Saturday, January 23, 2010

தியாகராஜ கிருதி - கோரி வச்சிதினய்யா - ராகம் பி3லஹரி - Kori Vacchitinayya - Raga Bilahari

பல்லவி
கோரி வச்சிதினய்ய கோத3ண்ட3 பாணி 1நின்னு நே

அனுபல்லவி
2ஸூரி வினுத 3எந்தோ ஸுந்த3 4மூர்திவனுசு(கோ)

சரணம்
சரணம் 1
சித்தமுனகு நீ க்ரு2ப வித்தமனுசு சால (கோ)


சரணம் 2
மெண்டு3 கு3ணமுலசே நிண்டு3கொன்னாவடஞ்சு (கோ)


சரணம் 3
ராஜாதி4 ராஜ த்யாக3ராஜ நுத சரித (கோ)


பொருள் - சுருக்கம்
கோதண்ட பாணி! தேவர் குருவினால் போற்றப் பெற்றோனே! அரசர்க்கரசே! தியாகராசனால் போற்றப் பெற்ற சரித்தோனே!

  • கோரி வந்தேனய்யா, உன்னை நான்;

    • மிக்கு எழிலுருவத்தோனென,
    • சித்தத்திற்கு உனது கிருபையே செல்வமென,
    • அளவற்ற நற்குணங்களால் நிறையப் பெற்றுள்ளாயென,

  • மிக்கு கோரி வந்தேனய்யா, உன்னை நான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கோரி/ வச்சிதினி/-அய்ய/ கோத3ண்ட3/ பாணி/ நின்னு/ நே/
கோரி/ வந்தேன்/ அய்யா/ கோதண்ட/ பாணி/ உன்னை/ நான்/


அனுபல்லவி
ஸூரி/ வினுத/ எந்தோ/ ஸுந்த3ர/ மூர்திவி/-அனுசு/ (கோ)
தேவர் குருவினால்/ போற்றப் பெற்றோனே/ மிக்கு/ எழில்/ உருவத்தோன்/ என/ கோரி...


சரணம்
சரணம் 1
சித்தமுனகு/ நீ/ க்ரு2ப/ வித்தமு/-அனுசு/ சால/ (கோ)
சித்தத்திற்கு/ உனது/ கிருபையே/ செல்வம்/ என/ மிக்கு/ கோரி...


சரணம் 2
மெண்டு3/ கு3ணமுலசே/ நிண்டு3கொன்னாவட/-அஞ்சு/ (கோ)
அளவற்ற/ நற்குணங்களால்/ நிறையப் பெற்றுள்ளாய்/ என/ கோரி...


சரணம் 3
ராஜ/-அதி4 ராஜ/ த்யாக3ராஜ/ நுத/ சரித/ (கோ)
அரசே/ அரசர்க்கு/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சரித்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு - நினு.

3 - எந்தோ ஸுந்த3 - எந்தோ நீவு ஸுந்த3ர.

4 - மூர்திவனுசு - மூர்திவடஞ்சு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஸூரி - இந்த சொல்லுக்கு 'முனிவர்' மற்றும் 'கற்றறிந்தோர்' என்றும் பொருளாகும். தீக்ஷிதர் கிருதியொன்றில் 'ஸூரி ஜன' என்ற சொல், 'தேவர்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல் ஒருமையிலிருப்பதனால், 'தேவர் குரு' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

தேவர் குரு - 'ப்3ரு2ஹஸ்பதி' எனப்படும் வியாழன்

Top


Updated on 23 Jan 2010

No comments: