Wednesday, April 14, 2010

தியாகாராஜ கிருதி - வாடே3ரா தை3வமு - ராகம் பந்துவராளி - Vaaderaa Daivamu - Raga Pantuvarali

பல்லவி
1வாடே3ரா தை3வமு மனஸா

அனுபல்லவி
ஆடி3ன மாடலு தப்பட3னுசுனு
2ஆ-சந்த்3ரார்கமுக3 கீர்தி கலிகி3ன (வா)

சரணம்
சரணம் 1
33ண்டி3 ரக்கஸுல மத3மணசனு
ஆக2ண்ட3லாதி3 ஸுர கோட்லனு பூ4
மண்ட3ல ஸுஜனுல பாலிம்பனு
கோத3ண்ட3 பாணி ரூபமுதோ வெலஸின (வா)


சரணம் 2
தா3ரி தெலிய லேனி அக்3ஞுலகு ப4
நீரதி4 தா3டி மோக்ஷமந்து3டகு
4நீரஜாரி 54ருடு3பதே3ஸி1ஞ்சே
தாரக நாமமுதோனு வெலஸின (வா)


சரணம் 3
6தா4த்ரு2 வினுதுடை3 7த்யாக3ராஜுனி
சேத பூஜலந்தி3 பா3கு33
ப்ரத்3யோதனான்வயமுனனு ஜனிஞ்சி
ஸீதா பதியனி பேரு கலிகி3ன (வா)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • அவனே தெய்வமடா;
  • சொன்ன சொல் தவறானென, சந்திர சூரியர் தோன்றிய நாள் முதலாக புகழ் படைத்த அவனே தெய்வமடா;

    • எண்ணற்ற அரக்கர்களின் செருக்கினையொடுக்கவும்,
    • இந்திரன் முதலாக வானோர் சமூகத்தினையும், புவி மண்டலத்திலுள்ள நன்மக்களையும் பேணுதற்கும்,

  • கோதண்டபாணி உருவத்துடன் திகழும் அவனே தெய்வமடா;

    • நெறி தெரியாத அறிவிலிகளுக்கு, பிறவிக் கடலினைக் கடந்து மோக்கமுறுதற்கு,
    • கமலப் பகையினை அணிவோன் உபதேசிக்கும்,

  • (ராம எனும்) தாரக நாமத்துடன் திகழும் அவனே தெய்வமடா

    • பிரமனால் போற்றப் பெற்றோனாகிய,
    • தியாகராசனின் கைகளினால் வழிபாட்டினைப் பெற்று,
    • சிறக்க பரிதி குலத்தில் பிறந்து,

  • 'சீதாபதி' யென பெயர் படைத்த அவனே தெய்வமடா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாடே3ரா/ தை3வமு/ மனஸா/
அவனேடா/ தெய்வம்/ மனமே/


அனுபல்லவி
ஆடி3ன/ மாடலு/ தப்படு3/-அனுசுனு/
சொன்ன/ சொல்/ தவறான்/ என/

ஆ-சந்த்3ர/-அர்கமுக3/ கீர்தி/ கலிகி3ன/ (வா)
சந்திர/ சூரியர் தோன்றிய நாள் முதலாக/ புகழ்/ படைத்த/ அவனே...


சரணம்
சரணம் 1
3ண்டி3/ ரக்கஸுல/ மத3மு/-அணசனு/
எண்ணற்ற/ அரக்கர்களின்/ செருக்கினை/ ஒடுக்கவும்/

ஆக2ண்ட3ல/-ஆதி3/ ஸுர/ கோட்லனு/ பூ4/
இந்திரன்/ முதலாக/ வானோர்/ சமூகத்தினையும்/ புவி/

மண்ட3ல/ ஸுஜனுல/ பாலிம்பனு/
மண்டலத்திலுள்ள/ நன்மக்களையும்/ பேணுதற்கும்/

கோத3ண்ட3/ பாணி/ ரூபமுதோ/ வெலஸின/ (வா)
கோதண்ட/ பாணி/ உருவத்துடன்/ திகழும்/ அவனே...


சரணம் 2
தா3ரி/ தெலிய லேனி/ அக்3ஞுலகு/ ப4வ/
நெறி/ தெரியாத/ அறிவிலிகளுக்கு/ பிறவி/

நீரதி4/ தா3டி/ மோக்ஷமு/-அந்து3டகு/
கடலினை/ கடந்து/ மோக்கம்/ உறுதற்கு/

நீரஜ/-அரி/ த4ருடு3/-உபதே3ஸி1ஞ்சே/
கமல/ பகையினை (பிறை)/ அணிவோன்/ உபதேசிக்கும்/

தாரக/ நாமமுதோனு/ வெலஸின/ (வா)
(ராம எனும்) தாரக/ நாமத்துடன்/ திகழும்/ அவனே...


சரணம் 3
தா4த்ரு2/ வினுதுடை3ன/ த்யாக3ராஜுனி/
பிரமனால்/ போற்றப் பெற்றோனாகிய/ தியாகராசனின்/

சேத/ பூஜலு/-அந்தி3/ பா3கு33/
கைகளினால்/ வழிபாட்டினை/ பெற்று/ சிறக்க/

ப்ரத்3யோதன/-அன்வயமுனனு/ ஜனிஞ்சி/
பரிதி/ குலத்தில்/ பிறந்து/

ஸீதா/ பதி/-அனி/ பேரு/ கலிகி3ன/ (வா)
'சீதா/ பதி/' யென/ பெயர்/ படைத்த/ அவனே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம், 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - வாடே3ரா தை3வமு - வாடே3ரா நா தை3வமு.

Top

மேற்கோள்கள்
4 - நீரஜாரி - கமலப் பகை - மதி. மதி, ஏன் 'கமலத்தின் பகை'யென கருதப்படுகின்றது என்பதற்கு கமலத்தைப் பற்றிய எகிப்து நாட்டு பழங்கதை நோக்கவும்.

5 - உபதே3ஸி1ஞ்சே - உபதேசிக்கும் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலினைத் தாண்டுவிப்பது. அதனால் அதனை 'தாரக' (படகு - கடத்துவிப்பது) என்று கூறப்படும். காசியில் இறப்போரின் காதுகளில், சிவன், 'ராம' எனும் தாரக நாமத்தினை உபதேசிப்பதாக, முக்திகா உபநிடதத்தினில் கூறப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
2 - ஆ-சந்த்3ரார்கமுக3 - சந்திர சூரியர் தோன்றிய நாள் முதலாக - சந்திர சூரியர் உள்ளவரைக்கும் என்றும் கொள்ளலாம்.

3 - 3ண்டி3 ரக்கஸுல - 'த3ண்டி3' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'நிறைய' என்று பொருள். ஆனால், தண்டக வனத்திலிருந்த அரக்கர்கர்களை ராமன் கொன்றதனால், 'தண்டக வனம்' என்பதனைச் சுருக்கி, 'தண்டி' என்று தியாகராஜர் பயன்படுத்தியுள்ளாரா என ஐயம் எழுகின்றது.

6 - தா4த்ரு2 வினுதுடை3 - பிரமனால் போற்றப் பெற்றோனாகிய - ராமனைக் குறிக்கும்

7 - த்யாக3ராஜுனி - தியாகராசன் - இங்கு சிவனைக் குறிக்கும்

Top

நெறி - பிறவிக் கடலினை கடக்கும் நெறி
மோக்கம் - வீடு
கமலப் பகையினை அணிவோன் - சிவன்

Top


Updated on 14 Apr 2010

No comments: