2மு ஸதமனி நாம
ஸாரமெருக3 மரசிதினி (பா)
சரணம் 6
விஷய ஸுகா2து3ல ரோய லேக
விர்ரவீகி3 மோஸமாயெ (பா)
சரணம் 7
4நேரமெந்தோ சேஸினானு 5ஏமி
நேரமனுசு வேடி3னானு (பா)
சரணம் 8
ஸு1க ஸன்னுத நன்னு கன்ன தண்ட்3ரி
ஒக பாரி 6ஸ1ரணனுகொன்னா (பா)
சரணம் 9
தம்மி கன்னுல ரகு4வீர நினு
நம்மிதி நன்னேலுகோரா (பா)
சரணம் 10
நினு நம்முவாரிதே3 மேலு ராம
நீ பாத3 ஸேவ வேயி வேலு (பா)
சரணம் 11
ஸாகேத ராம நா மீத3 7த3ய
லேகுண்டு3டகு மரியாதா3 (பா)
சரணம் 12
ஸ1ரண்ய கோஸல ராஜ ராம
பரிபாலித த்யாக3ராஜ (பா)
பொருள் - சுருக்கம்
- கலியாண சுந்தர இராமா!
- சுக முனிவர் போற்றும், என்னையீன்ற தந்தையே!
- கமலக் கண்களுடைய இரகுவீரா!
- அயோத்தி நகர இராமா!
- புகலருள்வோனே! கோசல மன்னா! தியாகராசனைப் பேணுவோனே!
- காப்பாயென்னை.
- கற்றவனல்லன், இஃதறிவென தெரிந்திலேன்.
- (உன்னை) துதித்திட அறிவின்றி, (மனிதர்கனை) இரந்துத் திரிந்தேன், இதுவரை.
- அன்றாடம் வயிற்றுக்காக, செல்வந்தரை அண்டினேன், இதுவரை.
- மனைவி, மக்கள் மீதான அன்பினை, உனது திருவடிகளில் வைத்தேனில்லை.
- இல்வாழ்க்கை இன்பத்தை நிலையென, (உனது) நாம சாரத்தினை யுணர மறந்தேன்.
- புலன் இன்பங்கள் ஆகியவற்றை வெறுக்காது, செருக்குற்று மோசம்போனேன்.
- தவறுகள் எத்தனையோ இழைத்தேன்; ஏதும் கற்றிலேனென வேண்டினேன்.
- ஒரு முறை (உன்னைச்) சரணடைந்தாலும், காப்பாயென்னை.
- உன்னை நம்பினேன்; என்னை யாள்வாயய்யா.
- உன்னை நம்பியவன்; இதுவே மேலானது.
- உனது திருவடி சேவையே பன்னாயிரம்.
- கற்றவனல்லன், இஃதறிவென தெரிந்திலேன்.
- என் மீது தயை இல்லாதிருப்பது மரியாதையோ?
- காப்பாயென்னை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ கல்யாண/ ஸுந்த3ர/ ராம/ மாம்/
காப்பாய்/ கலியாண/ சுந்தர/ இராமா/ என்னை/
பாஹி/ கல்யாண/ ஸுந்த3ர/ ராம/
காப்பாய்/ கலியாண/ சுந்தர/ இராமா/
சரணம்
சரணம் 1
சதி3வின வாட3னு/ கானு/ ராம/
கற்றவன்/ அல்லன்/ இராமா/
இதி3/ பு3த்3தி4/-அனுசு/ தெலிய லேனு/ (பா)
இஃது/ அறிவு/ என/ தெரிந்திலேன்/
சரணம் 2
ப4ஜியிஞ்சுடகு/ பு3த்3தி4/ லேக/ ராம/
(உன்னை) துதித்திட/ அறிவு/ இன்றி/ இராமா/
ப3திமாலி/ திரிகி3தி/-இந்தா3க/ (பா)
(மனிதர்கனை) இரந்து/ திரிந்தேன்/ இதுவரை/
சரணம் 3
தி3ன தி3னமு/-உத3ரமு கொரகை/ ராம/
அன்றாடம்/ வயிற்றுக்காக/ இராமா/
த4னிகுல/ காசிதி/-ஈவரகு/ (பா)
செல்வந்தரை/ அண்டினேன்/ இதுவரை/
சரணம் 4
ஆலு/ ஸுதுல/ பைனி/ ப்ரேம/ நீ/
மனைவி/ மக்கள்/ மீதான/ அன்பினை/ உனது/
பதா3ல/-உஞ்சனைதி/ ராம/ (பா)
திருவடிகளில்/ வைத்தேனில்லை/ இராமா/
சரணம் 5
ஸம்ஸார/ ஸுக2மு/ ஸதமு/-அனி/ நாம/
இல்வாழ்க்கை/ இன்பத்தை/ நிலை/ யென/ (உனது) நாம/
ஸாரமு/-எருக3/ மரசிதினி/ (பா)
சாரத்தினை/ யுணர/ மறந்தேன்/
சரணம் 6
விஷய/ ஸுக2/-ஆது3ல/ ரோய லேக/
புலன்/ இன்பங்கள்/ ஆகியவற்றை/ வெறுக்காது/
விர்ரவீகி3/ மோஸமாயெ/ (பா)
செருக்குற்று/ மோசம்போனேன்/
சரணம் 7
நேரமு/-எந்தோ/ சேஸினானு/ ஏமி/
தவறுகள்/ எத்தனையோ/ இழைத்தேன்/ ஏதும்/
நேரமு/-அனுசு/ வேடி3னானு/ (பா)
கற்றிலேன்/ என/ வேண்டினேன்/
சரணம் 8
ஸு1க/ ஸன்னுத/ நன்னு/ கன்ன/ தண்ட்3ரி/
சுக முனிவர்/ போற்றும்/ என்னை/ யீன்ற/ தந்தையே/
ஒக/ பாரி/ ஸ1ரணு/-அனுகொன்னா/ (பா)
ஒரு/ முறை/ (உன்னைச்) சரண்/ அடைந்தாலும்/ காப்பாய்...
சரணம் 9
தம்மி/ கன்னுல/ ரகு4வீர/ நினு/
கமல/ கண்களுடைய/ இரகுவீரா/ உன்னை/
நம்மிதி/ நன்னு/-ஏலுகோரா/ (பா)
நம்பினேன்/ என்னை/ யாள்வாயய்யா/
சரணம் 10
நினு/ நம்முவாரு/-இதே3/ மேலு/ ராம/
உன்னை/ நம்பியவன்/ இதுவே/ மேலானது/ இராமா/
நீ/ பாத3/ ஸேவ/ வேயி வேலு/ (பா)
உனது/ திருவடி/ சேவையே/ பன்னாயிரம்/
சரணம் 11
ஸாகேத/ ராம/ நா/ மீத3/ த3ய/
அயோத்தி நகர/ இராமா/ என்/ மீது/ தயை/
லேக/-உண்டு3டகு/ மரியாதா3/ (பா)
இல்லாது/ இருப்பது/ மரியாதையோ/
சரணம் 12
ஸ1ரண்ய/ கோஸல/ ராஜ/ ராம/
புகலருள்வோனே/ கோசல/ மன்னா/ இராமா/
பரிபாலித/ த்யாக3ராஜ/ (பா)
பேணுவோனே/ தியாகராசனை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம - ராம மாம்.
சில புத்தகங்களில் சரணங்கள் 7, 8, 9 வரிசை மாற்றி, 9, 7, 8 என்று கொடுக்கப்பட்டுள்ளன.
2 - பு3த்3தி4யனுசு - பு3த்3த்4யனுசு.
3 - காசிதீவரகு - கா3சிதி ஈவரகை - கா3சிதனீவரகு.
4 - நேரமெந்தோ - நேரமெந்நோ.
6 - ஸ1ரணனுகொன்னா - ஸ1ரணனுகொன்ன.
7 - த3ய - ப்ரேம.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
5 - ஏமி நேரமு - இவ்விடத்தில் 'நேரமு' என்பதற்கு 'கற்றிலோம்' என்று பொருளாகும்.
சுக முனிவர் - கிளி வடிவ சுகப் பிரம்மம்
பன்னாயிரம் - மிகுந்த செல்வம்
Top
Updated on 04 Nov 2010
No comments:
Post a Comment