Sunday, December 20, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ துளஸம்ம - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Sri Tulasamma - Raga Deva Gandhari

பல்லவி
ஸ்ரீ துளஸம்ம மாயிண்ட நெலகொனவம்ம
ஈ மஹினி நீ ஸமானமெவரம்ம ப3ங்கா3ரு பொ3ம்ம

சரணம்
சரணம் 1
1கரகு3 ஸுவர்ணபு ஸொம்முலு பெட்டி
ஸரிகெ3 சீர முத்3து3 குரியக3 கட்டி
கருண ஜூசி ஸிருலனு 2ஒடி3 கட்டி
வரது3னி கரமுனனு பட்டி (ஸ்ரீ)


சரணம் 2
உரமுன முத்யபு ஸருலஸியாட3
ஸுர தருணுலு நின்னு கனி கொனியாட3
வர முனுலஷ்ட தி3கீ3ஸு1லு வேட3
வரது3டு3 நின்னு ப்ரேம ஜூட3 (ஸ்ரீ)


சரணம் 3
3மருவக பாரிஜாத ஸரோஜ
குருவக வகுள ஸுக3ந்த4 ராஜ
வர ஸுமமுலசே த்யாக3ராஜ
4வரதே3 நினு பூஜ ஸேது (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
அம்மா துளசி! பொற்பதுமையே! தியாகராசனுக்கு அருள்பவளே!

  • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;
  • இப்புவியினில் உனக்கீடு எவரம்மா?

    • உருக்கிய தங்க நகைகளணிந்து,
    • சரிகை சேலையினை எழில் வழியக் கட்டி,
    • கருணை கூர்ந்து, சீர் சிறப்புகளினை தலைப்பினில் முடிந்து,
    • வரதனைக் கைப்பற்றி,

  • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;

    • மார்பினில் முத்துச் சரங்கள் அசைந்தாட,
    • வான்மடந்தையர் உன்னைக் கண்டு புகழ்பாட,
    • உயர் முனிவர்களும், எண்டிசைப்பாலரும் வேண்ட,
    • வரதன் உன்னைக் காதலுடன் நோக்க,

  • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;

    • மருவகம், பவளமல்லி, தாமரை, மருதாணி, மகுலம், சம்பங்கி, ஆகிய தூய மலர்கொடு, உன்னைத் தொழுவேன்;

  • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ துளஸம்ம/ மா/-இண்ட/ நெலகொனு/-அம்ம/
ஸ்ரீ துளசி அம்மா/ எமது/ இல்லத்தினில்/ நிலை பெறுவாய்/ அம்மா/

ஈ/ மஹினி/ நீ/ ஸமானமு/-எவரு/-அம்ம/ ப3ங்கா3ரு/ பொ3ம்ம/
இந்த/ புவியினில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ பொன்/ பதுமையே/


சரணம்
சரணம் 1
கரகு3/ ஸுவர்ணபு/ ஸொம்முலு/ பெட்டி/
உருக்கிய/ தங்க/ நகைகள்/ அணிந்து/

ஸரிகெ3/ சீர/ முத்3து3/ குரியக3/ கட்டி/
சரிகை/ சேலையினை/ எழில்/ வழிய/ கட்டி/

கருண/ ஜூசி/ ஸிருலனு/ ஒடி3/ கட்டி/
கருணை/ கூர்ந்து/ சீர் சிறப்புகளினை/ தலைப்பினில்/ முடிந்து/

வரது3னி/ கரமுனனு/ பட்டி/ (ஸ்ரீ)
வரதனை/ கை/ பற்றி/ அம்மா துளசி...


சரணம் 2
உரமுன/ முத்யபு/ ஸருலு/-அஸியாட3/
மார்பினில்/ முத்து/ சரங்கள்/ அசைந்தாட/

ஸுர/ தருணுலு/ நின்னு/ கனி/ கொனியாட3/
வான்/ மடந்தையர்/ உன்னை/ கண்டு/ புகழ்பாட/

வர/ முனுலு/-அஷ்ட/ தி3க்/-ஈஸு1லு/ வேட3/
உயர்/ முனிவர்களும்/ எண்/ திசை/ பாலரும்/ வேண்ட/

வரது3டு3/ நின்னு/ ப்ரேம/ ஜூட3/ (ஸ்ரீ)
வரதன்/ உன்னை/ காதலுடன்/ நோக்க/ அம்மா துளசி...


சரணம் 3
மருவக/ பாரிஜாத/ ஸரோஜ/
மருவகம்/ பவளமல்லி/ தாமரை/

குருவக/ வகுள/ ஸுக3ந்த4 ராஜ/
மருதாணி/ மகுலம்/ சம்பங்கி/

வர/ ஸுமமுலசே/ த்யாக3ராஜ/
(ஆகிய) தூய/ மலர்கொடு/ தியாகராசனுக்கு/

வரதே3/ நினு/ பூஜ/ ஸேது/ (ஸ்ரீ)
அருள்பவளே/ உன்னை/ தொழுவேன்/ அம்மா துளசி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கரகு3 - கரகு : தெலுங்கில் இவையிரண்டும் வெவ்வேறு சொற்களாகும். இவ்விடத்தில் 'கரகு3' என்ற சொல்லே பொருந்தும்.

3 - மருவக - மரவக.

4 - வரதே3 - வரத3 : இவ்விடத்தில் 'வரதே3' என்ற சொல் அதிகம் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஒடி3 கட்டி - தலைப்பினில் முடிந்து. சுமங்கலிப் பெண்கள், தங்களுக்கு அளிக்கப்படும் கௌரவப் பொருட்களை, சேலைத் தலைப்பினில் முடிந்து எடுத்துச் செல்வது பரம்பரையான வழக்கமாகும்.

மகுலம் - மகிழம்பூ

Top


Updated on 20 Dec 2009

No comments: