Sunday, June 27, 2010

தியாகராஜ கிருதி - எந்த பா4க்3யமு - ராகம் ஸாரங்க - Enta Bhagyamu - Raga Saranga

பல்லவி
எந்த பா4க்3யமு மாபால கல்கி3திவி
1எவரீடு3 முஜ்-ஜக3முலலோ தன(கெந்த)

அனுபல்லவி
செந்த ஜேரி ஸௌஜன்யுடை3 பலிகி
சிந்த பா33 தொலகி3ஞ்சி ப்3ரோசிதிவி (எ)

சரணம்
முன்னு நீ ஸமீபமுன வெலயு
2ஸன்முனுலனெல்லனணிமாதி3 லீலலசே
தின்னகா3னு பாலனமு 3ஜேஸினட்டு
நன்னு காசிதிவி த்யாக3ராஜ நுத (எ)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • எத்தனைப் பேறுடைத்தேன்! எமது பங்கில் உண்டாகினை!
  • எவரீடு மூவுலகிலும் தனக்கு?
    • (எனது) அருகில் வந்து, இனியோனாகப் பேசி, கவலைகளை முற்றிலும் போக்கிக் காத்தனை.
    • முன்னம், உனது அண்மையில் விளங்கிய, நன்முனிவர்கள் யாவரையும், அணிமாதி திருவிளையாடல்களினால் சிறக்கப் பாதுகாத்தது போன்று, என்னையும் காத்தனை.

  • எத்தனைப் பேறுடைத்தேன்! எமது பங்கில் உண்டாகினை!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ பா4க்3யமு/ மாபால/ கல்கி3திவி/
எத்தனை/ பேறுடைத்தேன்/ எமது பங்கில்/ உண்டாகினை/

எவரு/-ஈடு3/ முஜ்-ஜக3முலலோ/ தனகு/-(எந்த)
எவர்/ ஈடு/ மூவுலகிலும்/ தனக்கு/


அனுபல்லவி
செந்த/ ஜேரி/ ஸௌஜன்யுடை3/ பலிகி/
(எனது) அருகில்/ வந்து/ இனியோனாக/ பேசி/

சிந்த/ பா33/ தொலகி3ஞ்சி/ ப்3ரோசிதிவி/ (எ)
கவலைகளை/ முற்றிலும்/ போக்கி/ காத்தனை/


சரணம்
முன்னு/ நீ/ ஸமீபமுன/ வெலயு/
முன்னம்/ உனது/ அண்மையில்/ விளங்கிய/

ஸன்முனுலனு/-எல்லனு/-அணிமா-ஆதி3/ லீலலசே/
நன்முனிவர்கள்/ யாவரையும்/ அணிமாதி/ திருவிளையாடல்களினால்/

தின்னகா3னு/ பாலனமு ஜேஸின/-அட்டு/
சிறக்க/ பாதுகாத்தது/ போன்று/

நன்னு/ காசிதிவி/ த்யாக3ராஜ/ நுத/ (எ)
என்னையும்/ காத்தனை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - எவரீடு3 - எவ்வரீடு3.

3 - ஜேஸினட்டு - ஜேஸினடு.

Top

மேற்கோள்கள்
2 - அணிமாதி3 - அணிமாதி - அணிமா ஆகிய எண்சித்திகள் - இவையாவன - 'அணிமா' - சிறுத்தல்; 'லகிமா' - இலேசாக இருத்தல்; 'பிராப்தி' - எதனையும் அடைதல்; 'பிராகாமியம்' - தடுக்கவியலாத மனவுறதி; 'மகிமா' - பெருத்தல்; 'ஈசத்துவம்' - ஆளுகை; 'வசித்துவம்' - வசியம்; 'காமவசித்துவம்' - இச்சைகளை அடக்குதல். ('கரிமா' எனப்படும் 'கனத்தல்', இவற்றுடன் ஒன்றெனக் கூறப்படும்)

2 - அணிமாதி3 லீலலசே - அணிமாதி திருவிளையாடல்களினால் - இராமன் தன்னை மனிதனாகவே கருதி நடந்துகொண்டாலும், பல நிகழ்ச்சிகளில் தனது அவதாரப் பெருமையினை வெளிப்படுத்தியுள்ளான். இவையாவன - சிவனின் வில்லினை முறித்தது, பரசுராமனை வென்றது, கரன் முதலான பதினான்காயிரம் வீரர்களை தானொருவனாக, ஒன்றரை மணி நேரத்தில் வீழ்த்தியது, ஏழு சால மரங்களை ஓரம்பினால் துளைத்தது, துந்துபியின் பெருத்த, கனத்த எலும்புக்கூட்டினை தனது கால் கட்டைவிரலினால் உதைத்தெறிந்தது - இப்படி இன்னும் பல கூறலாம்.

Top

விளக்கம்
1 - எவரீடு3 தனகு - எவரீடு தனக்கு - சில புத்தகங்களில் இதனை, இறைவனைக் குறிப்பிடுவதாக (உனக்கு எவரீடு மூவுலகத்திலும் என்று) கூறப்பட்டுள்ளது. 'தனகு' (தனக்கு) என்ற சொல்லினால், இது தியாகராஜரைத்தான் குறிக்கும். அவர், தன்னுடைய பேற்றினை வியந்து, 'தனக்கு மூவுலகத்திலும் ஈடான பேறுடைத்தவன் இல்லை' என கூறுவதாகக் கொள்வதே பொருந்தும்.

2 - அணிமாதி3 லீலலசே - அணிமாதி திருவிளையாடல்களினால் - சில புத்தகங்களில், இதற்கு 'அணிமாதி சித்திகளை முனிவர்களுக்கு அருளிக் காத்தனை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இறைவன், அணிமாதி சித்திகளுக்கு மேற்பட்டவனானாலும், 'லீல' (திருவிளையாடல்) என்ற சொல்லுக்கு, இறைவனைக் குறிப்பதாக மட்டுமே பொருள் கொள்ள இயலும். 'லீலலசே' என்பதற்கு பதிலாக, 'சித்3து4லசே' (சித்திகளினால்) என்றிருந்தால், ஒருவேளை, இவை முனிவர்களுக்கு அருளப்பட்டதாகக் கொள்ளலாம்.

Top


Updated on 27 Jun 2010

No comments: