Wednesday, March 17, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ஸ்ரீ ராம - ராகம் வராளி - Sri Rama Sri Rama - Raga Varali

பல்லவி
ஸ்ரீ ராம ஸ்ரீ ராம 1ஜித ராம3த காம

சரணம்
சரணம் 1
தே3வயேமி தோ3வ நன்னு ப்3ரோவ வேக3 ராவா (ஸ்ரீ)


சரணம் 2
பா3ல ப4க்த பால ஸு-கு3ண ஸீ1ல தாள ஜால (ஸ்ரீ)


சரணம் 3
தீ4ர ஸு-ஸ1ரீர நிர்விகாரயேலுகோரா (ஸ்ரீ)


சரணம் 4
ஆத3ரிஞ்ச ராதா3 நம்ம லேதா3 மரியாதா3 (ஸ்ரீ)


சரணம் 5
2ஆரு ரிபுல போரு தீர்சு வாரு எவருன்னாரு (ஸ்ரீ)


சரணம் 6
ராய மனஸு ராயா முனி கே3ய தாளதா3யெ (ஸ்ரீ)


சரணம் 7
வாது3 காராது3 இக மீத33தி லேது3 (ஸ்ரீ)


சரணம் 8
சிந்த தீர்சுடகெந்த ஸேவிஞ்ச ஸ்ரீ காந்த (ஸ்ரீ)


சரணம் 9
ஸ்ரீ நாதா2வனி லோன இட்லு கான 3நிஜமேனா (ஸ்ரீ)


சரணம் 10
பத்3து3 தப்ப வத்3து3யே ப்ரொத்3து3 மரவ வத்3து3 (ஸ்ரீ)


சரணம் 11
4பி3ன்ன ப்3ரோவு நன்னு ப்3ரோவகுன்ன விட3னன்ன (ஸ்ரீ)


சரணம் 12
ஸ்ரீ ஜானகீ ராஜ த்யாக3ராஜ க்ரு2த பூஜ (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • இராமா! பரசுராமனை வென்றவனே! இச்சைகளற்றோனே!
  • தேவா!
  • இளைஞனே! தொண்டரைக் காப்போனே! நற்குணசீலனே!
  • தீரனே! நல்லுடலோனே! மாற்றமற்றோனே!
  • மன்னா! முனிவரால் பாடப்பெற்றோனே!
  • மா மணாளா!
  • இலக்குமி மணாளா!
  • தந்தையே!
  • சானகி மணாளா! தியாகராசன் வழிபாடு செய்யும் இராமா!

    • என்ன வழியெனக்கு? என்னைக் காக்க விரைவில் வாராயோ?
    • தாளவியலேன்;
    • என்னையாள்வாயய்யா;
    • ஆதரிக்கலாகாதா? நம்பவில்லையா? இது மரியாதையா?
    • உட்பகைவர் அறுவரின் போரினைத் தீர்ப்பவர் எவருளர்?
    • மனம் கல்லா? தாளவியலாதாயிற்று;
    • (என்னுடன்) வாது செய்யலாகாது; இனிமேல் கதியில்லை;
    • கவலை தீர்ப்பதற்கு எவ்வளவு சேவிப்பதுன்னை?
    • புவியில் இப்படிக் காணேன்; இது உண்மையா?
    • சொல் தவறாதே; எவ்வமயமும் என்னை மறவாதே;
    • விரைவில் காப்பாயென்னை; காவாதிருந்தால் வீடேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஸ்ரீ ராம/ ஜித/ ராம/ க3த/ காம/
ஸ்ரீ ராமா/ ஸ்ரீ ராமா/ வென்றவனே/ பரசுராமனை/ அற்றோனே/ இச்சைகள்/


சரணம்
சரணம் 1
தே3வ/-ஏமி/ தோ3வ/ நன்னு/ ப்3ரோவ/ வேக3/ ராவா/ (ஸ்ரீ)
தேவா/ என்ன/ வழி (எனக்கு)/ என்னை/ காக்க/ விரைவில்/ வாராயோ/


சரணம் 2
பா3ல/ ப4க்த/ பால/ ஸு-கு3ண/ ஸீ1ல/ தாள/ ஜால/ (ஸ்ரீ)
இளைஞனே/ தொண்டரை/ காப்போனே/ நற்குண/ சீலனே/ தாள/ இயலேன்/


சரணம் 3
தீ4ர/ ஸு-ஸ1ரீர/ நிர்விகார/-ஏலுகோரா/ (ஸ்ரீ)
தீரனே/ நல்லுடலோனே/ மாற்றமற்றோனே/ (என்னை) ஆள்வாயய்யா/


சரணம் 4
ஆத3ரிஞ்ச ராதா3/ நம்ம லேதா3/ மரியாதா3/ (ஸ்ரீ)
ஆதரிக்கலாகாதா/ நம்பவில்லையா/ (இது) மரியாதையா/


சரணம் 5
ஆரு/ ரிபுல/ போரு/ தீர்சு வாரு/ எவரு/-உன்னாரு/ (ஸ்ரீ)
ஆறு/ (உட்) பகைவரின்/ போரினை/ தீர்ப்பவர்/ எவர்/ உளர்/


சரணம் 6
ராய/ மனஸு/ ராயா/ முனி/ கே3ய/ தாளது3/-ஆயெ/ (ஸ்ரீ)
மன்னா/ மனம்/ கல்லா/ முனிவரால்/ பாடப்பெற்றோனே/ தாள இயலாது/ ஆயிற்று/


சரணம் 7
வாது3/ காராது3/ இக/ மீத3/ க3தி/ லேது3/ (ஸ்ரீ)
(என்னுடன்) வாது/ செய்யலாகாது/ இனி/ மேல்/ கதி/ இல்லை/


சரணம் 8
சிந்த/ தீர்சுடகு/-எந்த/ ஸேவிஞ்ச/ ஸ்ரீ/ காந்த/ (ஸ்ரீ)
கவலை/ தீர்ப்பதற்கு/ எவ்வளவு/ சேவிப்பது (உன்னை)/ மா/ மணாளா/


சரணம் 9
ஸ்ரீ/ நாத2/-அவனி லோன/ இட்லு/ கான/ நிஜமேனா/ (ஸ்ரீ)
இலக்குமி/ மணாளா/ புவியில்/ இப்படி/ காணேன்/ (இது) உண்மையா/


சரணம் 10
பத்3து3/ தப்ப வத்3து3/-ஏ ப்ரொத்3து3/ மரவ வத்3து3/ (ஸ்ரீ)
சொல்/ தவறாதே/ எவ்வமயமும்/ (என்னை) மறவாதே/


சரணம் 11
பி3ன்ன/ ப்3ரோவு/ நன்னு/ ப்3ரோவக/-உன்ன/ விட3னு/-அன்ன/ (ஸ்ரீ)
விரைவில்/ காப்பாய்/ என்னை/ காவாது/ இருந்தால்/ வீடேன்/ தந்தையே/


சரணம் 12
ஸ்ரீ ஜானகீ/ ராஜ/ த்யாக3ராஜ/ க்ரு2த/ பூஜ/ (ஸ்ரீ)
ஸ்ரீ ஜானகி/ மணாளா/ தியாகராசன்/ செய்யும்/ வழிபாடு/ ஸ்ரீ ராமா!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜித ராம - ஜித காம : எந்த புத்தகத்தில், 'ஜித காம' என்று கொடுக்கப்பட்டுள்ளதோ, அதனில், அதற்கு, 'பரசுராமனை வென்றவன்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ஜித ராம' என்பதே ஏற்கப்பட்டது.

4 - பி3ன்ன - வின்ன : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'விரைவில்' என்று பொருளாகும். தெலுங்கு அகராதியின்படி, 'பி3ன்ன', 'வின்ன' இரண்டுக்குமே 'விரைவில்' என்று பொருளில்லை. 'பி3ன்னெ' அல்லது 'பி3ரன' என்ற சொற்களுக்கே 'விரைவில்' என்று பொருளாகும். எனவே 'பி3ன்ன' என்பதே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
2 - ஆரு ரிபுல - உட்பகைவர் அறுவர் - இச்சை, சினம், பேராசை, மயக்கம், செருக்கு, காழ்ப்பு

Top

விளக்கம்
3 - நிஜமேனா - உண்மையா? : எல்லா புத்தகங்களிலும், 'நிஜமேன' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இது, கேள்வியாதலால், இறுதி உயிரெழுத்து, நீட்டப்படவேண்டும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

மாற்றமற்றோன் - பரம்பொருளினைக் குறிக்கும்.

Top


Updated on 17 Mar 2010

No comments: