ஸ்ரீ ரகு4வர கருணாகர நீ பத3
சிந்தனமே ஜீவனமு
அனுபல்லவி
வாரண ரக்ஷக ப4க்த ஜனாக4
நிவாரண ஸன்-ம்ரு2து3 பா4ஷண ஸத்3-கு3ண (ஸ்ரீ)
சரணம்
சரணம் 1
மார மார நுத நா மனவினி
வினுமா ரமா ரமண மரவகுரா
ஸுகுமார மா ரஸனமுன நீ நாமமு
மாரு மாரு பல்கனு த3ய ஸேயுமு (ஸ்ரீ)
சரணம் 2
வாரி வாரி மஞ்சிகி தகி3னட்டு
வாரி வாரி பா4க்3யமுலீவா
தே3வாரி வாரிதா3னில 1ஸ1ம்ப3ர
ஜீவாரி வாரிஜாஸன ஜனக ஹரே (ஸ்ரீ)
சரணம் 3
ராஜ ராஜ வந்தி3த பத3 யுக3 தி3ன
ராஜ ராஜ நயன பாலிதாமர
ராஜ ராஜ பூஜித ஸ்ரீ த்யாக3ராஜ
ராஜ ராக4வ நனு ப்3ரோவுமு (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- இரகுவரா! கருணாகரா!
- கரியைக் காத்தோனே! தொண்டர்களின் பாவங்களைக் களைவோனே! மென் சொல்லோனே! நற்குணத்தோனே!
- மாரனை எரித்தோனால் போற்றப் பெற்றோனே! இரமை மணாளா! சுகுமாரா!
- தேவர் பகைவரெனும் முகிலினை விரட்டும் புயலே! சம்பரனின் உயிர்ப் பகைவனையும் மலரோனையும் ஈன்ற அரியே!
- பேரரசர்கள் வந்திக்கும் திருவடி இணையோனே! பகலவன், மதி கண்களோனே! அமரர் தலைவனைக் காத்தோனே! அரசர்களால் தொழப்பெற்றோனே! தியாகராசனின் தலைவா! இராகவா!
- உனது திருவடிச் சிந்தனையே பிழைப்பு;
- எனது வேண்டுதலைக் கேளுமய்யா;
- என்னை மறவாதீருமய்யா;
- எனது நாவினில் உனது நாமம் திரும்பத் திரும்ப உரைக்க தயை புரிவாயய்யா;
- அவரவர்கள் நற்செயலுக் கேற்றவாறு அவரவர்களின் நற்பயனருள்வதில்லையோ?
- என்னைக் காப்பாய்.
- உனது திருவடிச் சிந்தனையே பிழைப்பு;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ கருணாகர/ நீ/ பத3/
ஸ்ரீ ரகுவரா/ கருணாகரா/ உனது/ திருவடி/
சிந்தனமே/ ஜீவனமு/
சிந்தனையே/ பிழைப்பு/
அனுபல்லவி
வாரண/ ரக்ஷக/ ப4க்த ஜன/-அக4/
கரியை/ காத்தோனே/ தொண்டர்களின்/ பாவங்களை/
நிவாரண/ ஸன்-ம்ரு2து3/ பா4ஷண/ ஸத்3-கு3ண/ (ஸ்ரீ)
களைவோனே/ மென்/ சொல்லோனே/ நற்குணத்தோனே/
சரணம்
சரணம் 1
மார/ மார/ நுத/ நா/ மனவினி/
மாரனை/ எரித்தோனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ வேண்டுதலை/
வினுமா/ ரமா/ ரமண/ மரவகுரா/
கேளுமய்யா/ இரமை/ மணாளா/ (என்னை) மறவாதீருமய்யா/
ஸுகுமார/ மா/ ரஸனமுன/ நீ/ நாமமு/
சுகுமாரா/ எனது/ நாவினில்/ உனது/ நாமம்/
மாரு/ மாரு/ பல்கனு/ த3ய/ ஸேயுமு/ (ஸ்ரீ)
திரும்ப/ திரும்ப/ உரைக்க/ தயை/ புரிவாயய்யா/
சரணம் 2
வாரி வாரி/ மஞ்சிகி/ தகி3னட்டு/
அவரவர்கள்/ நற்செயலுக்கு/ ஏற்றவாறு/
வாரி வாரி/ பா4க்3யமுலு/-ஈவா/
அவரவர்களின்/ நற்பயன்/ அருள்வதில்லையோ/
தே3வ/-அரி/ வாரித3/-அனில/ ஸ1ம்ப3ர/
தேவர்/ பகைவரெனும்/ முகிலினை/ (விரட்டும்) புயலே/ சம்பரனின்/
ஜீவ/-அரி/ வாரிஜ-ஆஸன/ ஜனக/ ஹரே/ (ஸ்ரீ)
உயிர்/ பகைவனையும்/ மலரோனையும்/ ஈன்ற/ அரியே/
சரணம் 3
ராஜ ராஜ/ வந்தி3த/ பத3/ யுக3/ தி3ன ராஜ/
பேரரசர்கள்/ வந்திக்கும்/ திருவடி/ இணையோனே/ பகலவன்/
ராஜ/ நயன/ பாலித/-அமர/ ராஜ/
மதி/ கண்களோனே/ காத்தோனே/ அமரர்/ தலைவனை/
ராஜ/ பூஜித/ ஸ்ரீ த்யாக3ராஜ/
அரசர்களால்/ தொழப்பெற்றோனே/ ஸ்ரீ தியாகராசனின்/
ராஜ/ ராக4வ/ நனு/ ப்3ரோவுமு/ (ஸ்ரீ)
தலைவா/ இராகவா/ என்னை/ காப்பாய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸ1ம்ப3ர ஜீவாரி - சம்பரனின் உயிர்ப் பகைவன் - காமனின் மறுபிறப்பு எனப்படும் பிரத்தியும்நன் - கண்ணனின் மகன்
விளக்கம்
இப்பாடல் சில புத்தகங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
மாரனை எரித்தோன் - சிவன்
மலரோன் - பிரமன்
அமரர் தலைவன் - இந்திரன்
Top
Updated on 21 Dec 2009
No comments:
Post a Comment