Friday, January 22, 2010

தியாகராஜ கிருதி - கனுகொண்டினி - ராகம் பி3லஹரி - Kanukontini - Raga Bilahari

பல்லவி
1கனுகொண்டினி ஸ்ரீ ராமுனி நேடு3

அனுபல்லவி
இன குலமந்து3 இம்புகா3னு 2புட்டின
இலலோன ஸீதா நாயகுனி நேடு3 (க)

3சரணம்
4ரத லக்ஷ்மண ஸ1த்ருக்4னுலு கொலுவ
பவமான ஸுதுடு3 பாத3முல பட்ட
தீ4ருலைன ஸுக்3ரீவ ப்ரமுகு2லு
வினுதி ஸேய த்யாக3ராஜ நுதுனி நேடு3 (க)


பொருள் - சுருக்கம்
  • கண்டுகொண்டேன், இராமனையின்று;

  • புவியினில், பரிதி குலத்தினில், இனிதாகப் பிறந்த சீதை மணாளனை, இன்று கண்டுகொண்டேன், இராமனை;

    • பரதன், இலக்குவன், சத்துருக்கினன் ஆகியோர் சேவை செய்ய,
    • வாயு மைந்தன் திருவடிகளைப் பற்ற,
    • தீரர்களான சுக்கிரீவன் முதலிய தலைவர்கள் போற்றி செய்ய,

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனை, இன்று கண்டுகொண்டேன், இராமனை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனுகொண்டினி/ ஸ்ரீ ராமுனி/ நேடு3/
கண்டுகொண்டேன்/ ஸ்ரீ ராமனை/ இன்று/


அனுபல்லவி
இன/ குலமு-அந்து3/ இம்புகா3னு/ புட்டின/
பரிதி/ குலத்தினில்/ இனிதாக/ பிறந்த/

இலலோன/ ஸீதா/ நாயகுனி/ நேடு3/ (க)
புவியினில்/ சீதை/ மணாளனை/ இன்று/ கண்டுகொண்டேன்...


சரணம்
4ரத/ லக்ஷ்மண/ ஸ1த்ருக்4னுலு/ கொலுவ/
பரதன்/ இலக்குவன்/ சத்துருக்கினன் ஆகியோர்/ சேவை செய்ய/

பவமான/ ஸுதுடு3/ பாத3முல/ பட்ட/
வாயு/ மைந்தன்/ திருவடிகளை/ பற்ற/

தீ4ருலைன/ ஸுக்3ரீவ/ ப்ரமுகு2லு/
தீரர்களான/ சுக்கிரீவன்/ முதலிய தலைவர்கள்/

வினுதி/ ஸேய/ த்யாக3ராஜ/ நுதுனி/ நேடு3/ (க)
போற்றி/ செய்ய/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ இன்று/ கண்டுகொண்டேன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கனுகொண்டினி ஸ்ரீ ராமுனி நேடு3 - கனுகொண்டினி ஸ்ரீ ராமுனி நேடு3 கனுலார நா காமிதம்பு3 தீர.

2 - புட்டின - புட்டி : இவ்விடத்தில் 'புட்டின' என்பதே பொருந்தும். அன்றி, 'புட்டி' என்ற சொல் சரியானால், 'நாயகுனி' என்பதற்கு பதிலாக 'நாயகுடை3ன' என்றிருக்கவேண்டும். அன்றேல் அனுபல்லவியின் பொருள் முழுமை பெறாது - அனுபல்லவியினை பல்லவியுடன் சரிவர இணைக்கவும் முடியாது.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - சரணம் - ஒரு புத்தகத்தில் கீழ்க்கண்ட மாற்று (alternative) சரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாற்று சரணம் மற்ற புத்தகங்களில் காணப்படவில்லை -

4ரத லக்ஷ்மண ஸ1த்ருக்4னானிலஜ
பா4ஸ்கராத்மஜாஜ தனயாது3லதோ
4ரணீஸு1லு விபீ4ஷணுடு3 கொலுவ
தத்வமஸியனுசு த்யாக3ராஜு பாட3 (க)



பரதன், இலக்குவன், சத்துருக்கினன், வாயு மைந்தன் (அனுமன்),
பரிதி மைந்தன் (சுக்கிரீவன்), பிரமன் மைந்தன் (ஜாம்பவான்) ஆகியோருடன்
புவி ஆள்வோர், விபீடணன் சேவை செய்ய,
'தத்-த்வம்-அஸி' என தியாகராஜன் பாட, கண்டுகொண்டேன்...

Top


4ரத/ லக்ஷ்மண/ ஸ1த்ருக்4ன/-அனிலஜ/
பரதன்/ இலக்குவன்/ சத்துருக்கினன்/ வாயு/ மைந்தன் (அனுமன்)/

பா4ஸ்கர/-ஆத்மஜ/-அஜ/ தனய/-ஆது3லதோ/
பரிதி/ மைந்தன் (சுக்கிரீவன்)/ பிரமன்/ மைந்தன் (ஜாம்பவான்)/ ஆகியோருடன்/

4ரணீ/-ஈஸு1லு/ விபீ4ஷணுடு3/ கொலுவ/
புவி/ ஆள்வோர்/ விபீடணன்/ சேவை செய்ய/

தத்வமஸி/-அனுசு/ த்யாக3ராஜு/ பாட3/ (க)
தத்-த்வம்-அஸி/ என/ தியாகராஜன்/ பாட/ கண்டுகொண்டேன்...

Top


'தத்-த்வம்-அஸி என தியாகராசன் பாட' என்ற சொற்கள் ஐயத்திற்கிடமானவை. 'தத்-த்வம்-அஸி' என்பது ஒரு மஹா வாக்கியமாகும். அது, பரமான்மாவுக்கும், சீவான்மாவுக்கும் உள்ள தொடர்பினை, ஆசான் சீடனுக்குப் புகட்டுவதாகும். அங்ஙனனம், ஆசான் மூலம் அறிந்தகொண்ட சீடன், அதனை நேரிடையாக உணர்ந்தபின் (aparoksha jnAna), கூறும் சொற்களாவன - 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நான் பிரமமே) அல்லது 'ப்3ரஹ்மைவாஹம்' (பிரமமே நான்) அல்லது 'ஸோஹம்' (நான் அவனே) அல்லது 'ஹம்ஸ' (அவனே நான்) ஆகிய மஹா வாக்கியங்களாகும். பின்கூறப்பட்ட மஹா வாக்கியங்கள் ('ப்3ரஹ்மாஸ்மி' முதலானவை) மந்திரமாகக் கூட செபிக்கப்படுவதுண்டு. இவற்றினை உருவேற்றி, அங்ஙனமே ஆகுதலுக்கு 'ப்4ரமர கீட ந்யாயம்' (குளவி, தன் இனமில்லாத புழுக்களைக் கொணர்ந்து, அவற்றினைக் கொட்டிக் கொட்டி, தன் இனமாக்குதல் போன்று) என்று கூறப்படும்.

எனவே, இந்த மாற்று சரணம், தியாகராஜரின் முத்திரையை உபயோகித்து, திணிக்கப்பட்டதாக கருதவதற்கு இடமிருக்கின்றது.

Top


Updated on 22 Jan 2010

No comments: