ஆனந்த3 ஸாக3ரமீத3னி தே3ஹமு
1பூ4 பா4ரமு ராம (ப்3ரஹ்மானந்த3)
அனுபல்லவி
ஸ்ரீ நாயகாகி2ல நைக3மாஸ்1ரித
ஸங்கீ3த ஞானமனு (ப்3ரஹ்மானந்த3)
சரணம்
2ஸ்ரீ விஸ்1வ நாத2 3ஸ்ரீ காந்த விது4லு
பாவன மூர்துலுபாஸிஞ்ச லேதா3
பா4விஞ்சி ராக3 லயாது3ல
4ப4ஜியிஞ்சே ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஆ)
பொருள் - சுருக்கம்
- அனைத்து மறைகளும் சார்ந்திருக்கும் இசையின் அறிவெனும் பேரானந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
- உள்ளத்தினில் உணர்ந்து, ராகம், லயம் ஆகியவற்றினை பஜிக்கும், ஆனந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
- விசுவநாதன், இலக்குமி மணாளன், பிரமன் ஆகியோரும் (மற்ற) புனித மூர்த்திகளும் (இசையினை) வழிபட்டனரன்றோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆனந்த3/ ஸாக3ரமு/-ஈத3னி/ தே3ஹமு/
ஆனந்த/ கடலினில்/ நீந்தாத/ உடல்/
பூ4/ பா4ரமு/ ராம/ ப்3ரஹ்ம-(ஆனந்த3)/
புவிக்கு/ சுமையே/ இராமா/ பேரானந்த.../
அனுபல்லவி
ஸ்ரீ/ நாயக/-அகி2ல/ நைக3ம/-ஆஸ்1ரித/
மா/ மணாளா/ அனைத்து/ மறைகளும்/ சார்ந்திருக்கும்/
ஸங்கீ3த/ ஞானமு/-அனு/ ப்3ரஹ்ம-(ஆனந்த3)/
இசையின்/ அறிவு/ எனும்/ பேரானந்த.../
சரணம்
ஸ்ரீ விஸ்1வ நாத2/ ஸ்ரீ/ காந்த/ விது4லு/
ஸ்ரீ விசுவநாதன்/ இலக்குமி/ மணாளன்/ பிரமன் (ஆகியோரும்)/
பாவன/ மூர்துலு/-உபாஸிஞ்ச லேதா3/
(மற்ற) புனித/ மூர்த்திகளும்/ (இசையினை) வழிபட்டனரன்றோ/
பா4விஞ்சி/ ராக3/ லய/-ஆது3ல/
உள்ளத்தினில் உணர்ந்து/ ராகம்/ லயம்/ ஆகியவற்றினை/
ப4ஜியிஞ்சே/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ஆ)
பஜிக்கும்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ ஆனந்த...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூ4 பா4ரமு - பூ4மி் பா4ரமு - பூ4 பா4ரமே.
2 - விஸ்1வ நாத2 - விஸ்1வ நாதா2தி3.
4 - ப4ஜியிஞ்சே - ப4ஜியிஞ்சு.
Top
மேற்கோள்கள்
2 - ஸ்ரீ விஸ்1வ நாத2 - காசியில் சிவனின் பெயர்
2 - ஸ்ரீ விஸ்1வ நாத2 ஸ்ரீ காந்த விது4லு உபாஸிஞ்ச லேதா3 - தியாகராஜரின் 'நாதோ3பாஸன' என்ற பே3க3ட3 ராக கீர்த்தனையில், 'நாதோ3பாஸனசே ஸ1ங்கர நாராயண விது4லு வெலஸிரி' என்கிறார்.
Top
விளக்கம்
3 - ஸ்ரீ காந்த - இலக்குமி மணாளன் - மும்மூர்த்திகளிலொருவரான விஷ்ணு. அனுபல்லவியில் 'ஸ்ரீ நாயக' என்பது மும்மூர்த்திகளுக்கும் தலைவனான பரம்பொருள் நாரணனைக் குறிக்கும். ஆனால், தியாகராஜர் தனது 'நாதோ3பாஸன' என்ற பே3க3ட3 ராக கீர்த்தனையில், 'ஸ1ங்கர நாராயண விது4லு' என்று 'நாராயணனை' மும்மூர்த்திகளில் ஒருவரெனக் கூறுகின்றார்.
4 - ப4ஜியிஞ்சே - பஜிக்கும் - இச்சொல் தியாகராசரைக் குறிப்பதாகவோ அல்லது பல்லவியுடன் இணைத்தோ பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
புனித மூர்த்திகள் - நாரதர் முதலானோர்
Top
Updated on 05 Dec 2009
No comments:
Post a Comment