Monday, June 28, 2010

தியாகராஜ கிருதி - ஏமி தோ3வ - ராகம் ஸாரங்க - Emi Dova - Raga Saranga

பல்லவி
ஏமி தோ3வ பல்குமாயிகனு
நேனெந்து3 போது3 ஸ்ரீ ராம

அனுபல்லவி
1ராமதா3ஸு வலெனைதே 2ஸீதா
பா4
3மந்த3லிஞ்சுனு நீதோ தன(கேமி)

சரணம்
3ட்டி கட்டி கரமுன ஸ1ர சாபமு
பட்டி மூல 43லமுனு ராவணு தல
கொட்டி நில்வனா வேள 5த்ரி-மூர்துலு
கோரி நுதிம்பகா3-
னட்டி
வாரிகெது3ரு பல்கி ராஜுகு
பட்டியனக3 நீகு நாது3பை த3
புட்ட காரணம்பே3மி தெலிஸெ வர
போ4கி31யன த்யாக3ராஜ நுத தன(கேமி)


பொருள் - சுருக்கம்
இராமா! உயர் அரவணையோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • தனக்கு என்ன வழியெனச் சொல்வாய்; இனியும் நானெங்கு செல்வேன்?
  • இராமதாசன் போன்றானால், (உனது) மனைவி சீதை (எனக்காக) பரிந்துரைப்பாள் உன்னிடம்.
    • வரிந்து கட்டி,
    • கரத்தினில் வில்லம்பு ஏந்தி,
    • (இராவணின்) மூல பலத்தினையும், இராவணைனையும் வேரறுத்து, (களத்தினில்) நிற்கவும்,
    • அவ்வேளை, மும்மூர்த்திகளும் கோரி, துதிக்கவும்,

    • அத்தகையோனுக்கு எதிராகப் பேசி, (உன்னை) 'இளவரசே' யென்று அழைக்க,
    • உனக்கு என் மீது தயை பிறக்கக் காரணமென்ன?
    • அறிந்துகொண்டேன்;

  • தனக்கு என்ன வழியெனச் சொல்வாய்; இனியும் நானெங்கு செல்வேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/ தோ3வ/ பல்குமா/-இகனு/
என்ன/ வழி/ (என) சொல்வாய்/ இனியும்/

நேனு/-எந்து3/ போது3/ ஸ்ரீ ராம/
நான்/ எங்கு/ செல்வேன்/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
ராமதா3ஸு/ வலெனு/-ஐதே/ ஸீதா/
இராமதாசன்/ போன்று/ ஆனால்/ சீதை/

பா4ம/ மந்த3லிஞ்சுனு/ நீதோ/ தனகு/-(ஏமி)
(உனது) மனைவி/ (எனக்காக) பரிந்துரைப்பாள்/ உன்னிடம்/ தனக்கு/ என்ன...


சரணம்
3ட்டி/ கட்டி/ கரமுன/ ஸ1ர/ சாபமு/
வரிந்து/ கட்டி/ கரத்தினில்/ அம்பு/ வில்/

பட்டி/ மூல/ ப3லமுனு/ ராவணு/
ஏந்தி/ (இராவணின்) மூல/ பலத்தினையும்/ இராவணைனையும்/

தல கொட்டி/ நில்வனு/-ஆ/ வேள/ த்ரி-மூர்துலு/
வேரறுத்து/ (களத்தினில்) நிற்கவும்/ அந்த/ வேளை/ மும்மூர்த்திகளும்/

கோரி/ நுதிம்பகா3னு/
கோரி/ துதிக்கவும்/

அட்டி வாரிகி/-எது3ரு/ பல்கி/ ராஜுகு/
அத்தகையோனுக்கு/ எதிராக/ பேசி/ (உன்னை) மன்னன்/

பட்டி/-அனக3/ நீகு/ நாது3பை/ த3ய/
மகனே ('இளவரசே')/ என்று அழைக்க/ உனக்கு/ என் மீது/ தயை/

புட்ட/ காரணம்பு3/-ஏமி/ தெலிஸெ/ வர/
பிறக்க/ காரணம்/ என்ன/ அறிந்துகொண்டேன்/ உயர்/

போ4கி3/ ஸ1யன/ த்யாக3ராஜ/ நுத/ தனகு/-(ஏமி)
அரவு/ அணையோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தனக்கு/ என்ன...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மந்த3லிஞ்சுனு நீதோ - மந்த3லிஞ்சுனு.

4 - 3லமுனு - ப3லமுல.

5 - நுதிம்பகா3னட்டி - நுதிம்பக3னட்டி.

Top

மேற்கோள்கள்
1 - ராமதா3ஸு - ராமதாசர் - ஆந்திராவிலுள்ள பத்திராசலத்தினில் இராமனை வழிபட்டவர். அவர், தன்னுடைய, 'நனு ப்3ரோவமனி செப்பவே' என்ற கீர்த்தனையில், சீதையிடம், தனக்காக, கணவனிடம் பரிந்துரைக்கும்படி வேண்டுகின்றார்.

ராமதாசரின் கீர்த்தனைகள்

Top

விளக்கம்
2 - ஸீதா பா4 - உனது மனைவி சீதை - வைணவ பரம்பரையில், தொண்டன், தாயாரைத்தான் அணுகலாம். தாயார்தான், தொண்டனை, இறைவனிடம் அழைத்துச் செல்வாள். தொண்டன், நேரிடையாக, இறைவனை அணுகுதல், விரும்பப்படுவதில்லை.

ராமதாசரும், இறைவனை, தனது 'இக்ஷ்வாகு குல திலக' என்ற கீர்த்தனையில், தான், சிறையில் படும் கொடுமைகளினைத் தாளாது, வசை மொழிகின்றார். அப்பாடலை, மேற்கூறிய website-ல் நோக்கலாம்.

Top

5 - த்ரி-மூர்துலு கோரி நுதிம்பகா3 - மும்மூர்த்திகளும் உன்னைக் கோரி, துதிக்கவும். வால்மீகி ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், போர்க் களத்தில், அத்தகைய நிகழ்ச்சி ஏதும் காணப்படவில்லை.

சீதையின், 'நெருப்பு சோதனை' (அக்3னி பரீக்ஷை)யின்போது, பிரமனும், சிவனும் தோன்றி, ராமனைப் புகழ்ந்து, அவனுக்கு, தன்னுடைய அவதார காரியத்தினை நினைவூட்டுகின்றனர். அவ்வேளையும், விஷ்ணு அங்கு வருவதாக ஏதும் கூறப்படவில்லை. தியாகராஜரின் இந்த வருணனை, கற்பனையாகவோ, அல்லது, அப்படி துதிக்கப்பெறத் தகுதியுடையவன் என்ற பொருளிலோ இருக்கலாம்.

'இளவரசே' யென்று அழைக்க - மும்மூர்த்திகளும் போற்றுவோனுக்கு இஃது இழிச்சொல்லென.

Top


Updated on 28 Jun 2010

6 comments:

Rajewh said...

Thank you!
Great Seva!

i have doubt tyagarajar keertanai & ramadasar keertanai mp3 available in your blog.

V Govindan said...

Sir/Madam,
Audios of kRtis are not posted by me.
Regards,
V Govindan

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணத்தில் அட்டிவாரிகி என்பதற்கு அத்தகையோனுக்கு என்பதற்குப் பதிலாக அத்தகையோருக்கு என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இத்தகையோனுக்கு என்பது இராமனைக் குறிக்கும் என்று முன்னம் நீங்கள் கூறியுள்ளீர். அவ்வாறெனில் ’எதிராகப்பேசி” என்றால் எதிரில் நின்று பேசி என்றா அல்லது எதிர்த்துப் பேசி என்றா பொருள்.
நான் கொண்ட பொருள் -மும்மூர்த்திகளின் புகழ்ச்சியை எதிர்க்கும் வண்ணம்

In word by word meaning of caraNam for talakoTTi , instead of 'literally behead' 'literally beheaded' may be correct'
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இறைவனைக் குறிப்பிடும்போது, மரியாதைப் பன்மை பயன்படுத்தப்படுவதில்லை. தியாகராஜர் மரியாதைப் பன்மையினை இங்கு பயன்படுத்தியிருந்தாலும், மொழிபெயர்ப்பில், அதை பயன்படுத்துவது சரியாக எனக்குத் தோன்றவில்லை.

'எது3ரு பல்கு' என்பதற்கு 'ஆக்ஷேபித்தல்' என்று பொருளாகும். ஆயினும், இவ்விடத்தில் 'எதிர்த்துப் பேசி' என்பதே பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.

'தல கொட்டி' என்பது நீங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பினைக் குறிப்பிடுவதாக நம்புகின்றேன். பொதுவாக, root word தான் நான் கொடுப்பது வழக்கம்.

வணக்கம்
கோவிந்தன்.

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களின் Comment -

"திரு கோவிந்தன் அவர்களே
நான் கூறவந்தது என்னவெனில்
“ அத்தகையோர் (மும்மூர்த்திகள்) கூறிய புகழுரைகளை எதிர்க்கும் வண்ணம் நான் உன்னை மன்னன் மகன் என்று அழைக்க......”

வணக்கம்
கோவிந்தசாமி"

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'எது3ரு பல்கி' என்பது contextual ஆகும். அவர் எதனை மனதில் வைத்துக்கொண்டு இங்ஙனம் கூறினார் என நாமறியோம். அதனால், கூடியவரையில் பொதுவாகவே மொழிபெயர்த்தல் மேலாகும்.

வணக்கம்
கோவிந்தன்