மதி3லோன யோசன புட்ட லேதா3
மஹராஜ ராஜேஸ்1வரா
அனுபல்லவி
பதி3 வேஸமுலலோ ராம வேஸமு
ப3ஹு பா3க3னுசு கோரு நன்னு ப்3ரோவ (மதி3)
1சரணம்
இட்டி வேள நீது3 மட்டு ஜூபுமனி
இல்லாலு நீதோ முச்சடாட3தோ3 நா
ரட்டு நீ மனஸுகெட்டு தோசெனோ
ரக்ஷிஞ்சுடகு த்யாக3ராஜ நுத (மதி3)
பொருள் - சுருக்கம்
மன்னாதி மன்னா! மன்னர் தலைவா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உள்ளத்தினில் எண்ணம் பிறக்கவில்லையா?
- பத்து வேடங்களில், இராம வேடம் மிக்கு சிறந்ததென்று, (உன்னைக்) கோரும், என்னைக் காக்க, உள்ளத்தினில் எண்ணம் பிறக்கவில்லையா?
- இவ்வேளையுனது மட்டினைக் காட்டுவீரென, (உனது) இல்லாள் உன்னுடன் சொல்லமாட்டாளோ?
- எனது இழிவு உனதுள்ளத்திற் கெவ்விதம் தோன்றியதோ?
- இவ்வேளையுனது மட்டினைக் காட்டுவீரென, (உனது) இல்லாள் உன்னுடன் சொல்லமாட்டாளோ?
- என்னை காப்பதற்கு உள்ளத்தினில் எண்ணம் பிறக்கவில்லையா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மதி3லோன/ யோசன/ புட்ட/ லேதா3/
உள்ளத்தினில்/ எண்ணம்/ பிறக்கவில்லையா/
மஹராஜ/ ராஜ/-ஈஸ்1வரா/
மன்னாதி மன்னா/ மன்னர்/ தலைவா/
அனுபல்லவி
பதி3/ வேஸமுலலோ/ ராம/ வேஸமு/
பத்து/ வேடங்களில்/ இராம/ வேடம்/
ப3ஹு/ பா3கு3/-அனுசு/ கோரு/ நன்னு/ ப்3ரோவ/ (மதி3)
மிக்கு/ சிறந்தது/ என்று/ (உன்னைக்) கோரும்/ என்னை/ காக்க/ உள்ளத்தினில்...
சரணம்
இட்டி வேள/ நீது3/ மட்டு/ ஜூபுமு/-அனி/
இவ்வேளை/ உனது/ மட்டினை/ காட்டுவீர்/ என/
இல்லாலு/ நீதோ/ முச்சட-ஆட3தோ3/ நா/
(உனது) இல்லாள்/ உன்னுடன்/ சொல்லமாட்டாளோ/ எனது/
ரட்டு/ நீ/ மனஸுகு/-எட்டு/ தோசெனோ/
இழிவு/ உனது/ உள்ளத்திற்கு/ எவ்விதம்/ தோன்றியதோ/
ரக்ஷிஞ்சுடகு/ த்யாக3ராஜ/ நுத/ (மதி3)
(என்னை) காப்பதற்கு/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உள்ளத்தினில்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1சரணம். சில புத்தகங்களில் மாற்று சரணம், கீழ்க்கண்டாவாறு கொடுக்கப்பட்டுள்ளது -
இடடி வேள நீகெட்டு தோசுனனி
இல்லாலிதோ முச்சடாடெ3து
ரட்டு நீ மனஸுகெட்டு தோசெனோ
ரக்ஷிஞ்சுடகு த்யாக3ராஜ நுத
இந்த சரணத்தின் சொற்களில் ஏதும் கோர்வையே இல்லை. முன்னுக்குப்பின் முரண்பாடான சொற்களுடைய இந்த சரணத்திற்கு ஏதும் பொருள் கூறுவது இயலாது. தியாகராஜரின் கிருதிகள், நூறாண்டுகளுக்குள்ளேயே பெரிதும் உருக்குலைந்துள்ளன என்பதற்கு இந்த சரணம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
மட்டு - வல்லமையின் எல்லை, வரை
Top
Updated on 03 Dec 2009
1 comment:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் நீங்கள் கொடுத்துள்ள மாற்றுச்சரணம் ஒரே வேறுபாடோடு,அதாவது, முச்சடாடெ3து என்பதற்குப்பதிலாக முச்சடலாடெ3து, என்று உள்ளது. தெலுங்கில் உள்ள பொருளை என்னால் இயன்றவரை மொழிபெயர்த்துள்ளேன்.
இவ்வேளை உனக்கு எவ்வாறு தோன்றியதென்று உன் இல்லாளொடு கொஞ்சுமொழி பேசிக்கொண்டிருக்கிறாய். (என்) துன்பம் உன் மனதிற்கு எவ்வாறு தோன்றியதோ.
வணக்கம்
கோவிந்தசாமி
Post a Comment