Friday, October 8, 2010

தியாகராஜ கிருதி - இங்க யோசனைதே - ராகம் க4ண்ட - Inka Yochanaite - Raga Ghanta

பல்லவி
இங்க யோசனைதே நேனேமி ஸேயுது3ரா

அனுபல்லவி
பங்கஜாக்ஷ நீவண்டி பரம த3யா நிதி4கி (இ)

சரணம்
சரணம் 1
தீர ரானி போராயெ ஸாரெகு மேனு ஸக3மாயெ
நேரமேமோ தெலியதா3யெ ஆரடி3கிக தாளதா3யெ (இ)


சரணம் 2
ஸ்ரீ பதி என்னிகலு லேனி 1தாப-த்ரயமுலனலஸிதி கானி
பாப க3ணமுலன்னியு 2புருஷுனி ரூபமை பா3தி4ஞ்சக3 நீ(கி)


சரணம் 3
வாக3தி4ப வந்த்3ய நின்னே கானியொருல நம்மனி
த்யாக3ராஜுனி பைனி 3பா3கா3யெ ஸ்ரீ ராம நீ(கி)


பொருள் - சுருக்கம்
  • கமலக்கண்ணா!
  • மா மணாளா!
  • நாமகள் மணாளன் வந்திப்போனே!
  • இராமா!

  • இன்னும் யோசனையானால் நானென்ன செய்வேனய்யா?

    • தீராத போராகியது எவ்வமயமும்;
    • மேனி (இளைத்துப்) பகுதியாகியது;
    • குற்றமென்னவோ தெரியாதாகியது;
    • இழிவுக்கு இனி பொறுக்க இயலாதாகியது;

    • எண்ணிறந்த முவ்வெம்மைகளினால் களைத்தேன்;
    • பாவங்கள் யாவும் மனிதனின் உருவாகி (என்னைப்) பாதிக்க,

    • உன்னையன்றி மற்றவரை நம்பாத தியாகராசனின் மீது நல்லாயிருக்கய்யா!


  • உன்னைப் போன்ற பெருங் கருணைக் கடலினுக்கு இன்னும் யோசனையானால் நானென்ன செய்வேனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இங்க/ யோசன/-ஐதே/ நேனு/-ஏமி/ ஸேயுது3ரா/
இன்னும்/ யோசனை/ ஆனால்/ நான்/ என்ன/ செய்வேனய்யா/


அனுபல்லவி
பங்கஜ/-அக்ஷ/ நீவு/-அண்டி/ பரம/ த3யா/ நிதி4கி/ (இ)
கமல/ கண்ணா/ உன்னை/ போன்ற/ பெருங்/ கருணை/ கடலினுக்கு/ இன்னும்...


சரணம்
சரணம் 1
தீர ரானி/ போராயெ/ ஸாரெகு/ மேனு/ ஸக3மாயெ/
தீராத/ போராகியது/ எவ்வமயமும்/ மேனி/ (இளைத்துப்) பகுதியாகியது/

நேரமு/-ஏமோ/ தெலியதா3யெ/ ஆரடி3கி/-இக/ தாளதா3யெ/ (இ)
குற்றம்/ என்னவோ/ தெரியாதாகியது/ இழிவுக்கு/ இனி/ பொறுக்க இயலாதாகியது/


சரணம் 2
ஸ்ரீ/ பதி/ என்னிகலு லேனி/ தாப-த்ரயமுலனு/-அலஸிதி/ கானி/
மா/ மணாளா/ எண்ணிறந்த/ முவ்வெம்மைகளினால்/ களைத்தேனே/ யன்றி/

பாப க3ணமுலு/-அன்னியு/ புருஷுனி/ ரூபமை/ பா3தி4ஞ்சக3/ நீகு/-(இ)
பாவங்கள்/ யாவும்/ மனிதனின்/ உருவாகி/ (என்னைப்) பாதிக்க/ உனக்கு/ இன்னும்...


சரணம் 3
வாக்/-அதி4ப/ வந்த்3ய/ நின்னே/ கானி/-ஒருல/ நம்மனி/
நாமகள்/ மணாளன்/ வந்திப்போனே/ உன்னை/ யன்றி/ மற்றவரை/ நம்பாத/

த்யாக3ராஜுனி/ பைனி/ பா3கா3யெ/ ஸ்ரீ ராம/ நீகு/-(இ)
தியாகராசனின்/ மீது/ நல்லாயிருக்கய்யா/ ஸ்ரீ ராமா/ உனக்கு/ இன்னும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - தாப-த்ரய - முவ்வெம்மை - அத்தியாத்துமிக, ஆதிபௌதிக, ஆதிதெய்விக - முவ்வெம்மை - விளக்கம் நோக்கவும்.

லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் நாமங்களில் ஒன்று - 'தாப-த்ரயாக்3னி ஸந்தப்த ஸமாஹ்லாத3ன சந்த்3ரிகா' (357) - "உடல், உள்ள, இயற்கை காரணங்களினால் உண்டாகும் முவ்வெம்மைகள் எனும் நெருப்பில் வெந்தோரைக் குளிரச்செய்யும் தண்மதி".

Top

விளக்கம்
2 - புருஷுனி ரூபமை - மனிதனின் உருவாகி - யாரோ ஒரு மனிதன், தன்னைக் கொடுமை செய்வதனை, 'தன்னுடைய பாவங்கள்தான், மனிதனின் உருவெடுத்துத் தன்னை பாதிக்கின்றன' என்று தியாகராஜர் கூறுகின்றார். தியாகராஜரின் 'எடுல காபாடு3து3வோ' என்ற ஆஹிரி ராக கீர்த்தனையில், தனது பங்காளிகள், தன்னைக் கொடுமைப் படுத்துவதாகக் கூறுகின்றார்.

3 - பா3கா3யெ - நல்லாயிருக்கு - நையாண்டி

நாமகள் மணாளன் - அயன்

Top


Updated on 08 Oct 2010

No comments: