இன்னாள்ளு நன்னேலியெந்து3கீ கே3லி
அனுபல்லவி
பன்னுக3 நாபாலி பா4க்3யமா 1வனமாலி (இன்னாள்ளு)
சரணம்
சரணம் 1
பா3லுடை3ன நா 2பரிதாபமு ஜூசி
தாளு தாளுமனி தை4ர்யமு பலிகி
ஜாலி தீர வேட்3க ஸல்புசு மரி
நீகீலாகு3 3பு3த்4யனி 4க்ரீ கண்ட ஜூசுசு (இன்னாள்ளு)
சரணம் 2
எந்து3 போயின வெண்டனேகி3 வத்துனனுசு
முந்து3 பல்கின நீவெந்து3 போதிவோ
அந்த3கா3ட3 ஸத்ய ஸந்து4டு3 நீவைதே
அந்த3ரிலோ நன்னாத3ரிஞ்சுகொம்மி (இன்னாள்ளு)
சரணம் 3
ஜாட3-மாட3க3 நேனு ஜானகீ நாயக
வேட3க3 5லேது3ரா வேமாருலகு
ஈடு3 ஜோடு3 லேனி தோடு3 நீவே கானி
ஆடி3 தப்ப லேனி ஆபத்3-பா3ந்த4வ நீ(வின்னாள்ளு)
சரணம் 4
ஒக ரூபமுன 6ப்3ரோசி ஒக ரூபமுன 6ஏசி
ஒக ரூபமுன 6ஜூசுசுண்டிவி கானி
ஸுக2 தா3யக ஸத்த ஸுந்தைன லேதா3
அகளங்க த்யாக3ராஜார்சித சரண (இன்னாள்ளு)
பொருள் - சுருக்கம்
- சிறப்பாய் என்னைக் காக்கும், எனது பேறே! வனமாலி!
- அழகனே!
- சானகி மணாளா! சொல் தவறாத இடர்கண் சுற்றமே!
- சுகமருள்வோனே! களங்கமற்ற, தியாகராசன் தொழும் திருவடியோனே!
- இத்தனை நாள் என்னை ஆண்டுகொண்டு, எதற்கிந்த கேலி?
- சிறுவனாகிய, எனது பரிதாபத்தினைக் கண்டு,
- பொறுப்பாய், பொறுப்பாயென திடமூட்டி,
- துயர் தீர, வேடிக்கைகள் செய்துகொண்டு, மேலும்,
- 'உனக்கு இஃது உகந்தது' என்று கடைக்கண்ணால் நோக்கிக்கொண்டு
- சிறுவனாகிய, எனது பரிதாபத்தினைக் கண்டு,
- இத்தனை நாள் என்னை ஆண்டுகொண்டு, எதற்கிந்த கேலி?
- எங்கு சென்றாலும், பின் தொடர்ந்து வருவேனென முன்பு உரைத்த நீ எங்கு சென்றாயோ?
- சொல் தவறாதவன் நீயென்றால், அனைவர் நடுவிலும் என்னை ஆதரித்துக்கொள்ளேன்;
- ஒளிவு மறைவாக நான் வேண்டவில்லையய்யா;
- ஆயிரம் முறை, ஈடிணையற்ற துணை நீயே;
- ஓர் உருவில் காத்து, ஓர் உருவில் ஏய்த்து, ஓர் உருவில் நோக்கிக்கொண்டிருந்தாயே யன்றி, நம்பிக்கை சிறிதுமில்லையோ?
- இத்தனை நாள் என்னை ஆண்டுகொண்டு, எதற்கிந்த கேலி?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ளு/ நன்னு/-ஏலி/-எந்து3கு/-ஈ/ கே3லி/
இத்தனை நாள்/ என்னை/ ஆண்டுகொண்டு/ எதற்கு/ இந்த/ கேலி/
அனுபல்லவி
பன்னுக3/ நாபாலி/ பா4க்3யமா/ வனமாலி/ (இன்னாள்ளு)
சிறப்பாய்/ என்னைக் காக்கும்/ (எனது) பேறே/ வனமாலி/
சரணம்
சரணம் 1
பா3லுடை3ன/ நா/ பரிதாபமு/ ஜூசி/
சிறுவனாகிய/ எனது/ பரிதாபத்தினை/ கண்டு/
தாளு/ தாளுமு/-அனி/ தை4ர்யமு/ பலிகி/
பொறுப்பாய்/ பொறுப்பாய்/ என/ திடம்/ ஊட்டி/
ஜாலி/ தீர/ வேட்3க/ ஸல்புசு/ மரி/
துயர்/ தீர/ வேடிக்கைகள்/ செய்துகொண்டு/ மேலும்/
நீகு/-ஈலாகு3/ பு3த்4/-அனி/ க்ரீ/ கண்ட/ ஜூசுசு/ (இன்னாள்ளு)
'உனக்கு/ இஃது/ உகந்தது/' என்று/ கடை/ கண்ணால்/ நோக்கிக்கொண்டு/ இத்தனை...
சரணம் 2
எந்து3/ போயின/ வெண்ட/-ஏகி3/ வத்துனு/-அனுசு/
எங்கு/ சென்றாலும்/ பின்/ தொடர்ந்து/ வருவேன்/ என/
முந்து3/ பல்கின/ நீவு/-எந்து3/ போதிவோ/
முன்பு/ உரைத்த/ நீ/ எங்கு/ சென்றாயோ/
அந்த3கா3ட3/ ஸத்ய ஸந்து4டு3/ நீவு/-ஐதே/
அழகனே/ சொல் தவறாதவன்/ நீ/ என்றால்/
அந்த3ரிலோ/ நன்னு/-ஆத3ரிஞ்சுகொம்மி/ (இன்னாள்ளு)
அனைவர் நடுவிலும்/ என்னை/ ஆதரித்துக்கொள்ளேன்/
சரணம் 3
ஜாட3-மாட3க3/ நேனு/ ஜானகீ/ நாயக/
ஒளிவு மறைவாக/ நான்/ சானகி/ மணாளா/
வேட3க3/ லேது3ரா/ வேமாருலகு/
வேண்டவில்லையய்யா/ ஆயிரம் முறை/
ஈடு3/ ஜோடு3/ லேனி/ தோடு3/ நீவே/ கானி/
ஈடு/ இணை/ அற்ற/ துணை/ நீயே/ ஆயினும்/
ஆடி3/ தப்ப லேனி/ ஆபத்3/-பா3ந்த4வ/ நீவு/-(இன்னாள்ளு)
சொல்/ தவறாத/ இடர்கண்/ சுற்றமே/ நீ/ இத்தனை...
சரணம் 4
ஒக/ ரூபமுன/ ப்3ரோசி/ ஒக/ ரூபமுன/ ஏசி/
ஓர்/ உருவில்/ காத்து/ ஓர்/ உருவில்/ ஏய்த்து/
ஒக/ ரூபமுன/ ஜூசுசு/-உண்டிவி/ கானி/
ஓர்/ உருவில்/ நோக்கிக்கொண்டு/ இருந்தாயே/ யன்றி/
ஸுக2/ தா3யக/ ஸத்த/ ஸுந்த-ஐன/ லேதா3/
சுகம்/ அருள்வோனே/ நம்பிக்கை (வல்லமை) (உண்மை)/ சிறிதும்/ இல்லையோ/
அகளங்க/ த்யாக3ராஜ/-அர்சித/ சரண/ (இன்னாள்ளு)
களங்கமற்ற/ தியாகராசன்/ தொழும்/ திருவடியோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பரிதாபமு - பரிதாபமுல.
3 - பு3த்4யனி (பு3த்4+அனி) - பு3த்3தி4யனி (பு3த்3தி4 +அனி) - இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் என்று நான் கருதுகின்றேன்.
5 - லேது3ரா - லேது3கா3.
6 - ப்3ரோசி - ஜூசி : 'ஜூசி' என்ற சொல் அடுத்து வருவதனால், 'ப்3ரோசி' என்பது ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - வனமாலி - 'வைஜயந்தி' எனப்படும் 'வனமாலை' அணியும் திருமால். இம்மாலை துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதெனப்படும். மாலைகளைப் பற்றியும், குறிப்பாக வைஜயந்தி மற்றும் வனமாலையைப் பற்றிய கட்டுரை நோக்கவும்
Top
விளக்கம்
4 - க்ரீ கண்ட - இது 'தாழ்க் கண்' அதாவது 'வெறுப்பு' என்று பொருள்படும். ஆனால், இவ்விடத்தில், அத்தகைய பொருள் ஒத்துவராது. எனவே, 'கடைக்கண்' என்று பொருள் கொள்ளப்பட்டது. தியாகராஜரின் பல பாடல்களில், 'க்ரீ கண்ட' மற்றும் 'க்ரே கண்ட' என்ற சொற்கள், 'தாழ்க்கண்' (வெறுப்பு) அல்லது 'கடைக்கண்' (கருணை) என்ற பொருள்களில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6 - ப்3ரோசி - ஏசி - ஜூசுசு - சில புத்தகங்களில், இதற்கு, 'படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய முத்தொழில்களை மும்மூர்த்திகளுக்கு அளித்தாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்வதற்கான சொற்கள் ஏதும் இந்த சரணத்தில் இல்லை.
Top
6 - ப்3ரோசி - ஏசி - ஜூசுசு - இராமனே, வெவ்வேறு உருவங்களில், தன்னைக் காப்பதும், ஏய்ப்பதும், பார்த்துக்கொண்டிருப்பதும் என்று தியாகராஜர் கூறுகின்றார்.
ஆயிரம் முறை - ஐயத்திற்கிடமின்றி
நம்பிக்கை - 'வல்லமை' அல்லது 'உண்மை' என்றும் கொள்ளலாம்
களங்கமற்ற - இறைவனைக் குறிக்கும்
Top
Updated on 09 Oct 2010
No comments:
Post a Comment